மேலும் அறிய

மயிலாடுதுறை மக்களே நிம்மதியா இருங்க.. நாளைக்கு கரண்ட் கட் இல்லை; மின்வாரியம் தந்த "சர்ப்ரைஸ்" அப்டேட்!

மயிலாடுதுறையில் நாளை ஜூன் 20-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த மாதாந்திர மின் நிறுத்தத்தை திடீரென மின்வாரியம் வாபஸ் பெற்றுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகர் (அர்பன்) மற்றும் பெரம்பூர் ஆகிய முக்கிய துணைமின் நிலையங்களில், நாளைய தினம் சனிக்கிழமை (20.06.2026) அன்று அறிவிக்கப்பட்டிருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் அதற்கான மின் நிறுத்தம் அதிரடியாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. நிர்வாகக் காரணங்களால் இந்த மின் தடை ரத்து செய்யப்படுவதாகவும், அன்றைய தினம் வழக்கம்போல் தடையற்ற மின் விநியோகம் இருக்கும் என்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உதவி செயற் பொறியாளர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். மின்சார வாரியத்தின் இந்த திடீர் மாற்ற அறிவிப்பால், சனிக்கிழமை மின்தடையை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்த மயிலாடுதுறை நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புற பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

முன்னர் வெளியான மின்வாரியத்தின் அறிவிப்பு

மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட 33/11 கி.வோ. மயிலாடுதுறை அர்பன் (நகர்) துணைமின் நிலையம் மற்றும் பெரம்பூர் ஆகிய இரு முக்கிய துணைமின் நிலையங்களில், உயர் அழுத்த மின் பாதைகளில் உள்ள பழுதடைந்த உபகரணங்களை மாற்றுதல், மின் கம்பிகளில் உராய்ந்து நிற்கும் மரக்கிளைகளை அகற்றுதல் மற்றும் மின்மாற்றிகளில் எண்ணெய் அளவைப் பரிசோதித்தல் உள்ளிட்ட அத்தியாவசிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.

இதன் காரணமாக, ஜூன் 20, 2026 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சுமார் 8 மணி நேரம் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று மயிலாடுதுறை நகர்/இயக்குதல் மற்றும் பராமரித்தல் உதவி செயற் பொறியாளர் பொறிஞர். M. விஜயபாரதி மற்றும் புறநகர்/இயக்குதல் மற்றும் பராமரித்தல் உதவி செயற் பொறியாளர் பொறிஞர். G. ரமேஷ் ஆகியோர் தனித்தனியே செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தனர்.

மின்தடை வாபஸ்: வழக்கம்போல் மின் விநியோகம் 

தற்போது மின் நிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள மயிலாடுதுறை நகர் மற்றும் பெரம்பூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சனிக்கிழமை அன்று எவ்வித தடையுமின்றி மின்சாரம் சீராக விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை நகர் துணைமின் நிலையப் பகுதிகள்

மயிலாடுதுறை அர்பன் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பஜார் மின்பாதை, திருவிழந்தூர் மின்பாதை, தருமபுரம் மின்பாதை மற்றும் அரசு பொது மருத்துவமனை (GH) ஆகிய மின்பாதைகளின் கீழ் வரும் பகுதிகள்.

முக்கிய தெருக்கள் மற்றும் சாலைகள்: 

* பழைய எஸ்பிஐ (SBI) தெரு

* மருத்துவமனை பகுதி

* மகாதான தெரு

* பெரிய கடைத்தெரு

* பூம்புகார் ரோடு

* தராசு சாலை

* தருமபுரம் மெயின் ரோடு

* சீர்காழி ரோடு

* பஜார் கடைத்தெரு

முக்கிய அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்

* மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்

ஏ.வி.சி. காலேஜ் பகுதி

குடியிருப்புப் பகுதிகள்

* மன்னன்பந்தல்

* ஆனந்த தாண்டவபுரம் ரோடு

* மாப்படுகை ரோடு 

* ஆழ்வார்குளம்

* திருவிழந்தூர் ஆகிய இடங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள்.

