மேலும் அறிய
அதிமுக கூட்டணி நமக்கு வேண்டவே வேண்டாம்.. பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்
பா.ஜ.க மாநில தலைவராக அண்ணாமலை வேண்டும் எனவும், அதிமுக கூட்டணி வேண்டாம் எனவும் பரமக்குடி நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர்
Source : whats app
பாஜக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சரவணன் சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க., - பா.ஜ.க., கூட்டணி
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலையை நீக்கிவிட்டு, அந்த பதவிக்கு திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மூத்த தலைவரை நியமிக்க பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அ.தி.மு.க., - பா.ஜ.க., இடையேயான கூட்டணி சுமூகமாக அமைவதற்காக அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்க பாஜகவின் தேசிய தலைவர்கள் சமீப காலமாகவே திட்டமிட்டு வந்ததாக அக்கட்சியின் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
டெல்லி விசிட்
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரே ஆண்டே உள்ள நிலையில், அரசியல் களம் சூடிபிடித்து வருகிறது. ஆட்சியில் உள்ள திமுகவை அகற்ற அதிமுக தீவிரமாக வேலை செய்து வருகிறது. பலமான கூட்டணியை கொண்டிருக்கும் திமுகவை வீழ்த்த அதற்கு இணையான பலம் பொருந்திய கூட்டணி அமைக்க அதிமுக திட்டமிட்டு வந்தது. குறிப்பாக, அதிமுகவில் ஒரு பிரிவினர், பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். பாஜகவும், இதற்காக பல வேலைகளை செய்து வந்தது. செங்கோட்டையனை வைத்த அவர்கள் காய் நகரத்தி வந்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக, பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை அதிமுக தலைவர்கள் டெல்லியில் சந்தித்தது கூட்டணிக்கான அச்சாரமாக மாறியது. அந்த சந்திப்பின்போது, அமித் ஷாவுடன் தனியாக ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி, பல நிபந்தனைகளை விதித்ததாகக் கூறப்படுகிறது.
தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்?
அதில், முக்கியமானது தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலையை நீக்குவது. இதற்கு அமித் ஷா தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் தந்ததாகவே கூறப்படுகிறது. இந்த நிலையில், தலைமை பதவியில் இருக்கும் அண்ணாமலையை நீக்கிவிட்டு வேறு ஒருவரை நியமிக்க பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன
பரமக்குடியில் போஸ்டர்
அதிமுக கூட்டணி வேண்டாம் எனவும், அண்ணாமலை மாநில தலைவராக வேண்டும் எனவும் பாஜக சார்பில் பரமக்குடியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2026 ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கூட்டணிகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நீக்கப்படுவார் என்ற பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை வேண்டும் எனவும், அதிமுக கூட்டணி வேண்டாம் எனவும் பரமக்குடி நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. பாஜக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சரவணன் சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரையில் கஞ்சா வழக்கில் எஸ்கேப்.. என்கவுன்டரில் ரவுடி மாட்டியது எப்படி ?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறை.. புதிய பாம்பன் பாலத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















