கடைநிலை காவலர் தான் செய்யனும் இல்லை யார் வேண்டுமானாலும் செய்யலாம்; மயிலாடுதுறை எஸ்பி அப்படி என்ன செய்தார்?
சீர்காழி நகரப் பகுதி முழுவதும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் திடீரென அதிரடியாக ரோந்து சென்று வாகனப் போக்குவரத்தை சீரமைத்துள்ளார்.
சீர்காழி நகரப் பகுதி முழுவதும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் திடீரென அதிரடியாக ரோந்து சென்று வாகனப் போக்குவரத்தை சீரமைத்து சென்றது பொதுமக்களின் பாராட்டுகளை பெற்றது.
மாவட்ட அதிகாரிகள்
பொதுவாக மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அவர்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளை சரியாக வேலை வாங்கி அதன் மூலம் நிர்வாகத்தை செய்து வருவார்கள். ஆனால் ஒரு சில மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், அவ்வாறு தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளை வேலை வாங்கி நிர்வாகத்தை திறம்படச் செய்தாலும், ஒரு சில நேரங்களில் அவர்களாகவே களத்தில் இறங்கி சில பணிகளை செய்வது பொதுவாக பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பாராட்டுகளையும் பெறும். அதேபோன்ற ஒரு நிகழ்வு தான் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் கடைசி 38 வது மாவட்டம்
தமிழகத்தில் கடைசி 38 வது மாவட்டம் மயிலாடுதுறை மாவட்டம். இங்கு மயிலாடுதுறை மற்றும் சீர்காழி ஆகிய இரண்டு நகராட்சிகள் உள்ளது. மேலும் சீர்காழி தாலுக்காவை சேர்ந்த சுற்றுவட்டார கிராம மக்களின் தாலுக்கா அலுவலகம், நீதிமன்றம், காவல்நிலையம், பள்ளி கல்லூரிகள் என பல்வேறு தேவைகளுக்காக நாள்தோறும் ஏராளமான மக்கள் சீர்காழி நகருக்கு படையெடுக்கின்றனர். இதன் காரணமாக சீர்காழி நகர் முழுவதும் எப்போதும் மக்கள் கூட்டம் போக்குவரத்து நெரிசல் என எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
Bigg Boss 8 : ரெடியா மக்களே... விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் துவக்க விழா அறிவிப்பு
போக்குவரத்து இடையூறு
மேலும் சீர்காழியில் பிரதான வீதிகளான கடைவீதி, கொள்ளிட முக்கூட்டு, பிடாரி வடக்கு வீதி, பழைய பேருந்து நிலையம், தென்பாதி, கச்சேரி ரோடு, புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் வருகை அதிக அளவு இருக்கும். இப்பகுதியில் அமைந்துள்ள வணிக கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலைகளில் நிறுத்துவதால் பிரதான சாலைகளில் போக்குவரத்து இடையூறும் நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது. இதனை கண்காணித்து தடுக்க சீர்காழி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் ரோந்து வருவது வழக்கம்.
களத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக சீர்காழி நகர் பகுதியில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நகரில் உள்ள பிரதான வீதிகள் மற்றும் அனைத்து வீதிகளிலும் எஸ்.பி. ஸ்டாலின் தனது வாகனத்தில் அதி விரைவு படை போலீஸாருடன் ரோந்து சென்றார். சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்து எடுக்க அறிவுறுத்தினார். அதேபோல் சாலைகளில் ஆங்காங்கே பொதுமக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்களையும் கலைந்து போக சொல்லி ஒலிபெருக்கியில் அறிவுறுத்தினார். சீர்காழி பகுதியில் இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளரே நேரடியாக ரோந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றது.