மேலும் அறிய

‛சசிகலா வந்தால் பார்க்கலாம்...’ போகிற போக்கில் போட்டு உடைத்த ஓ.பி.எஸ்.,!

”தமிழகத்தில் திமுக ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டு தானாக வந்து விடுகிறது. எப்போது மின்சாரம் வரும், போகும் என தெரியாமல் விவசாயிகள் மிகப்பெரிய வருத்தத்தில் உள்ளனர்” - ஓபிஎஸ்

நெல்லை மாவட்டம் மேலச்செவல் பகுதியில் பசும்பொன் தேசிய கழகம் துணைத்தலைவர் ஆதி சுப்ரமணியன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னாள் துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் இன்று வருகை புரிந்தார்,

திருமண விழாவில் கலந்து கொண்ட அவர் பின் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், ‛‛கடந்த சட்டமன்ற தேர்தலில் 505 வாக்குறுதிகளை திமுக மக்களுக்கு அளித்தனர். ஆனால் இன்று மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு பயனளிக்கும் திட்டங்களை நிறைவேற்ற வில்லை. ஓராண்டு ஆட்சி காலத்தில் மக்கள் வேதனையை தான் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள், உதாரணத்திற்கு அவர்களது ஆட்சியின் நிர்வாக சீர்கேடு தான் உதாரணம், அதிமுக பொங்கல் பரிசு தொகுப்பில் எந்த அளவிற்கு தரமான பொருட்களை வழங்கியது என்பதை அனைத்து மக்களும் அறிவார்கள், அதோடு பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது,  ஆனால் திமுக ஆட்சியில் தரமில்லாத பொங்கல் பொருட்களையும் பொங்கல் பரிசு தொகையும் இல்லாமல் வழங்கப்பட்டது.

‛சசிகலா வந்தால் பார்க்கலாம்...’ போகிற போக்கில் போட்டு உடைத்த ஓ.பி.எஸ்.,!

மகளிருக்கு உழைப்பூதியமாக ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னார்கள், ஆனால் இன்னும் தரவில்லை, அதிமுக ஆட்சி காலத்தில் மாநிலத்தின் மொத்த நிதியில் 55 சதவீதம்  நிதியை ஏழை மக்கள், அடித்தட்டில் வாழும் மக்களுக்கு என அவர்களின் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கென ஒதுக்கினார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. மேல்தட்டு மக்களுக்கு இணையாக அனைத்து நிலைகளிலும், பொருளாதார நிலைகளிலும் உட்பட கீழ்தட்டு மக்களை மேல்தட்டு மக்களுக்கு இணையாக வாழ்க்கை தரத்தை உயர்த்திட வேண்டும் என்று ஜெயலலிதா நல்ல பல திட்டங்களை தொலை நோக்கு திட்டங்களாக மக்கள் நல திட்டமாக நாட்டு மக்களுக்கு அர்பணித்தார் என்பது தான் வரலாறு. அந்த வரலாறை யாரும் மறுக்க முடியாது, மறக்கவும் முடியாது என்ற நிலை இன்று மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

‛சசிகலா வந்தால் பார்க்கலாம்...’ போகிற போக்கில் போட்டு உடைத்த ஓ.பி.எஸ்.,!

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சமூக நலத்திட்டங்கள் மக்களின் கைகளுக்கு நேரடியாக சென்று சேர்ந்தது. தற்போது அதுபோன்ற சூழல் இல்லை என்பது தான் திமுக ஆட்சியின் வேதனையாக இருந்து கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டு தானாக வந்து விடுகிறது. எப்போது மின்சாரம் வரும் எப்போது மின்சாரம் போகும் என தெரியாமல் விவசாயிகள்  மிகப்பெரிய வருத்தத்தில் உள்ளனர், சீராக அவர்களின் வயல்களில் உள்ள பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழ்நிலை இன்று ஏற்பட்டுள்ளது,’’ என்று தெரிவித்தார், ஜெயலலிதா போல் நல்லாட்சியை  தருவேன் என சசிகலா கூறியது குறித்து கேட்டதற்கு , வந்தால் பார்ப்போம் எனவும் பதில் அளித்தார்

தலைப்பு செய்திகள்

L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்! கருப்பு முருகானந்தம் வழக்கில் திடீர் திருப்பம்!
சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்! கருப்பு முருகானந்தம் வழக்கில் திடீர் திருப்பம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
கடத்தவிட்டு வேடிக்கையா? .. போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி.. விஜயை விளாசிய உதயநிதி!
கடத்தவிட்டு வேடிக்கையா? .. போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி.. விஜயை விளாசிய உதயநிதி!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Anirudh - Kavya Maran: நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. தேதியை நோட் பண்ணுங்க!
Anirudh - Kavya Maran: நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. தேதியை நோட் பண்ணுங்க!
Embed widget