மேலும் அறிய

Aadhav Arjuna : “திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பிளான்” மாஸ்டர் மைண்ட் ஆதவ் அர்ஜூனா..?

”திமுகவிற்காக வியூக வகுப்பாளர்களில் ஒருவராக பணியாற்றிய அனுபவம் ஆதவ் அர்ஜூனாவிற்கு இருப்பதால், அங்கு என்ன நடக்கிறது என்பது அவருக்கு நன்றாக தெரியும்”

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதி அன்று மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என்றும் அதில் அதிமுகவும் பங்கேற்கலாம் என்றும் தொல்.திருமாவளவன் அறிவித்திருப்பது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த அறிவிப்புக்கு பின்னால் அரசியல் வியூக வகுப்பாளரும் விசிக துணைப் பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜூனா இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.Aadhav Arjuna : “திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பிளான்” மாஸ்டர் மைண்ட் ஆதவ் அர்ஜூனா..?

திமுகவிற்காக பணியாற்றியவர் இப்போது விசிக-வில்

திமுகவிற்காக பல மாதங்கள் வியூக வகுப்பாளர்களில் ஒருவராக பணியாற்றியவராக அறியப்படும் ஆதவ் அர்ஜூனா, விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த ஜனவரியில் திருச்சியில் நடத்திய வெல்லும் சனநாயகம் மாநாட்டை ஒருங்கிணைத்து அதனை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வைத்தவர். அந்த மாநாட்டு மேடையிலேய் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் தன்னை இணைத்துக்கொண்டார்.

”வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்” என்ற அமைப்பின் நிறுவனரான ஆதவ் அர்ஜூனா திமுக-வின் மறைமுக வியூக பணிகளில் கடந்த 2016 முதல் 2020 வரை செயல்பட்டவர். 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு நேரடி வியூக வகுப்பாளராக சுனில் என்பவர் பணியாற்றிய நிலையில், அவரோடு இணைந்து செயல்பட்டார் ஆதவ் அர்ஜூனா. மேலும், திமுக வெற்றி பெற மறைமுகமாக பணியாற்றிய மற்ற வியூக வகுப்பாளர்களான லண்டன் வெங்கட், ஆனந்து என்பவர்களோடும் ஆதவ் அர்ஜூனா இணைந்து செயல்பட்டார். அங்கிருந்து வெளியில் வந்து கடந்த சில மாதங்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்காக பணியாற்றி வந்த ஆதவ், விடுதலை சிறுத்தைகளின் நிகழ்ச்சிகள், விழாக்கள், உறுப்பினர் சேர்க்கைக்கான வரையறைகள், இணையதளம் என பலவற்றை அவரது அமைப்பான ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ மூலம் ஒருங்கிணைத்து வந்தார். இந்நிலையில், ஆதவ் அர்ஜூனின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியடைந்த  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அவரை வைத்தே வெல்லும் சனநாயக மாநாட்டை திருச்சியில் வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.Aadhav Arjuna : “திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பிளான்” மாஸ்டர் மைண்ட் ஆதவ் அர்ஜூனா..?

துணைப் பொதுச்செயலாளர் ஆன ஆதவ் அர்ஜூனா

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி ஆதவ் அர்ஜூனாவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக அறிவித்தார் திருமாவளவன். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பல வருடங்களாக உழைத்த பலர் இருக்கும்போது, இப்போது வந்த ஆதவ் அர்ஜூனாவிற்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்ததற்கு அந்த கட்சியில் தொடக்கத்தில் சில எதிர்ப்புகள் இருந்தாலும் அவரின் செயல்பாடுகளை அறிந்ததும் அந்த எதிர்ப்பு கானல் நீர் போல் கரைந்துப்போனது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரத்தில் திருமாவளவனுக்கும் விழுப்புரத்தில் தனித் சின்னத்தில் நின்ற ரவிக்குமாருக்கும் ஆதவ் அர்ஜூனாவின் ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ அமைப்பு தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றி அவர்கள் இருவரையும் வெற்றி பெற வைத்தது. இதன் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்தது. கடந்த முறை விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்தில் ரவிக்குமார் நின்று வென்ற நிலையில், 2021ல் விசிகவின் பானைச் சின்னத்திலேயே அவரை நிற்க வைக்க திருமாவளவன் முடிவு செய்ததற்கு காரணம் ஆதவ் அர்ஜூனினை வியூகங்களை அவர் நம்பியதுதான் காரணம் என கூறப்படுகிறது. Aadhav Arjuna : “திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பிளான்” மாஸ்டர் மைண்ட் ஆதவ் அர்ஜூனா..?

