அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக 500 குடைகளை வழங்கிய விவசாயி - எங்கே தெரியுமா?
சீர்காழி அருகே 500 பள்ளி மாணவ மாணவிகளுக்கு மழைக்காலத்தில் தடையின்றி பள்ளிக்கு சென்று வரும் வகையில் இலவசமாக குடைகளை வழங்கியுள்ள விவசாயின் செயல் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.
சீர்காழி அருகே அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மழைக்காலத்தில் தடையின்றி பள்ளிக்கு சென்று வருவதற்காக இயற்கை விவசாயி ஒருவர் இலவசமாக குடைகள் வழங்கிய நிகழ்வு பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை பதிவாகி வருகிறது. மேலும் அவ்வப்போது கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் சில நேரங்களில் மழை பொழிவின்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதில்லை இதனால் பள்ளி மாணவர்கள் மலையில் நனைந்து பள்ளிக்கு செல்லும் சூழல் அவ்வப்போது ஏற்படுகிறது.
விஜய் போட்ட உத்தரவு... விழுப்புரம் மக்களுக்காக மயிலாடுதுறை மாவட்ட தவெகவினர் செய்த உதவி..!
மழையால் தடைப்பட்ட கல்வி
மேலும், மயிலாடுதுறை மாவட்டம் ஏழை எளிய விவசாய கூலி தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டம், மேலும் அவர்களின் குழந்தைகள் அனைவரும் அரசு பள்ளியில் பயின்று வருகின்றன. இந்த சூழலில் மழைக்காலத்தில் குழந்தைகளை நாங்கள் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். எங்களிடம் குடைகள் இல்லை புதிதாக வாங்க வசதியும் இல்லை. இதனால் பல சமயங்களில் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு மழை நேரங்களில் அனுப்புவது கிடையாது என்கின்றனர் சில பெற்றோர்கள்.
IND vs AUS 2nd Test : அந்த இடம் எனக்கு வேணாம்.. ராகுலே ஆடட்டும்.. தியாகம் செய்த ரோகித்
இயற்கை விவசாயி
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர் வடகிழக்குப் பருவமழையை கருத்தில் கொண்டு தனது சொந்தப் பணத்தில் குடைகள் வாங்கி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ள சம்பவம் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அகரவட்டாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன். இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இவர் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு ஆண்டுதோறும் மழைக்காலத்தில் தடையின்றி பள்ளிகளுக்கு சென்று கல்வி பயில ஏதுவாக குடைகள் வழங்கி வருகிறார்.
இலவசமாக வழங்கிய 500 குடைகள்
அதன்படி, இந்தாண்டு மழைகாலத்தை அடுத்து சீர்காழி அருகே நல்லநாயகபுரம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, தொடுவாய் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, மாதானம், எருக்கூர் ஆகிய கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் சுமார் 500 மாணவ - மாணவிகளுக்கு குடைகளை வழங்கியுள்ளார். இவரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.