மேலும் அறிய

மெட்ரோ ரயில் நிலைய பாணியில் அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி - ஏற்பாடு பணிகள் தீவிரம்

9.15 மணிக்கு அதிமுக பொதுக்குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எப்படியும் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமையும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

அதிமுக பொதுக்குழு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

கடந்த ஜூன் 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று உத்தரவிட்டனர். 

ஆனால் பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் ஒற்றைத் தலைமை வலியுறுத்தி 23 தீர்மானங்களை நிராகரிப்பதாக ஆவேசமாக தெரிவித்தனர்.இக்கூட்டத்தில் இருந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாதியில் வெளியேறினார்.  மேலும் அதிமுக ஓபிஎஸ் தரப்பு - இபிஎஸ் தரப்பு என பிரிந்து இருதரப்பும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். 

இந்த சூழலில் சென்னை வானகரத்தில் உள்ள அதே மண்டபத்தில் ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியில் அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் நாளைய தினம் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர். அதேசமயம் பொதுக்குழுவுக்கு தடைக் கேட்டு ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த  வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாளை காலை 9 மணிக்கு தீர்ப்பு சொல்வதாக தெரிவித்துள்ளார். 

9.15 மணிக்கு அதிமுக பொதுக்குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எப்படியும் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமையும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். கடந்த பொதுக்குழுவில் போலி அடையாள அட்டை மூலம் வெளியாட்கள் நுழைந்ததாக கூறப்பட்ட நிலையில் இம்முறை நவீன முறையில் அனுமதி வழங்கப்பட உள்ளது. 

அதாவது மெட்ரோ ரயில் நிலையம் போல தடுப்புகள் அமைக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டையுடன் கூடிய மின்னணு எண் வழங்கப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் அடையாள அட்டையை ஸ்கேன் செய்த பிறகே அனுமதி அளிக்கப்படும் வகையில் ஏற்பட்டுள்ளது. இதற்காக பொதுக்குழு, செயற்குழு நடக்கும் இடங்களில் 20 ஸ்கேன் பரிசோதனை செய்யும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
திரிஷாவுக்கு அரசியல் அழைப்பு: மதுரையில் முதல் அங்கீகரிக்கப்பட்ட சங்கம்!
திரிஷாவுக்கு அரசியல் அழைப்பு: மதுரையில் முதல் அங்கீகரிக்கப்பட்ட சங்கம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
Embed widget