மது ஒழிப்பு மாநாடும் ஆதவ் அர்ஜூனா திட்டமா ?

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் தற்போது அறிவித்திருக்கும் மது ஒழிப்பு மாநாடு ஆதவ் அர்ஜூனாவின் அரசியல் வியூகம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. திமுகவிற்காக அவர் மறைமுகமாக பணியாற்றிய காலங்களில் அவர்களின் செயல்பாடுகள் எப்படியெல்லாம் இருக்கும் என்று அறிந்து வைத்திருக்கும் ஆதவ் அர்ஜூனா, விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக- கூட்டணியில் தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றவும் தமிழ்நாட்டின் மிகப் பெரியாக மாற்று சக்தியாக எழுச்சிப் பெற வைத்து, அனைத்து சமுக மக்களின் மத்தியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை கொண்டு சேர்க்கும் திட்டமாகவும் இந்த மது ஒழிப்பு மாநாட்டிற்கு ஐடியா கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.Aadhav Arjuna : “திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பிளான்” மாஸ்டர் மைண்ட் ஆதவ் அர்ஜூனா..?

சாரதியாக மாறிய ஆதவ்

இப்போதெல்லாம் திருமாவளவன் எங்கே சென்றாலும் அவருடன் ஆதவ் அர்ஜூனாவை அழைத்து சென்றுவிடுகிறார் என்கிறது விடுதலை சிறுத்தைகள் வட்டாரம். கூடவே, திருமாவளவனுக்கு ஒரு சாரதி போல, ஆதவ் அர்ஜூனாவே சில நேரங்களில் திருமாவளனுக்காக ஓட்டுநராக இருந்து காரை ஒட்டி வருகிறார் என்றும் தெரிகிறது. இதன் மூலம், திருமாவளவனின் நம்பிக்கைக்கு உரியவராக ஆதவ் அர்ஜூனா மாறியுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SRH vs RR: எப்படி போட்டாலும் அடிச்ச ஹைதரபாத்! ஒரே சிக்ஸர் மழை! 287 ரன்களை எட்டுமா ராஜஸ்தான்?
SRH vs RR: எப்படி போட்டாலும் அடிச்ச ஹைதரபாத்! ஒரே சிக்ஸர் மழை! 287 ரன்களை எட்டுமா ராஜஸ்தான்?
"கபட நாடக திமுக அரசு" அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த விஜய்!
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chariot falls in Bangalore | ”தள்ளுங்க.. தள்ளுங்க சாய்து” சரிந்த 150 அடி ராட்சத தேர் பெங்களூருரில் கோர சம்பவம்Kaaraikudi Rowdy Murder  ஓட ஓட விரட்டி ரவுடி கொலை தந்தைக்காக பழிதீர்த்த திகில் கிளப்பும் CCTV காட்சிஅதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SRH vs RR: எப்படி போட்டாலும் அடிச்ச ஹைதரபாத்! ஒரே சிக்ஸர் மழை! 287 ரன்களை எட்டுமா ராஜஸ்தான்?
SRH vs RR: எப்படி போட்டாலும் அடிச்ச ஹைதரபாத்! ஒரே சிக்ஸர் மழை! 287 ரன்களை எட்டுமா ராஜஸ்தான்?
"கபட நாடக திமுக அரசு" அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த விஜய்!
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
Embed widget