Neeya Naana: அப்ப விகடன், இப்ப விஜய் டிவி? மும்மொழிக்கொள்கை எபிசோட், வேலையை காட்டிய பாஜக?
Neeya Naana: அரசியல் அழுத்தங்கள் காரணமாக மும்மொழிக்கொள்கை தொடர்பான நீயா நானா நிகழ்ச்சியை விஜய் டிவி நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Neeya Naana: விகடன் நிறுவனத்தை தொடர்ந்து விஜய் டிவியையும் பாஜக மிரட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அப்ப விகடன்..இப்ப விஜய் டிவி?
அண்மையில் அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது தொடர்பாக, பிரதமர் பிரதமர் மோடியை விமர்சித்து வ்கடன் நிறுவனம் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அளித்த புகாரின் பேரில், விகடன் இணையதளத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் முடக்கியது. இதுபெரும் சர்ச்சையாக வெடித்தது. பல்வேறு அரசியல் கட்சிகளும் விகடன் நிறுவனத்திற்கு ஆதரவு அளித்தனர். கருத்துரிமையை பறிக்கும் செயல் என கண்டனமும் தெரிவித்தனர். இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கும் செல்ல, விகடன் இணையதள முடக்கத்தை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் தான், விஜய் டிவியும் பாஜகவால் மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீயா நானா நிகழ்ச்சியின் எபிசோட் ரத்து:
பிரதான ஊடக தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதங்களை காட்டிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா எனும் விவாத நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. அடித்தட்டு மக்களின் பிரச்னைகள் தொடங்கி, சமூக கட்டமைப்பு வரை என பல்வேறு முக்கிய பிரச்னைகள் இந்த நிகழ்ச்சியில் உணர்வுப்பூர்வமாகவும், தரவுகளுடனும் விவாதிக்கப்படும். பொதுமக்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களின் துல்லியமான கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்படும். அந்த வகையில் தான், தற்போது தமிழ்நாட்டில் பற்றி எரிந்துகொண்டிருக்கும், மும்மொழிக்கொள்கை தொடர்பாக நீயா நானா விவாத நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக அண்மையில் விஜய் டிவி அறிவித்தது. அதற்கான அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில், இறுதி நேரத்தில் எழுந்த அரசியல் அழுத்தம் காரணமாக அந்த எபிசோட் ஒளிபரப்பாகவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.
Who forced Vijay TV to drop #NeeyaNaana show on “For and Against - three language policy” ?!#Censorship #PressFreedom pic.twitter.com/PtzECY02Dh
— Arvind Gunasekar (@arvindgunasekar) March 15, 2025
”பாஜக தந்த அழுத்தம்”
நீயா நானா விவாத நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் மும்மொழிக்கொள்கை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என இருதரப்பினரும் பங்கேற்றுள்ளனர். ஆனால், எதிர்ப்பவர்கள் முன்வைத்த கருத்துகளை எதிர்கொள்ள முடியாமல் மும்மொழிக்கொளை ஆதரவாளர்கள் திணறியதாக கூறப்படுகிறது. இருமொழிக்கொள்கையே தமிழ்நாட்டிற்கு போதுமானது என்ற கருத்து ஓங்கி ஒலித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அந்த எபிசோட் வெளியானால், புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவது மேலும், சிக்கலாகும் என கருதி, பாஜகவினர் அழுத்தம் கொடுத்து அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பவிடாமல் தடுத்ததாக இணையத்தில் பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதோடு, அழுத்தம் காரணமாகவே அவசர அவசரமாக மற்றொரு நீயா நானா எபிசோடை தயார் செய்து விஜய் டிவி ஒளிபரப்பியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாஜக மீது குற்றச்சாட்டுகள்
நீயா நானா வரலாற்றில் நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப் பட்டு.. வேலைகள் முடிக்கப்பட்டு விட்டது.
— Jeeva Bharathi (@sjeeva26) March 15, 2025
அழுத்ததின் காரணமாக நாளை ஒளிபரப்பு செய்யப்படாது. #NeeyaNaana
சில நாட்களுக்கு முன் பிரதமர் பற்றி கார்ட்டூன் வெளியிட்டதற்காக தமிழின் முன்னணி இதழான விகடனை முடக்கினர்!
— ஜீரோ நானே⭕ (@Anti_CAA_23) March 15, 2025
தற்போது மும்மொழிக்கொள்கை பற்றி பேசிய தமிழ்நாட்டின் முன்னணி ஊடக விவாத நிகழ்ச்சி நீயா நானாவை முடக்கியுள்ளனர்
இதுதான் சங்கிகளின் பாசிச புத்தி
அவர்களின் பொய்யை உடைக்கும் எதையும்… https://t.co/0A0AyF3hvA pic.twitter.com/e3jzHC9deh
பயந்தாங்கோலி பாஜக😄😂
— Dr.தேவா (@iamdrdeva) March 15, 2025
மும்மொழி கொள்கை பற்றி மக்களிடம் கேளுங்கள் என வாய்கிழிய பேசுவார்கள் பாஜக சங்கிகள் ஆனால் அதுவே மக்களை வைத்து நிகழ்ச்சி நடத்தினால் அதை வெளியில் வர விடாமல் முடக்குவார்கள்.!
ஊடகத்துறையை மிரட்டும் பாஜகவை வன்மையாக கண்டிக்கிறோம்.!😡😡#vijaytelevision #NeeyaNaana… pic.twitter.com/esBws2u4gK
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

