கோடை காலத்துல ஏசி அதிகமாக் பயன்படுத்தப்படுகின்றது இதனால் மின்சாரம் அதிகமா தேவைப்படுது அதன்படி எப்படி பயன்படுத்தினால் மின்சாரம் செலவை குறைக்கலாம் என்பதை பார்ப்போம்
ஏசியின் எடை மற்றும் ஸ்டார் மதிப்பைப் பொறுத்து மின் செலவு மாறலாம். ஒவ்வொரு எடை ஏசியும் வெவ்வேறு மின்சாரம் எடுக்கும்.
பொதுவாக, ஒரு டன் ஏசி ஒரு மணி நேரத்திற்கு 1 முதல் 1.5 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும். பெரிய ஏசிகள் அதிக மின்சாரம் எடுக்கும்
சூரிய ஒளியை ஜன்னல் துணிகள் மூலம் தடுப்பதால், வீட்டின் வெப்பநிலை அதிகரிப்பதை குறைக்கலாம். இது ஏசியின் பயன்பாட்டை குறைக்கும்
மின்சாரத்தை சேமிக்க, சரியான வெப்பநிலையில் ஏசியை இயக்கவும். 24-26 டிகிரி செல்சியஸ் சிறந்த வெப்பநிலை
ஏசியின் ஃபில்டர்களை அவ்வப்போது சுத்தம் செய்வது மின்சாரத்தை சேமிக்க உதவும். ஃபில்டர் சுத்தமாக இருந்தால் ஏசி திறமையாக வேலை செய்யும்
பழைய ஏசிகளை மாற்றி, புதிய ஆற்றல் திறன் கொண்ட ஏசிகளை பயன்படுத்துவது நல்லது. புதிய ஏசிகள் மின்சாரத்தை சேமிக்கும்
தமிழ்நாடு மின்சார வாரியம் கோடை காலத்தில் மின் பயன்பாட்டை கண்காணிக்கிறது. தேவையில்லாமல் ஏசியை பயன்படுத்தாதீர்கள்
மின்சாரத்தை சேமிப்பதன் மூலம், மின் கட்டணத்தை குறைக்கலாம். அதுமட்டுமின்றி, இப்படி பயன்படுத்தினால் ஏசியையும் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்