மேலும் அறிய

பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் மீது மாணவர்கள் கொடூரத் தாக்குதல்; மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பு!

மயிலாடுதுறை அருகே அரசுப் பள்ளியில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த முதுநிலை ஆசிரியர் மீது மாணவர்கள் சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த முதுநிலை ஆசிரியர் ஒருவரை மாணவர்கள் கும்பலாகச் சேர்ந்து தாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், படுகாயமடைந்த ஆசிரியர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

பள்ளியில் நிலவிய உட்பூசலும் மனக்கசப்பும்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகாவுக்கு உட்பட்ட எலந்தங்குடி வேழமுறித்தான் பேட்டை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் முதுநிலை உயிரியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பள்ளியின் நிர்வாகம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் ஆசிரியர் சதீஷுக்கும், அதே பள்ளியின் தலைமை ஆசிரியர் பரமசிவம் மற்றும் முதுநிலை வரலாற்று ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோருக்கும் இடையே கடந்த சில காலமாகவே கடும் மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. பள்ளியில் நிலவிய இந்த ஆசிரியர்களுக்கு இடையேயான உட்பூசல், மாணவர்களின் ஒழுங்கீனத்திற்கு வழிவகுத்ததா என்ற கோணத்திலும் தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.

வகுப்பறையில் அரங்கேறிய கொடூரத் தாக்குதல்

இத்தகைய சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசிரியர் சதீஷ் வழக்கம்போல் வகுப்பறைக்குச் சென்று மாணவர்களுக்கு உயிரியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அங்கு இருந்த மாணவர்கள் சிலர், எவ்வித அச்சமுமின்றி ஆசிரியர் சதீஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஆசிரியர் சதீஷைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கியதாக சொல்லப்படுகிறது.

மாணவர்களின் இந்த எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து போன ஆசிரியர் சதீஷ், மாணவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோதும் மாணவர்கள் அவரை விடாமல் தாக்கியதாகக் கூறப்படுகிறது. வகுப்பறைக்குள் மாணவர்கள் ஆசிரியரைத் தாக்கும் காட்சிகளை அங்கிருந்த சக மாணவர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.

அடித்து உடைக்கப்பட்ட வாகனங்கள்  

ஆசிரியர் மீதான தாக்குதலோடு ஆத்திரம் அடங்காத அந்த மாணவர்கள், பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் சதீஷின் இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும், அங்கிருந்த மற்றொரு பெண் ஆசிரியரின் இருசக்கர வாகனத்தையும் அந்த மாணவர்கள் அடித்து உடைத்துள்ளனர்.

பள்ளி வளாகத்திற்குள்ளேயே மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வாகனங்களைச் சேதப்படுத்திய சம்பவம், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியது. உடனடியாகப் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் சக ஆசிரியர்கள் விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மாணவர்களின் தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் சதீஷை சக ஆசிரியர்கள் மீட்டு, மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி மற்றும் ஆரம்பக்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இருப்பினும், அவரது உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக மேல்சிகிச்சைக்காக அவர் அங்கிருந்து மாற்றப்பட்டார். தற்போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆசிரியர் சதீஷுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வைரலாகும் வீடியோவும் விசாரணை கோரிக்கையும்

இந்தச் சம்பவம் நடந்து சில நாட்கள் கடந்த நிலையில், வகுப்பறையில் ஆசிரியர் சதீஷை மாணவர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன. கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியருக்கே வகுப்பறைக்குள் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதைக் கண்டு கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பள்ளியில் ஆசிரியர்களுக்கு இடையே இருந்த முன்விரோதத்தைத் தூண்டிவிட்டு, மாணவர்களைத் தவறான பாதையில் வழிநடத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது மாணவர்களின் ஒழுங்கீனமே இதற்குக் காரணமா என்பது குறித்துப் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வலுத்துள்ளது. மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீதும், இதற்குத் தூண்டுதலாக இருந்தவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

நாங்கள் என்ன நக்சல்பாரி அமைப்பினரா..? ஊடகவியலாளர் ஜீவ சகாப்தத்திற்கு எதிராக திரண்ட வன்னியர்கள்.
நாங்கள் என்ன நக்சல்பாரி அமைப்பினரா..? ஊடகவியலாளர் ஜீவ சகாப்தத்திற்கு எதிராக திரண்ட வன்னியர்கள்.
தவெக-வின் 6 மாத ஆட்சி எப்படி? நயினார் நாகேந்திரன் கொடுத்த பரபரப்பு பேட்டி!
தவெக-வின் 6 மாத ஆட்சி எப்படி? நயினார் நாகேந்திரன் கொடுத்த பரபரப்பு பேட்டி!
தருமபுரம் Vs திருவாவடுதுறை ஆதீனம்: மாயூரநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாவில் சர்ச்சை!  
தருமபுரம் Vs திருவாவடுதுறை ஆதீனம்: மாயூரநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாவில் சர்ச்சை!  
அறுபடை வீடுகளுக்கு இணையான திருவிடைக்கழியில் கந்த சஷ்டி விழா தொடக்கம்! ஒரே சன்னதியில் சிவன்-முருகன் தரிசனம்..
அறுபடை வீடுகளுக்கு இணையான திருவிடைக்கழியில் கந்த சஷ்டி விழா தொடக்கம்! ஒரே சன்னதியில் சிவன்-முருகன் தரிசனம்..
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sterlite: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு.. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம்! எவ்வளவு தெரியுமா?
Sterlite: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு.. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம்! எவ்வளவு தெரியுமா?
"பாக்ஸ் ஆபீஸை வேட்டையாட வரும் விஜய் படம்” - 2027 ஜனவரி 1-ல் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் - என்ன படம் தெரியுமா?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (12-11-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (12-11-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
No-Confidence Motion : ’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ எதிர்க்கட்சிகள் கொண்டு வர முடியுமா? என்ன நடக்கும் ?
’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ என்ன நடக்கும் ?
சென்னையில் மழை பெய்யுமா? பெய்யாதா? - வானிலை மையத்தின் 7 நாள் மேஜர் அப்டேட்!
சென்னையில் மழை பெய்யுமா? பெய்யாதா? - வானிலை மையத்தின் 7 நாள் மேஜர் அப்டேட்!
துப்பாக்கிச்சுடுதலில் வெண்கலம் - ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று இந்தியர் அசத்தல்!
துப்பாக்கிச்சுடுதலில் வெண்கலம் - ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று இந்தியர் அசத்தல்!
வணிகக்கப்பல் மீதான தாக்குதலில் இந்திய மாலுமிகள் படுகாயம்! - பாரசீக வளைகுடாவில் நடந்தது என்ன?
வணிகக்கப்பல் மீதான தாக்குதலில் இந்திய மாலுமிகள் படுகாயம்! - பாரசீக வளைகுடாவில் நடந்தது என்ன?
துப்பாக்கிச்சூட்டில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 3 பேர் படுகாயம் - என்ன நடந்தது காஷ்மீரில் ?
துப்பாக்கிச்சூட்டில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 3 பேர் படுகாயம் - என்ன நடந்தது காஷ்மீரில் ?
Embed widget