வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்: யார் யாருக்குக் கிடைக்கும்? முழு விவரம் உள்ளே!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில்’ ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வீடு தேடி வர உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி.ஜே.பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை அவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று வழங்கும் உன்னதமான ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் ஜூலை மாததிற்கான வினியோகம் வரும் நாட்களில் நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் தங்களது இல்லங்களிலிருந்தபடியே எவ்வித சிரமமுமின்றிப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், ரேஷன் கடைகளுக்கு நேரில் வர இயலாத சூழலில் உள்ள மக்களுக்கு உதவவும் பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மிகவும் நலிவடைந்த பிரிவினருக்குத் துணையாக நிற்கும் நோக்கில் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதுதான் ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ ஆகும். இத்திட்டத்தின் மூலம், தகுதியான பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒன்றாகும்.
எந்தெந்த தேதிகளில் விநியோகம்?
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இத்திட்டத்தினைச் சீரிய முறையில் செயல்பட அனைத்துப் பூர்வாங்கப் பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன்படி, இந்த மாதத்திற்கான ஒதுக்கீடு பொருட்கள் வரும் 2026 ஜூலை மாதம் 04-ஆம் தேதி (சனிக்கிழமை) மற்றும் ஜூலை மாதம் 06-ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆகிய இரண்டு தினங்களில் இந்தச் சிறப்பு இல்லம் தேடி விநியோகப் பணி நடைபெறவுள்ளது.
ரேஷன் கடைகளில் வழக்கமாகப் பொருட்கள் விநியோகிக்கப்படும் நாட்களைத் தவிர்த்து, இந்த இரண்டு குறிப்பிட்ட நாட்களிலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக விநியோகப் பணிகள் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொய்வின்றி நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
பயனாளிகள் யார் யார்? தகுதிகள் என்ன?
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் இல்லம் தேடி ரேஷன் பொருட்களைப் பெறுவதற்குப் பின்வரும் நபர் அடங்கிய குடும்ப அட்டைதாரர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்;
65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள்: வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ரேஷன் கடைகளுக்கு நீண்ட தூரம் நடந்து வர இயலாத, அல்லது நீண்ட வரிசையில் காத்திருக்க முடியாத 65 வயதைக் கடந்த முதியவர்களைக் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள்.
மாற்றுத்திறனாளிகள்: உடல் ரீதியான சவால்களால் அன்றாடப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் உள்ள மாற்றுத்திறனாளி உறுப்பினர்களைக் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள்.
மேற்கண்ட தகுதிகளின் அடிப்படையில் கண்டறியப்பட்ட பயனாளிகளின் பட்டியலின்படி, ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை பணியாளர்கள் நேரடியாக அவர்களின் இல்லங்களுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்களைப் பாதுகாப்பாக ஒப்படைக்க உள்ளனர்.
முறைகேடுகளைத் தவிர்க்கத் தீவிர ஏற்பாடுகள்
வீடு தேடிச் சென்று பொருட்கள் விநியோகம் செய்யும் இந்த உன்னதத் திட்டத்தில் எவ்வித முறைகேடுகளும் தங்குதடையின்றி நடப்பதைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொருட்களை இல்லங்களுக்கு எடுத்துச் செல்லும்போது பயோ-மெட்ரிக் (Bio-metric) கருவிகள் அல்லது மாற்று அங்கீகார முறைகள் பயன்படுத்தப்பட்டு, உரிய பயனாளிகளிடமே பொருட்கள் சென்றடைவது 100% உறுதி செய்யப்படும். மேலும், தங்களுக்குரிய ரேஷன் பொருட்களின் அளவு மற்றும் தரம் சரியாக இருக்கிறதா என்பதைப் பயனாளிகள் தங்கள் வீடுகளிலேயே சரிபார்த்துக் கொள்ளலாம்.
மாவட்ட ஆட்சியரின் முக்கிய வேண்டுகோள்
இது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டமானது ஏழை, எளிய மற்றும் நலிவடைந்த மக்களின் பசியினைப் போக்கவும், அவர்களின் அலைச்சலைக் குறைக்கவும் கொண்டு வரப்பட்ட உன்னதமான திட்டமாகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும், வரும் ஜூலை 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தங்கள் இல்ல தேடி வரும் இந்தச் சேவையினைச் சரியாகப் பயன்படுத்திப் பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்."
மேலும், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஏதேனும் புகார்கள் அல்லது குறைபாடுகள் இருந்தால், பொதுமக்கள் உடனடியாக மாவட்ட வழங்கல் அலுவலகத்தையோ அல்லது கூட்டுறவுத்துறை அதிகாரிகளையோ தொடர்பு கொண்டு தங்களது புகார்களைப் பதிவு செய்யலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகத்தின் இந்த அதிரடி மற்றும் கனிவான நடவடிக்கை, கடலோர மாவட்ட மக்களின், குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மத்தியில் ஒரு தாயைப் போன்ற அரவணைப்பைத் தந்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Before You Go
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