பெரம்பூர் துணைமின் நிலையப் பகுதிகள்

புறநகர் கோட்டத்தைச் சேர்ந்த பெரம்பூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறுகின்ற பின்வரும் கிராமப்புற பகுதிகள்

* பெரம்பூர்

* கடக்கம்

* கிளியனூர்

* சேத்தூர்

* மூத்தூர்

* எடக்குடி

* பாலூர்

* கொடைவிளாகம்

* ஆத்தூர் ஆகிய ஊர்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து கிராமப் பகுதிகளிலும் மின்தடை இருக்காது.

திடீர் ரத்திற்கான காரணம் என்ன?

முன்னதாக மின்வாரியம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பிலேயே, "அவ்வப்போது ஏற்படும் நிர்வாகக் காரணங்களைப் பொறுத்து மின்நிறுத்தம் செய்யப்படும் தேதி மற்றும் நேரம் தேவைப்படின் மாற்றி அமைக்கப்படும்" என்று குறிப்பாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி, தற்போது சில தவிர்க்க முடியாத நிர்வாகக் காரணங்களினாலும், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டும் இந்த மாதாந்திர பராமரிப்புப் பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறுஅறிவிப்பு வரும் வரை சனிக்கிழமை அன்று மின்சாரம் நிறுத்தப்பட மாட்டாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

"நிர்வாகக் காரணங்களால் ஜூன் 20 சனிக்கிழமை அன்று அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுகிறது. நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வழக்கம்போல் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும். பொதுமக்கள் தங்களின் அன்றாடப் பணிகளை எவ்வித தடையுமின்றி மேற்கொள்ளலாம்" என்று உதவி செயற் பொறியாளர்கள் தங்களது புதிய செய்திக்குறிப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நிம்மதி

வார இறுதி நாளான சனிக்கிழமைகளில் வங்கிகள், வணிக வளாகங்கள், பஜார் வீதிகளில் உள்ள கடைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மக்களின் நடமாட்டமும் பணிகளும் அதிகமாக இருக்கும். மேலும், கோடைக்காலத்தின் தாக்கம் முழுமையாகக் குறையாத நிலையில், 8 மணி நேர மின்தடை அறிவிப்பு பொதுமக்களிடையே, குறிப்பாகக் குடும்பப் பெண்களிடையே குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

விவசாயப் பெருமக்களும் பம்ப்செட்டுகளை இயக்க முடியாமல் விவசாயப் பணிகள் பாதிக்கப்படும் என்று கவலை அடைந்திருந்தனர். தற்போது மின்வாரியம் மின்தடை அறிவிப்பைத் திரும்பப் பெற்றுள்ளதால், வணிக நிறுவனங்கள் முதல் சாமானிய பொதுமக்கள் வரை அனைவரும் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த பராமரிப்புப் பணிகள் மீண்டும் எப்போது மேற்கொள்ளப்படும் என்பது குறித்த மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

இயற்கை வேளாண் பண்ணையை மீட்கக் கோரி மயிலாடுதுறையில் கொதித்தெழுந்த விவசாயிகள்!
இயற்கை வேளாண் பண்ணையை மீட்கக் கோரி மயிலாடுதுறையில் கொதித்தெழுந்த விவசாயிகள்!
"அரசு செய்யல... நாங்களே பண்ணிக்கிறோம்!" - ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டிய கிராமம்!
ஜப்பான், தைவான் பக்தர்களை ஈர்த்த தமிழ்நாட்டு ஆன்மீகம்: சீர்காழி ஒளிலாய குருபூஜை சிறப்பம்சங்கள்!
ஜப்பான், தைவான் பக்தர்களை ஈர்த்த தமிழ்நாட்டு ஆன்மீகம்: சீர்காழி ஒளிலாய குருபூஜை சிறப்பம்சங்கள்!
Mayiladuthurai Power Shutdown (06.10.2026) : மயிலாடுதுறையில் 5 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? - முழு விவரம்
Mayiladuthurai Power Shutdown (06.10.2026) : மயிலாடுதுறையில் 5 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? - முழு விவரம்

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Embed widget