மேலும் அறிய

Mayiladuthurai Power Shutdown (18.12.2025) : இங்கெல்லாம் இன்று மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?

Mayiladuthurai Power Shutdown 18.12.2025: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று (18.12.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்த நேரம் 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 3 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

மணல்மேடு, மயிலாடுதுறை, பேச்சாவடி மற்றும் பெரம்பலூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மின் கோட்டம் மற்றும் சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட மணல்மேடு, மயிலாடுதுறை, பேச்சாவடி மற்றும் பெரம்பலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் 18.12.2025 இன்றைய தினம் வியாழக்கிழமை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என சீர்காழி செயற்பொறியாளர் மூர்த்தி மற்றும் உதவி செயற்பொறியாளர் ரமேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் 

மயிலாடுதுறை துணை மின்நிலையம் 

* கிளியனூர் 

* அகர கீரங்குடி

* எலந்தங்குடி

* அரிவளூர் 

பெரம்பூர் துணை மின் நிலையம்

* பெரம்பூர் 

* கடக்கம்

* கிளியனூர் 

* சேத்தூர் 

* முத்தூர்

* எடக்குடி

* பாலூர்

*கொடைவிளாகம்

* ஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்கள்

மணல்மேடு துணை மின் நிலையம் 

* மணல்மேடு 

* ராதா நல்லூர் 

* கிழாய் 

* கடலங்குடி 

* திருமங்கலம் 

* காளி

* இளந்தோப்பு

* பட்டவர்த்தி

* மண்ணிப்பள்ளம்

* சித்தமல்லி

* வடவாஞ்சார்

* திருச்சிற்றம்பலம்

* திருவாளப்புத்துர்

* வரதம்பட்டு

* நமச்சிவாயபுரம் 

* ஆத்தூர்

* நராயணமங்கலம்

* பாண்டூர்

ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறுதலுக்கு உட்பட்டது 

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்

மயிலாடுதுறை கோட்டத்தின் உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில், இந்தப் பணிகளின் காரணமாக ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

*மேலும் மின் நிறுத்தம் காரணமாக, குடிநீர் விநியோகம், மருத்துவமனைகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 * மாலையில் 05.00 மணிக்கு முன்னரே பணிகள் நிறைவு பெற்றால், உடனடியாக மின் விநியோகம் வழக்கம் போல் தொடங்கப்படும் என்றும், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

* இப்பணி குறித்து மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், குத்தாலம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

இந்த அறிவிப்பானது, தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட உதவி செயற்பொறியாளர்  விடுக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதி செய்தி! சிபில் ஸ்கோர் பார்க்காமல் கடன் வழங்கும் இந்தியன் வங்கி!
டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதி செய்தி! சிபில் ஸ்கோர் பார்க்காமல் கடன் வழங்கும் இந்தியன் வங்கி!
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!
10 நாட்கள்... 35 மாற்றுத்திறனாளிகள்... மாற்றத்தை நோக்கிப் பாயும் மயிலாடுதுறை! முழு விபரம் உள்ளே!
10 நாட்கள்... 35 மாற்றுத்திறனாளிகள்...மாற்றத்தை நோக்கிப் பாயும் மயிலாடுதுறை! முழு விபரம் உள்ளே!
ஸ்மார்ட் போன் வச்சிருக்கீங்களா? அப்போ மயிலாடுதுறை கலெக்டரின் இந்த மெசேஜ் உங்களுக்குத்தான்!
ஸ்மார்ட் போன் வச்சிருக்கீங்களா? அப்போ மயிலாடுதுறை கலெக்டரின் இந்த மெசேஜ் உங்களுக்குத்தான்!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TTV Statement : விஜய் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் போலி கடிதம்.! என் புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க- சீறிய டிடிவி
விஜய் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் போலி கடிதம்.! என் புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க- சீறிய டிடிவி
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
Embed widget