மேலும் அறிய

Edappadi Palaniswami : 'மோடி பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காமல் கருத்து’ பாஜக எதிர்ப்பை கைவிடுகிறாரா எடப்பாடி பழனிசாமி..?

'பிரதமர் மோடி இசுலாமியர்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கண்டனம் என்ற வார்த்தையின்றி அறிக்கை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி’

பிரதமர் நரேந்திரமோடி இசுலாமியர்கள் பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில், அவரது பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமியும் இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Edappadi Palaniswami : 'மோடி பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காமல் கருத்து’ பாஜக எதிர்ப்பை கைவிடுகிறாரா எடப்பாடி பழனிசாமி..?

'கண்டனம் இல்லாமல் அறிக்கை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி’

ஆனால், அந்த அறிக்கையில் எந்த இடத்திலும் ‘கண்டனம்’ என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. மாறாக, இது போன்ற பேச்சுக்கள் நாட்டின் நலனுக்காக முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவோடு எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே அறிவித்துவிட்ட எடப்பாடி பழனிசாமி ஏன் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக கண்டனம் என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாமல், இப்படி ஒரு அறிக்கையை அவர் வெளியிட்டிருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் பிரதமர் பேச்சு குறித்த தன்னுடைய அறிக்கையில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்த்து, மிக கவனமாக, இந்த கருத்து இறையாண்மைக்கு உகந்தது அல்ல, இசுலாமியர்கள் மனதை புண்படுத்தும்படி இதுபோன்ற கருத்துகளை பேசுவது ஏற்படையதல்ல என்ற வார்த்தைகளை மட்டுமே அவர் பயன்படுத்தியுள்ளது பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது.

’எஸ்.டி.பி.ஐ கட்சிக்காக அறிக்கை வெளியீடா?’

அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி மிக முக்கிய அங்கத்தை வகித்தும் வரும் நிலையில், மோடியை நேரடியாக எதிர்க்காமல், பெயருக்காக ஒரு அறிக்கையை மட்டும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டாரா?  என்ற சந்தேகமும் அரசியல் களத்தில் எழுந்துள்ளது. மீண்டும் பாஜக ஆட்சியே மத்தியில் அமையும் என்று பல்வேறு கருத்து கணிப்புகள் வெளிவந்துள்ள நிலையில், மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் அதிமுகவில் தன்னுடைய தலைமைக்கு ஏதாவது ஆபத்து வந்துவிமோ என்ற எச்சரிக்கை உணர்வில் இதுபோன்ற சாஃப்ட் அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார் என்றும் அரசியல் களத்தில் விவாதம் எழுந்துள்ளது

’வழக்கில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள்’

அதே நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், 3வது முறையாக பாஜக ஆட்சி அமைந்தால், தாங்கள் கூட்டணிக்கு வரவில்லையென்று, பழிவாங்கும் நடவடிக்கையில் பாஜக இறங்கிவிடுமோ என்ற எண்ணமும் எடப்பாடி பழனிசாமி இதுபோன்ற அறிக்கை வெளியிட காரணம் என கூறப்படுகிறது.

’பாரத பிரதமர் என்று குறிப்பிட்ட ஈபிஎஸ்’

பிரதமர் என்று கூட சொல்லாமல தன்னுடைய அறிக்கையில் முதல் வரியிலேயே பாரத பிரதமர் என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்னரே தீவிர பாஜக எதிர்ப்பை கைவிட்டுவிடுவாரோ என்ற தோற்றம் இந்த அறிக்கையின் மூலம் உருவாகியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

’பாஜக எதிர்ப்பில் ஈபிஎஸ் உறுதியாக உள்ளார் - அதிமுக தொண்டர்கள் கருத்து’

ஆனால், தன்னுடைய பாஜக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் பின்வாங்க மாட்டார் என்றும், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தாலும் கொள்கை ரீதியாக பாஜகவை அவர் எதிர்ப்பது தொடரும் என்றும், தேர்தலின்போதே பாஜகவிற்கு பயப்படாதவர், இதன் பிறகும் அவர்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டார் என   அதிமுகவினர் தெரிவித்துள்ளர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK vs RCB LIVE: படிதார்.. டேவிட் அதிரடி.. இமாலய இலக்கை எட்டுமா CSK..  நேரலை
CSK vs RCB LIVE: படிதார்.. டேவிட் அதிரடி.. இமாலய இலக்கை எட்டுமா CSK.. நேரலை
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம்: லிஸ்ட் இதோ!
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம்: லிஸ்ட் இதோ!
Myanmar Earthquake: 144 பேர் உயிரிழப்பு; 732 பேர் படுகாயம்..மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்!
Myanmar Earthquake: 144 பேர் உயிரிழப்பு; 732 பேர் படுகாயம்..மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடிAdmk Pmk Alliance: ”பாமகதான் வேணுமா?” எடப்பாடிக்கு பிரேமலதா செக்! திமுக கூட்டணியில் தேமுதிக?TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK vs RCB LIVE: படிதார்.. டேவிட் அதிரடி.. இமாலய இலக்கை எட்டுமா CSK..  நேரலை
CSK vs RCB LIVE: படிதார்.. டேவிட் அதிரடி.. இமாலய இலக்கை எட்டுமா CSK.. நேரலை
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம்: லிஸ்ட் இதோ!
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம்: லிஸ்ட் இதோ!
Myanmar Earthquake: 144 பேர் உயிரிழப்பு; 732 பேர் படுகாயம்..மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்!
Myanmar Earthquake: 144 பேர் உயிரிழப்பு; 732 பேர் படுகாயம்..மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்!
IPL 2025 CSK vs RCB: ரசிகன்.. வெறியன்.. விரோதி! கிரிக்கெட்டில் செத்துப் போகிறதா ஜென்டில்மேன் குணம்?
IPL 2025 CSK vs RCB: ரசிகன்.. வெறியன்.. விரோதி! கிரிக்கெட்டில் செத்துப் போகிறதா ஜென்டில்மேன் குணம்?
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
CA Final Exams: இனி நிம்மதிதான்… சிஏ தேர்வர்களுக்கு முக்கிய மாற்றத்தை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
CA Final Exams: இனி நிம்மதிதான்… சிஏ தேர்வர்களுக்கு முக்கிய மாற்றத்தை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
"பெங்கால் புலி நானு.. முடிஞ்சா பிடிச்சு பாருங்க" இடதுசாரி மாணவர்களை கதறவிட்ட மம்தா!
Embed widget