மேலும் அறிய

SVSP Manika Raja joined DMK: டிடிவியிடம் எவ்வளவோ சொன்னேன் கேட்கல.. திமுகவில் இணைந்தது ஏன்.? SVSP மாணிக்க ராஜா பரபரப்பு தகவல்

SVSP Manika Raja joined DMK: அமமுக கட்சியில் உள்ள  அனைவரும் டிடிவி தினகரன் மீது அதிருப்தியில் உள்ளனர் .அதிமுகவும் அமமுகவும் சட்டமன்றத் தேர்தலில் ஒன்றாக இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லையென SVSP மாணிக்க ராஜா தெரிவித்துள்ளார்.

அதிமுகவிற்கு எதிராக அமமுக

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தீவிரமாக அரசியல் செய்தார். அதே நேரம் எடப்பாடி பழனிசாமியும், டிடிவி தினகரனை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் கடந்த 2021 மற்றும் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் நேருக்கு நேர் மோதினர். இதில் பல இடங்களில் அமமுகவிற்கு அதிகளவில் வாக்குகள் கிடைத்தது. குறிப்பாக பல தொகுதிகளில் அதிமுகவின் தோல்விக்கு அமமுகவும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டது.

அதிமுகவுடன் கூட்டணி வைத்த டிடிவி

இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் இணைய மாட்டோம். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் என உறுதியாக டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். ஆனால் டெல்லி சென்ற நிலையில், பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான டிடிவி தினகரனை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டால் அதிமுக கூட்டணியில் அமமுக இணைந்தது. இந்த புதிய கூட்டணி அதிமுகவினரை உற்சாகம் அடைய செய்துள்ள நிலையில், அமமுக நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனையடுத்து அமமுகவை சேர்ந்த தென் மாவட்ட நிர்வாகிகள் கட்சி தாவும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

அமமுக நிர்வாகிகள் அதிருப்தி

இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு மிகவும் நெருக்கமானவராகவும், அமமுகவின் தேர்தல் பிரிவு செயலாளரும், தென் மண்டல அமைப்பாளரும். துணை பொதுச்செயலாளர் மாணிக்கராஜா திமுகவில் இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் திமுகவில் இணைந்த SVSP மாணிக்கராஜாவை அக்கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய SVSP மாணிக்க ராஜா, அமமுகவை கடந்த 8 ஆண்டு காலம் எந்த நோக்கத்திற்காக கடினப்பட்டு வளர்த்தோமோ அந்த இலக்கை உதறிவிட்டு  மீண்டும் பழைய நிலைக்கு டிடிவி தினகரன் கட்சியை எடுத்துச் சென்றுள்ளார் . 20 ஆண்டுகாலம் என்னுடைய நண்பர் டிடிவி தினகரன். 

எவ்வளவோ சொல்லியும் கேட்கல-  SVSP மாணிக்க ராஜா

எனவே எனது நண்பர் என்ற முறையிலும் கட்சியில் நிர்வாகி என்ற முறையிலும் அவரிடம் நான் பலமுறை அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என எடுத்துச் சொல்லியும் அவர் அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளார். இதனால் அமமுக கட்சியில் உள்ள  அனைவரும் டிடிவி தினகரன் மீது அதிருப்தியில் உள்ளனர் .அதிமுகவும் அமமுகவும் சட்டமன்றத் தேர்தலில் ஒன்றாக இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை. டி.டி.வி.தினகரன் அவரை நம்பி வந்தவர்களை ஏமாற்றி விட்டார் என SVSP மாணிக்க ராஜா தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
உத்திரமேரூரில் பரபரப்பு! உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தவெக - கைதைக் கண்டித்து திமுக எதிரெதிர் ஆர்ப்பாட்டம்!
உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தவெக - கைதைக் கண்டித்து திமுக எதிரெதிர் ஆர்ப்பாட்டம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
Kia Sorento: மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
Hyundai Creta EV: விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Embed widget