![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
1 Year of Stalin Govt: பிரதமர் ஆகிறாரா முதல்வர் ஸ்டாலின்? பிரமாதமாக முன்வந்த பதில்கள் இதோ!
இந்தியாவின் பிரதமராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பாரா? இல்லையா? என்று ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
![1 Year of Stalin Govt: பிரதமர் ஆகிறாரா முதல்வர் ஸ்டாலின்? பிரமாதமாக முன்வந்த பதில்கள் இதோ! 1 Year of MK Stalin Govt CVoter ABP Survey cm mk stalin become the prime minister of india 1 Year of Stalin Govt: பிரதமர் ஆகிறாரா முதல்வர் ஸ்டாலின்? பிரமாதமாக முன்வந்த பதில்கள் இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/27/4107daaaf29378669f422dee3c9fa82e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க கூட்டணி கடந்த சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த ஓராண்டில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
2024ம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியை தீர்மானிக்கும் தலைவர்களில் ஒருவராக மு.க.ஸ்டாலின் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயத்தில், அவரது நடவடிக்கையால் அவர் பிரதமர் பதவியை குறிவைக்கிறார் என்றொரு கருத்தும் நிலவி வருகிறது. இதனால், மு.க.ஸ்டாலின் பிரதமராக பொறுப்பேற்பாரா? என்று அரசியல் கட்சியினர் மத்தியில் ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு நடத்தியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் நாட்டின் பிரதமராக முடியுமா?
கண்டிப்பாக பிரதமர் ஆவார் :
முதல்வர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்பார் என்று தி.மு.க. கூட்டணியினர் 54.9 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 30.6 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 50 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 46.7 சதவீதம் பேரும், நாம் தமிழர் 50 சதவீதம் பேரும், மற்றவர்கள் 30 சதவீதம் பேரும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர். மொத்தம் 45.8 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார் என்று கூறியுள்ளனர்.
ஆம். வாய்ப்புகள் உள்ளது :
முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்தற்கு வாய்ப்புகள் உள்ளது என்று தி.மு.க. கூட்டணியினர் 22 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 16.7 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 27.8 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 40 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சியினர் 28.6 சதவீதம் பேரும், மற்றவர்கள் 50 சதவீதத்தினரும் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர். மொத்தம் 19.9 சதவீதம் பேர் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர்.
முழு கருத்துக் கணிப்பு விவரம் :
இல்லை. கண்டிப்பாக ஆகமாட்டார் :
முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக பிரதமர் ஆக மாட்டார் என்று தி.மு.க. கூட்டணியினர் 23.1 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 52.8 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 27.8 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 40 சதவீதம் பேரும், நாம் தமிழர் 28.6 சதவீதம் பேரும், மற்றவர்கள் 50 சதவீதம் பேரும் இந்த கருத்தை கூறியுள்ளனர். மொத்தம் 34.3 சதவீதம் பேர் இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)