மேலும் அறிய

பாஜகவுடன் மறைமுக கூட்டணி; இரட்டை வேடம் போடுகிறது திமுக - எடப்பாடி பழனிசாமி கருத்து!

எதிர்க்கட்சியாக இருக்கும் கோ பேக் மோடி என்று சொல்லிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் வெள்ளைக்குடை வைத்து வெல்கம் மோடி என திமுகதான் இரட்டை வேடம் போடுகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியாக இருக்கும் கோ பேக் மோடி என்று சொல்லிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் வெள்ளைக்குடை வைத்து வெல்கம் மோடி என திமுகதான் இரட்டை வேடம் போடுகிறது எப எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

காவிரி உபரிநீர் மூலம் சேலம் மாவட்டத்தில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை கொண்டு வந்ததற்காக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சார்பில் சேலம் மாவட்டம் மேச்சேரியில் பாராட்டு விழா நடைபெற்றது.  

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சராக இருந்தபோது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் விவசாயிகள் அனைவரும் ஒன்று கூடி நடத்துகிற நன்றி அறிவிப்பு நிகழ்ச்சிதான் வாழ்நாளில் பெற்ற பாக்கியமாக கருதுகிறேன். விவசாய குடும்பத்திலே பிறந்து விவசாய பணிகளை செய்துள்ளேன். ஒரு விவசாயி முதலமைச்சரான பின்னர், இப்பகுதியில் வறண்ட 100 ஏரிகள் நிரப்பும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து நீரேற்று முறையில் தண்ணீர் எடுத்து நிரப்பப்படவேண்டும். அதற்காக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இரவென்றும், பகலென்றும் பாராமல் அக்கறையுடன் செயல்பட்டார்கள். ஒவ்வொரு மாதமும் ஆய்வு நடத்தி திட்டத்தின் வளர்ச்சியை தொடர்ந்து வேகப்படுத்தி, துரிதப்படுத்தினேன். ரூ.565 கோடி மதிப்பில் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டது. குறித்த காலத்தில் பணி முடிக்க சிறந்த நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டது. எம்.காளிப்பட்டி பகுதியில் முதல்முதலாக திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது.” என்றார்.

”அதிமுக ஆட்சிக்காலத்தில் மேட்டூர் உபரிநீர் திட்டத்தில் 70 சதவீத பணிகள் முடிவடைந்திருந்தது. அடுத்த ஆட்சிக்கு வந்தவர்கள் துரிதமாக செயல்பட்டிருந்தால் ஓராண்டில் திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கும். ஆனால் அதிமுக ஆட்சி கொண்டு வந்த திட்டம் என்பதால் காழ்ப்புணர்ச்சி காரணமாக 42 மாதங்களாகியும் திட்டம் முழுமையாக நிறைவேற்றவில்லை.” விமர்சித்தார். 

ஸ்டாலின் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். டெல்டா நிலங்கள் பாலைவனமாக்க ஹைட்ரோ கார்பேன், மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி அளித்தவர் ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் விவசாயிகள் அளித்த கோரிக்கையை ஏற்று, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை உருவாக்கப்பட்டது. பொன்விளையும் பூமியான டெல்டாவை பாதுகாத்த பெருமை அதிமுகவிற்குதான் உள்ளது. கடுமையான வறட்சி காலத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சாகுபடி செய்த பயிர்கள் வெயிலில் கருகி சேதமடைந்தது. அதை கணக்கிட்டு, ரூ.2247 கோடி வறட்சி நிவாரண நிதி வழங்கப்பட்டது. இந்திய வரலாற்றில், எந்த அரசும் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்கியதில்லை. பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அதிக இழப்பீடும் அதிமுக ஆட்சியில் அதிகபட்சமாக ரூ.12 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. இதேபோல அமெரிக்கன் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.186 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது . மேலும் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்க ரூ.42 கோடி வழங்கப்பட்டது.

