மேலும் அறிய

’அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி’ சசிகலாவிற்கு எதிராக தீர்மானம்..!

சசிகலாவுக்கு எதிராக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாவட்டத்திலும் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமா ? குறிப்பாக தேனி மாவட்டத்தில் சசிகலாவிற்கு எதிரான தீர்மானத்தை ஒபிஎஸ் நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று அதிமுக சார்பில் சசிகலாவிற்கு எதிராக மாவட்ட வாரியாக தீர்மானம் நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டத்திலும், விழுப்புரத்தில் நடைபெற்ற சி.வி.சண்முகம் தலைமையிலான கூட்டத்திலும் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.’அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி’ சசிகலாவிற்கு எதிராக தீர்மானம்..!

அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இல்லாத, அதிமுக உறுப்பினர் ஆவதற்கு தகுதியே இல்லாத சசிகலா, அதிமுகவில் குழப்பத்தை ஏற்டுத்த முயற்சிக்கிறார். ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர்களை வன்மையாக கண்டிக்கிறோம். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஒரு மனதாக ஏற்று அதனை நிறைவேற்றுகிறோம் என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.


’அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி’ சசிகலாவிற்கு எதிராக தீர்மானம்..!

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தபிறகு, அரசியலில் இருந்து விலகியிருக்கிறேன் என்று அறிவித்த சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஒவ்வொரு நாளும் அவர் அதிமுக தொண்டர்களிடம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சசிகலாவோடு பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து நீக்கியும், சசிகலாவிற்கு எதிராகவும் ஒபிஎஸ் – ஈபிஎஸ் அறிக்கை விட்ட நிலையில், அடுத்த நாளே 10 அதிமுக தொண்டர்களுடன் பேசி ஆடியோ வெளியிட்டார் சசிகலா.

சசிகலாவிற்கு எதிராக நான் பேசவில்லை : கடம்பூர் ராஜூ

இதனை சமாளிக்கும் நோக்கில், சசிகலாவே தொடர்புகொண்டு பேசினாலும் எந்த அதிமுக தொண்டரும் தொலைபேசியில் அவருடன் பேசக்கூடாது என்பதை ஒவ்வொருவருக்கும் உணர்த்தும் விதமாக ஒவ்வொரு மாவட்ட செயலாளர்கள் தலைமையிலும் அவருக்கு எதிராக தீர்மான நிறைவேற்ற உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று சேலம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேபோல், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கழகத்தின் வளர்ச்சிக்கும்,புகழுக்கும்,பழியும் தேடியவர்கள் அனைவரும் கழகத்தில் இருந்து நீக்க வேண்டும் என மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ  பேட்டி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட பேசிய சசிகலாவின் ஆதரவாளரிடம் நான் அப்படி சொல்லவே இல்லை, சசிகலாவிற்கு எதிராக நான் பேசவும் இல்லை என்று அவர் மறுப்பது போன்ற அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் தங்கள் மாவட்டங்களில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.’அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி’ சசிகலாவிற்கு எதிராக தீர்மானம்..!

இதேபோன்று அனைத்து மாவட்டங்களில் உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  முன்னாள் அமைச்சர்கள்தான் பல மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களாக இருக்கும் நிலையில், அனைவரும் சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்போகிறார்கள் அல்லது தலைமையின் உத்தரவுக்கு யாரேனும் பின் வாங்கப்போகின்றார்களா ? குறிப்பாக, தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ், சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவாரா என்பதையும் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

 

தலைப்பு செய்திகள்

கல்வி, சமூகநீதிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கக்கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்
கல்வி, சமூகநீதிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கக்கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget