மேலும் அறிய

பூம்புகாரில் இருந்து விவசாயிகள் நீதி கேட்கும் பேரணி - பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

தமிழக விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 10-ஆம் தேதி பூம்புகாரில்  பேரணி துவக்க உள்ளதாக பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் கலந்து கொண்டு ராசிமணல் அணை கட்டுமானப்பணியை துவங்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி ஜூன் 10ஆம் தேதி பூம்புகார் பேரணி துவங்குவது தொடர்பான துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். 

செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர். பாண்டியன்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி, அமராவதி, சிறுவாணி உள்ளிட்ட அனைத்து நதிநீர் உரிமைகளும் பறிபோகி வருகிறது. இதனை மீட்டு எடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக மத்திய மாநில அரசுகள் பொறுப்புகளை தட்டி கழித்து வருகிறது. மேகதாது அணை கட்டினால் தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் இழந்து விடும். அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  கடந்த ஒரு வாரமாக அனைத்து விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை செய்து வருகிறோம். அடுத்த அடுத்த கட்ட போராட்டத்தை தீவிரமாக்கும் வகையில் சிறுவாணி அணையில் சிலந்தி ஆற்றில் அணைகட்ட எதிர்க்கும் கேரள அரசை கண்டித்து கேரள எல்லையை முற்றுகையிட உள்ளோம். 

Mettur Dam: ஜூன் மாதம் 12-ஆம் தேதி திறக்கப்படுமா மேட்டூர் அணை? டெல்டா விவசாயிகள் கூறுவது என்ன

பூம்புகாரில் இருந்து விவசாயிகள் நீதி கேட்கும் பேரணி - பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

துணை போகும் தமிழக அரசு 

காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது அணைகட்ட தீர்மானம் நிறைவேற்றியது உச்ச நீதிமன்றத்திற்கு எதிரானது. இதற்கு தமிழக அரசும் துணை போகிறது‌. வருகிற ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். மேலும் கடந்த ஆண்டு கர்நாடக அரசு நமக்கு வழங்க வேண்டிய 98 டிஎம்சி நிலுவை தண்ணீரையும் தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும். மேகதாது அணைக்கட்டும் பணியை தடுத்து நிறுத்தி வேண்டும். ராசி மணலில் அணைக்கட்ட மத்திய அரசு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவேரி கடைமடை பகுதியான பூம்புகார் முகத்துவாரத்தில் இருந்து விவசாயிகள் நீதி கேட்கும் பேரணி தொடங்க உள்ளது. 

SBI Sarvottam FD Scheme: மூத்த குடிமக்களுக்கு 7.90% வட்டி - எஸ்பிஐ வங்கியின் சர்வோத்தம் FD திட்டம் பற்றி தெரியுமா?

பூம்புகாரில் இருந்து விவசாயிகள் நீதி கேட்கும் பேரணி - பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

மேட்டூர் அணையை சென்றடையும் பேரணி

இந்த பேரணியானது மயிலாடுதுறை தஞ்சாவூர், திருச்சி, கரூர், நாமக்கல், தர்மபுரி வழியாக 12-ம் தேதி மேட்டூர் அணையை சென்றடையுள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதனூர்- குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணியை விரைந்து முடித்து தண்ணீரை தேக்கி தெற்கு ராஜன் வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். தற்பொழுது பருத்தி, நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் கோடை மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

பூம்புகாரில் இருந்து விவசாயிகள் நீதி கேட்கும் பேரணி - பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மயிலாடுதுறை மாவட்ட தலைவர் வைத்தியநாதன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், தலைவர் கணேசன், கௌரவ தலைவர் நடராஜன்,துணைச் செயலாளர் கொள்ளிடம் பன்னீர்செல்வம்,ஆச்சாள்புரம் இளங்கோவன் கடலூர் மாவட்ட செயலாளர் மணி கொள்ளை ராமச்சந்திரன்,கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
Abp Nadu Impact:  ஏபிபி நாடு செய்தி எதிரொலி-  தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
ஏபிபி நாடு செய்தி எதிரொலி- தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
Breaking News LIVE: மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் ராகுல் காந்தி - காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆரவாரம்
Breaking News LIVE:மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் ராகுல் காந்தி - காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆரவாரம்
Congress MP:
Congress MP: "தமிழ்க் கடவுள் முருகன் மீது" திரும்பி பார்க்க வைத்த மயிலாடுதுறை எம்.பி.யின் பதவியேற்பு!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
Abp Nadu Impact:  ஏபிபி நாடு செய்தி எதிரொலி-  தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
ஏபிபி நாடு செய்தி எதிரொலி- தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
Breaking News LIVE: மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் ராகுல் காந்தி - காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆரவாரம்
Breaking News LIVE:மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் ராகுல் காந்தி - காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆரவாரம்
Congress MP:
Congress MP: "தமிழ்க் கடவுள் முருகன் மீது" திரும்பி பார்க்க வைத்த மயிலாடுதுறை எம்.பி.யின் பதவியேற்பு!
Madurai:
Madurai: "காட்டுப்பன்றி உலா, மதுப்பிரியர்கள் கேலி" மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு பிறக்குமா விடிவு காலம்?
Kalki 2898 AD: ஆர்.ஆர்.ஆர் படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்குமா பிரபாஸின் கல்கி? ரசிகர்கள் ஆர்வம்
Kalki 2898 AD: ஆர்.ஆர்.ஆர் படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்குமா பிரபாஸின் கல்கி? ரசிகர்கள் ஆர்வம்
தென்காசி: அரசு பேருந்தில் ஆபத்தை ஏற்படுத்தும் பிளக்ஸ் பேனர்..! அச்சத்தில் வாகன ஓட்டிகள்..!
தென்காசி: அரசு பேருந்தில் ஆபத்தை ஏற்படுத்தும் பிளக்ஸ் பேனர்..! அச்சத்தில் வாகன ஓட்டிகள்..!
Chennai HC Judge On Caste: தீர்ப்புகளில் ஜாதி, மதம் - உடலில் அணிந்திருப்பதை பார்த்து தீர்ப்பு வழங்கமாட்டேன் - நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து
Chennai HC Judge On Caste: தீர்ப்புகளில் ஜாதி, மதம் - உடலில் அணிந்திருப்பதை பார்த்து தீர்ப்பு வழங்கமாட்டேன் - நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து
Embed widget