மேலும் அறிய

Tamilnadu Election 2024: 40 தொகுதிகளிலும் தோல்வி.. ரூட்டை மாற்றிய இபிஎஸ்!

நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

40 தொகுதிகளிலும் தோல்வி அடைந்த அதிமுக:

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சந்தித்த இரண்டாவது தேர்தல் இது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அதன்படி, 11 தொகுதிகளில் அதிமுக, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

 அறிக்கையை வெளியிட்ட இபிஎஸ்:

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது வெளிவந்துள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள், மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு, அதிமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த வாக்காளப்  பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கழகக் கூட்டணி 73 இடங்களைப் பெற்று நாம் பார் என்பதை உலகுக்குக் காட்டினோம்.

இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது. 2026 சட்டமன்றப் பொறுத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்.” என்று கூறியுள்ளார். 

மேலும் அந்த அறிக்கையில், “எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், இதுநாள்வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்கு ஆற்றிய தொண்டுகளை மனதில் கொண்டு நம் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்ன கைமாறு செய்யப்போகிறேன்:

தேர்தலின்போது அல்லும், பகலும் அயராது உழைத்த கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்களின் திருப்பாதம் பணிகிறேன். 'உங்கள் உழைப்புக்கும், தியாகத்திற்கும் என்ன கைமாறு செய்யப்போகிறேன்.' என்று கண் கலங்குகிறேன். இன்னும் தீவிரமாகவும், தீர்க்கமாகவும் பணியாற்றி, நீங்கள் தலைநிமிர்ந்து வெற்றி நடை போட உறுதி ஏற்கிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றியை பாசத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு அளித்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், தோழமை இயக்கத்தினர் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.

"எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை இடரவைத்து, தள்ளப் பார்க்கும் குழியிலே அத்தனையும் தாண்டி காலை முன் வையடா-நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா! சத்தியமே லட்சியமாய் கொள்ளடா"

என்ற புரட்சித் தலைவரின் பாடல் நமக்கு என்றைக்கும் வழிகாட்டும்” என்று தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Flower Expo: யார் வருவாங்க? சென்னை மலர் கண்காட்சிக்கு இவ்வளவு கட்டணமா? மனமிறங்குமா தமிழக அரசு?
Chennai Flower Expo: யார் வருவாங்க? சென்னை மலர் கண்காட்சிக்கு இவ்வளவு கட்டணமா? மனமிறங்குமா தமிழக அரசு?
Anna University : சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தொடரும் போஸ்டர் அரசியல்.. Am I Next ? பின்னணி என்ன ?
Anna University : சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தொடரும் போஸ்டர் அரசியல்.. Am I Next ? பின்னணி என்ன ?
Bhopal Gas Tragedy: 5,000+ உயிர்களை பறித்த விஷவாயு - 40 ஆண்டுகள், போபாலில் இருந்து நச்சுக் கழிவுகள் அகற்றம்
Bhopal Gas Tragedy: 5,000+ உயிர்களை பறித்த விஷவாயு - 40 ஆண்டுகள், போபாலில் இருந்து நச்சுக் கழிவுகள் அகற்றம்
டிசம்பர் 31 வரை 98.2% ரூ.2000 நோட்டுகள் வந்துடுச்சி; அப்போ மீதி? - ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய தகவல்
டிசம்பர் 31 வரை 98.2% ரூ.2000 நோட்டுகள் வந்துடுச்சி; அப்போ மீதி? - ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbumani PMK meeting ; அமாவாசை சென்டிமெண்ட்! ஆட்டத்தை ஆரம்பித்த அன்புமணி! பனையூரில் முக்கிய மீட்டிங்Tejasvi Surya marriage : தமிழக மருமகனாகும் தேஜஸ்வி?மோடி பாராட்டிய பாடகி! யார் இந்த சிவஸ்ரீ? : Sivasri”இனி ஜெயிலுக்கு வரமாட்டோம்” உறுதிமொழி எடுத்த கைதிகள்! | Salem Prisoners new yearIrfan View Video | ”என் அரசியல் பின்புலம்...என்ன காப்பாத்துறது உதயநிதி?”உடைத்து பேசிய இர்ஃபான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Flower Expo: யார் வருவாங்க? சென்னை மலர் கண்காட்சிக்கு இவ்வளவு கட்டணமா? மனமிறங்குமா தமிழக அரசு?
Chennai Flower Expo: யார் வருவாங்க? சென்னை மலர் கண்காட்சிக்கு இவ்வளவு கட்டணமா? மனமிறங்குமா தமிழக அரசு?
Anna University : சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தொடரும் போஸ்டர் அரசியல்.. Am I Next ? பின்னணி என்ன ?
Anna University : சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தொடரும் போஸ்டர் அரசியல்.. Am I Next ? பின்னணி என்ன ?
Bhopal Gas Tragedy: 5,000+ உயிர்களை பறித்த விஷவாயு - 40 ஆண்டுகள், போபாலில் இருந்து நச்சுக் கழிவுகள் அகற்றம்
Bhopal Gas Tragedy: 5,000+ உயிர்களை பறித்த விஷவாயு - 40 ஆண்டுகள், போபாலில் இருந்து நச்சுக் கழிவுகள் அகற்றம்
டிசம்பர் 31 வரை 98.2% ரூ.2000 நோட்டுகள் வந்துடுச்சி; அப்போ மீதி? - ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய தகவல்
டிசம்பர் 31 வரை 98.2% ரூ.2000 நோட்டுகள் வந்துடுச்சி; அப்போ மீதி? - ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய தகவல்
ஆண்ட பரம்பரை சர்ச்சை...  அமைச்சர் பி.மூர்த்தி என்ன சொல்லப்போகிறார்..?
ஆண்ட பரம்பரை சர்ச்சை... அமைச்சர் பி.மூர்த்தி என்ன சொல்லப்போகிறார்..?
இன்ஸ்டாகிராமில் பழக்கம்: தைரியமாக வீடு புகுந்த வாலிபர்! பின்னர் நடந்தது என்ன?
இன்ஸ்டாகிராமில் பழக்கம்: தைரியமாக வீடு புகுந்த வாலிபர்! பின்னர் நடந்தது என்ன?
திரைப்பட பாணியில் திருட்டு! - கோபுர கலசத்தில் இரிடியம்! சிக்கிய இளைஞர்! என்ன நடந்தது?
திரைப்பட பாணியில் திருட்டு! - கோபுர கலசத்தில் இரிடியம்! சிக்கிய இளைஞர்! என்ன நடந்தது?
Watch Video: சாலையில் கட்டி புரண்டு, முடியை பிடித்து அடித்துக்கொண்ட பள்ளி மாணவிகள் - ஒரே நபரை காதலித்ததால் விபரீதம்
Watch Video: சாலையில் கட்டி புரண்டு, முடியை பிடித்து அடித்துக்கொண்ட பள்ளி மாணவிகள் - ஒரே நபரை காதலித்ததால் விபரீதம்
Embed widget