கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த மனைவி - உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய மயிலாடுதுறை எம்பி...!
சீஷெல்ஸ் நாட்டில் உயிரிழந்த தமிழரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா எடுத்த நடவடிக்கை பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

தமிழக மீனவர்கள் விடுதலையை தொடர்ந்து, சீஷெல்ஸ் நாட்டில் உயிரிழந்த தமிழரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர தொடர் முயற்சிகளை எடுத்துவரும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதாவின் செயல்பாடு தொகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது வருகிறது.
வெளிநாட்டு உயிரிழந்த தமிழர்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சி அச்சுதராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் என்பவரது மகன் 40 வயதான மகேந்திரன். இவர் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு பணிபுரிந்து வருகிறார். சீஷெல்ஸ் நாட்டில் உள்ள அபெக்ஸ் ஹோட்டல் சப்ளைஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் கீழ் பணிபுரிந்து வந்த மகேந்திரன் கடந்த நவம்பர் 03 -ம் தேதி உயிரிழந்துள்ளார்.
மயிலாடுதுறை எம்பியிடம் கோரிக்கை மனு
இது குறித்த தகவல்கள் அவரது மனைவி வித்யாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவர் இறப்பு செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த வித்யா, தனது கடைசியாக தனது கணவரின் உடலையாவது பார்த்துவிட வேண்டும் என முடிவெடுத்து இது தொடர்பாக மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதாவிடம் கோரிக்கை மனு ஒன்றினை அளித்து, தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துவர உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நடவடிக்கையில் இறங்கிய எம்பி
இதனை அடுத்து மனுவை பெற்றுக்கொண்ட மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா உடனடியாக இது தொடர்பாக சம்பத்தப்பட்ட வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீஷெல்ஸ் தூதரகம் மற்றும் சீஷெல்ஸ் நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு உயிரிழந்த மகேந்திரனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வலியுத்து கடிதம் எழுதியுள்ளார்.
எம்பிக்கு பதில் கடிதம்
அதனை தொடர்ந்து ஷெசீல்ஸ் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் இறந்த மகேந்திரனின் உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்காக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதனை தொடர்ந்து அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதாவிற்கு பதில் கடிதம் அனுப்புயுள்ளனர்.
Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறையில் நாளை மின் நிறுத்தம் - எங்க எங்கெல்லாம் தெரியுமா...?
மக்கள் பாராட்டு
மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினராக சுதா வெற்றி பெற்று நாளிலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி குறித்த பணிகளை மேற்கொண்டு மக்களின் அபிமானங்களை பெற்று வருகிறார். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினரால் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 37 பேர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்களை விடுதலை செய்வதற்காக, இலங்கை பிரதமர், இந்திய பிரதமர் என பலருக்கும் கடிதம் எழுதி அதன் விளைவாக கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே மீனவர்கள் விடுதலையாகி சொந்த ஊர் திரும்பினர். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மீனவ மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சுதாவை அழைத்து அவர்களது இல்லத்தில் விழுந்து வைத்து நன்றி தெரிவித்தனர். மேலும் ரயில் வசதி, அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவது தொடர்பாக அரசு பள்ளிகளில் ஆய்வு என அடுத்தடுத்து அவர்களின் செயல்பாட்டு பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

