Stalin on Kamal Haasan: ‛நலமுடன் நற்பணிகளை தொடருங்கள்...’ கமலுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
கமல் ஹாசன் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகநாயகன் கமல் ஹாசன் தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றவர். தமிழ் சினிமாவை உலக தரத்துக்கு எடுத்து செல்ல வேண்டுமென்பதில் தீவிர கவனத்துடன் செயல்பட்ட அவருக்கு ரசிகர்கள் இன்றளவும் உண்டு. ஆண்டவர் என அழைக்கப்படும் கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது அரசியல் கட்சி தலைவராக இருக்கிறார்.
கட்சிக்கு தலைவராக இருந்தாலும் சினிமாவில் அவர் தொடர்ந்து நடித்துவருகிறார். அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் கமல் ஹாசன் இன்று தனது 67ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு திரையுலகினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
இந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்பு நண்பர் 'கலைஞானி' @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) November 7, 2021
நலமுடன் நற்பணிகளைத் தொடர்ந்திட வாழ்த்துகிறேன்.
அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், “இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான, அன்பு நண்பர் கலைஞானி கமல் ஹாசனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நலமுடன் நற்பணிகளை தொடர்ந்திட வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக விக்ரம் படத்தின் First Glance நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த ட்வீட்டில், உங்களுக்கு எனது சிறிய பிறந்தநாள் பரிசு சார். பிறந்தநாள் வாழ்த்துகள் உலக நாயகன்” என குறிப்பிட்டிருந்தார்.
கமலும் அதனை ரீட்வீட் செய்து, “அன்பிற்கு நன்றி லோகேஷ் கனகராஜ்” என தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி,‘விக்ரம்’ படக்குழுவினருடன் கமல் தனது பிறந்தநாளை கொண்டாடினார். கத்தி வைத்திருப்பது போன்ற தோற்றத்தால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் , அவர் கேக் வெட்டினார். அந்தக் கேக்கில் "once a lion always a lion " என்ற வசனங்களுடன் கூடிய விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்