மேலும் அறிய

ரயில்வேயில் குரூப்-டி வேலை: தமிழக இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பு! மயிலாடுதுறையில் இலவச பயிற்சி & உடனே விண்ணப்பியுங்கள்!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) 22,195 குரூப்-டி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தும் இலவசப் பயிற்சி வகுப்பு குறித்து ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மயிலாடுதுறை: இந்திய ரயில்வே துறையில் பணியாற்றுவதை லட்சியமாகக் கொண்ட இளைஞர்களுக்கு ஒரு சிறந்த நற்செய்தி வெளியாகியுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில்வே மண்டலங்களில் காலியாக உள்ள 22,195 ‘குரூப்-டி’ (Level-1) பணியிடங்களை நிரப்புவதற்கான பிரம்மாண்டமான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பச் செயல்முறைகள் தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

பல்வேறு துறைகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

இந்த ஆட்சேர்ப்பின் மூலம் ரயில்வேயின் தொழில்நுட்பம் மற்றும் பராமரிப்புப் பிரிவுகளில் பல்வேறு முக்கியப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

குறிப்பாக:

* உதவியாளர் (தட இயந்திரம் - Track Machine)

* உதவியாளர் (பாலம் - Bridge)

*பாதை பராமரிப்பாளர் (Track Maintainer Grade IV)

* உதவியாளர் (P-Way, TRD, TL & AC)

*உதவியாளர் லோகோ ஷெட் (மின்சாரம்) மற்றும் செயல்பாடுகள் (மின்சாரம்)

* பாயிண்ட்ஸ்மேன் (Pointsman)

*உதவியாளர் (S&T - Signal and Telecommunication)

உள்ளிட்ட பல பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.01.2026 அன்று விண்ணப்பதாரர்கள் 18 முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இருப்பினும், அரசு விதிகளின்படி உச்ச வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

*SC/ST பிரிவினர்: 5 ஆண்டுகள் தளர்வு.

*OBC (Non-Creamy Layer) பிரிவினர்: 3 ஆண்டுகள் தளர்வு.

*மாற்றுத்திறனாளிகள் (PwBD): 10 ஆண்டுகள் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கட்டணம்

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் 02.03.2026 ஆகும்.

கட்டண விவரம்

* பொதுப் பிரிவினர்: ரூ 500

*பெண்கள், SC/ST, மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்: ரூ 250

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பணப் பரிவர்த்தனை (Net Banking/Debit/Credit Card/UPI) மூலம் செலுத்தலாம்.

தேர்வு முறை: தமிழில் எழுதலாம்!

ரயில்வே தேர்வுகளின் ஒரு சிறப்பம்சமாக, இந்தப் போட்டித் தேர்வை மாணவர்கள் தங்கள் தாய்மொழியான தமிழிலேயே எழுதலாம். இது தமிழக மாணவர்களுக்குக் கூடுதல் சாதகமான அம்சமாகும். தேர்வு நிலைகள் பின்வருமாறு அமையும்:

* கணினி அடிப்படையிலான தேர்வு (CBT): 100 மதிப்பெண்களுக்குக் கொள்குறி வகை (Objective Type) கேள்விகள் கேட்கப்படும்.

* உடல் திறன் சோதனை (PET): எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இந்தப் பரிசோதனை நடத்தப்படும்.

* மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆவண சரிபார்ப்பு.

பாடத்திட்டம்: எழுத்துத் தேர்வில் பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு (Reasoning), பொது அறிவு (GK), பொது அறிவியல் (General Science) மற்றும் கணிதம் (Mathematics) ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும். ஒரு சரியான பதிலுக்கு 1 மதிப்பெண் வழங்கப்படும், தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண் (Negative Marking) உண்டு.

இலவச பயிற்சி வகுப்புகள்

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இத்தேர்வில் அதிக அளவில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் (Study Circle) வாயிலாக, இந்த ரயில்வே குரூப் டி தேர்விற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

நிகழ்ச்சி விவரம்

*நாள்: 17.02.2026 (செவ்வாய்க்கிழமை)

* நேரம்: காலை 11.00 மணி

*இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், பாலாஜி நகர், 2-வது குறுக்கு தெரு, (கால் டாக்ஸி பெட்ரோல் பங்கிலிருந்து பூம்புகார் செல்லும் வழி), மயிலாடுதுறை-1.

இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், "மயிலாடுதுறை மாவட்ட தகுதியுள்ள இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி மத்திய அரசுப் பணியில் சேர வேண்டும். விருப்பமுள்ளவர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வந்தோ அல்லது 9499055904 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்குத் தங்கள் விவரங்களை அனுப்பியோ முன்பதிவு செய்து கொள்ளலாம். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

உதவிக்கு அணுகவும்:

 வாட்ஸ்அப் எண்: 9499055904

முகவரி: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பாலாஜி நகர், மயிலாடுதுறை.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு: மயிலாடுதுறையில் அரசு பள்ளியில் 38 ஆசிரியர் பணியிடங்கள் - ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
ஆசிரியர் வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு: மயிலாடுதுறையில் அரசு பள்ளியில் 38 ஆசிரியர் பணியிடங்கள் - ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
உதயசூரியன் சின்னம்... மதிமுக கொடி... சீர்காழி எம்.எல்.ஏ செந்தில்செல்வனின் 'ட்விஸ்ட்' அரசியல் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
உதயசூரியன் சின்னம்... மதிமுக கொடி... சீர்காழி எம்.எல்.ஏ செந்தில்செல்வனின் 'ட்விஸ்ட்' அரசியல் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
மயிலாடுதுறை ஆணவக் கொலை சந்தேகம்: காதலி வீட்டை அடித்து நொறுக்கிய கும்பல்; அலறிய பெண்கள்!
மயிலாடுதுறை ஆணவக் கொலை சந்தேகம்: காதலி வீட்டை அடித்து நொறுக்கிய கும்பல்; அலறிய பெண்கள்!
மண்ணையும் காத்து, மனிதர்களையும் காக்கும் உயிர்ம வேளாண்மை! கலெக்டர் சொன்ன முக்கிய அட்வைஸ்!
மண்ணையும் காத்து, மனிதர்களையும் காக்கும் உயிர்ம வேளாண்மை! கலெக்டர் சொன்ன முக்கிய அட்வைஸ்!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exclusive : ‘அரசு வழக்கறிஞர்களின் பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
‘பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Skoda Kodiaq RS Sold Out: தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
DMK Paranthamen : ’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு, லைம் லைட்டுக்கு வந்த பரந்தாமன்’ திமுகவில் அதிரடி மாற்றம்..!
’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு’ முன்னேறி வந்த பரந்தாமன் !
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
Embed widget