பாதிப்பு 30 ஆயிரம் ஏக்கர், ஆனால் அமைச்சர் சொல்லுவது 18 ஆயிரம் ஏக்கர் - புலம்பும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையால் 18 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
![பாதிப்பு 30 ஆயிரம் ஏக்கர், ஆனால் அமைச்சர் சொல்லுவது 18 ஆயிரம் ஏக்கர் - புலம்பும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் Minister Meyyanathan examined the crop damage caused by rain and flood in Mayiladuthurai district - TNN பாதிப்பு 30 ஆயிரம் ஏக்கர், ஆனால் அமைச்சர் சொல்லுவது 18 ஆயிரம் ஏக்கர் - புலம்பும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/eef54238e62b1d582c2a6ff4107152dc1704880157347733_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் பல்வேறு மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளாகியது. இந்நிலையில் காவிரி டெல்டா கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாலானது. குறிப்பாக தமிழகத்திலேயே அதிகபட்சமாக 24 சென்டிமீட்டர் மழையானது சீர்காழியில் பதிவாகியது. இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பயிர் பாதிப்புகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
PM Modi : "அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை இப்படி மாத்திக் காட்டுவேன்" - பிரதமர் மோடி உறுதி
முன்னதாக சீர்காழி அருகே கதிராமங்கலம், ஆத்துக்குடி கிராமத்தில் மழையால் பாதித்த சம்பா நெற்பயிர்களை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு அப்பகுதி விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து மயிலாடுதுறை அருகே சோலம்பேட்டை பகுதியில் மழை நீர் சூழ்ந்த வயல்வெளிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த 7 தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் பெய்த கனமழையால் நெற்பயிர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த 18 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 1000 ஆயிரம் ஏக்கரில் கடலை பயிர்செய்து ஒரு வார காலத்தில் இந்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளை மாவட்ட ஆட்சியர் தலைமையில், சீர்காழி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்கள், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் அனைவரும் ஒன்றாக பார்வையிட்டுள்ளோம். மேலும் வேளாண் துறை அதிகாரிகள் அனைத்து பகுதிகளையும் கணக்கெடுத்துள்ளனர். இதனை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிப்புக்குண்டான பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா. முருகன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல உடன் இருந்தனர்.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு அதில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மழை நீர் மூழ்கி வீணாகிய நிலையில், வேளாண் அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் கணக்கெடுப்பு நடத்தி விட்டதாகவும், அதில் வெறும் 18 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறுவது தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க முறையாக முழுமையாக கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Job Alert: ரூ.50,000 ஊதியம்: அரசு காப்பீட்டு நிறுவனத்தில் வேலை - உடனே விண்ணப்பிங்க!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)