மரவள்ளியில் மாவுப்பூச்சி பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு மரவள்ளி பாதுகாக்கப்பட்டது. இரவில் மும்முனை மின்சாரம் வழங்காமல், 24 மணி நேரமும் வழங்க வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. உழவன் செயலி திட்டமும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. தொடக்க வேளாண்மை வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது.

விவசாயத்திற்கு நீர் ஆதராம்:

”டெல்டா மாவட்டங்களில் உரம் சரியாக கிடைக்கவில்லை. உதயநிதி ஸ்டாலின் நிறைய பேசுகிறார். நான் பொறாமையில் பேசுவதாக கூறுகிறார். திமுக ஆட்சியில் எந்த திட்டத்தை கொண்டு வந்தீர்கள்? திமுகவை சேர்ந்த விவசாயிகள் மட்டுமல்ல. அனைத்து கட்சிகளையும் சேர்ந்த விவசாயிகளுக்கும் பொதுவாகத்தான் திட்டம் கொண்டு வரப்பட்டது. ரத்தத்தை வேர்வையாக சிந்தி உழைக்கும் விவசாயிகளுக்கு தண்ணீர் முக்கியம். விவசாயிகளின் உயிராக தண்ணீர் இருக்கிறது. வறண்ட பகுதிகள் மழை பெய்யும் போதுதான் மானாவாரி விவசாயம் செய்ய முடியும். இந்த பகுதி விவசாயிகள் செழிப்போடு வளமோடு வாழ வேண்டும் என்றுதான் நாங்கள் பாடுபட்டோம்.” என்றார்.

விஷக்காளான்:

”நேற்று பெய்த மழையில் முளைத்த விஷக் காளான் உதயநிதி ஸ்டாலின். அவர் எங்களுக்கு எதுவும் கற்றுத் தர தேவையில்லை. 50 ஆண்டுகாலம் மக்கள் பணி செய்துள்ளேன். உங்கள் வழியில் நான் வரவில்லை. ஒரு விவசாயி, கிளைச் செயலாளர் நிலையில் இருந்து அதிமுக பொதுச்செயலாளராக வந்துள்ளேன். நீங்கள் அப்படி வரவில்லை. எந்த தகுதியின் அடிப்படையில் உதயநிதிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  கட்சியில் உழைத்தவர்கள் பலர் இருக்க உங்களுக்கு எந்த அடிப்படையில் பதவி வழங்கப்பட்டுள்ளது?

கருணாநிதியின் மகன், பேரன் என்பதால்தான் உங்களுக்கு பதவி கிடைத்திருக்கிறது. விமர்சனம் தொடர்ந்தால் தக்க பதிலடி கிடைக்கும். செல்வ செழிப்பில் வளர்ந்தவருக்கு இவ்வளவு இருந்தால் உழைத்து களைப்பவர்களுக்கு எவ்வளவு இருக்கும். கொல்லைப்புறம் வழியாக பதவிக்கு வந்து விட்டீர்கள். உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த பதவிக்குரிய கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.?” என்றார்.

பா.ஜ.க. உடன் கூட்டணிக்கு முயற்சி:

திமுக காங்கிரசோடு கூட்டணியில் இருந்தபோதும், பாரதிய ஜனதா கட்சி அமைச்சர்களை அழைத்து விழா நடத்துகிறார்கள். ரெய்டு கண்டு நான் எப்போதும் பயப்படவில்லை. மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. இன்றைக்கு எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. அதிமுக ஆட்சியில் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும். பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுகதான் முயற்சி செய்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் கோ பேக் மோடி என்று சொல்லிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் வெள்ளைக்குடை வைத்து வெல்கம் மோடி என திமுகதான் இரட்டை வேடம் போடுகிறது. பாஜகவுடன் மறைமுக கூட்டணி கொள்ளையடித்த பணத்தை பாதுகாக்கவே திமுக உள்ளது. ஏற்கனவே, காங்கிரஸ் அரசில் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும்போது ரெய்டு திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. அதனால்தான் காங்கிரசுக்கு 63 இடங்கள் வழங்கப்பட்டன" என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget