மேலும் அறிய

இனி குற்றங்களை பார்த்துவிட்டு மக்கள் சும்மா இருக்க கூடாது - மயிலாடுதுறை எஸ்.பி

மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்கப்பட்டாலும், குற்றச்சம்பவங்கள் நடந்தாலும் உடனே என்னை செல்போனில் தொடர்பு கொள்ளுங்கள் என மயிலாடுதுறை எஸ்பி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை குறைக்கும் முயற்சியாக காவல் துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு சமூக கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் கஞ்சா, கள்ளச்சாராயம், குட்கா, கூல்லிப் போன்ற பொருட்கள் தங்களது பகுதியில் விற்கப்பட்டாலும், குற்றச்சம்பவங்கள் நடந்தாலும் 9442626792 இந்த நம்பரில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் நல்லுறவு சமூக கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை குறைக்கும் முனைப்புடன் மாவட்ட காவல்துறை பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கரும்புள்ளி கிராமங்களில் முதற்கட்டமாக காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் சமூக கூட்டங்கள் நடத்தப்படுகிறது. மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகை கிராமத்தில் நடைபெற்ற நல்லுறவு சமூக கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.


இனி குற்றங்களை பார்த்துவிட்டு மக்கள் சும்மா இருக்க கூடாது - மயிலாடுதுறை எஸ்.பி

பொதுமக்களிடம் இடையே எஸ்பி பேச்சு 

அப்போது அவர் பேசுகையில், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, கள்ளச்சாராயம், குட்கா, கூல்லிப் போன்ற பொருட்கள் தங்களது பக்தியில் விற்கப்பட்டால் காவல் துறைக்கு தகவல் தாருங்கள். உங்களது கிராமத்தை போதை பொருட்கள் இல்லாத கிராமமாக உருவாக்க கண்டிப்பாக காவல் துறை உதவியாக இருப்போம் என உறுதியளித்தார். மேலும், திருட்டு உள்ளிட்ட சம்பவங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கும் வழிமுறைகளை விளக்கி கூறினார். 


இனி குற்றங்களை பார்த்துவிட்டு மக்கள் சும்மா இருக்க கூடாது - மயிலாடுதுறை எஸ்.பி

பெண்பிள்ளைகளை திட்டாதீர்கள்

மனித உயிர் சாதாரணமானது கிடையாது. அது விலை மதிப்பற்றது. தங்களது உயிரை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் எக்காரணத்தை கொண்டும் தற்கொலை முயற்சிக்கு செல்லவேண்டாம், தயவு செய்து தற்கொலையை கைவிடுங்கள். பெண்பிள்ளைகளிடம் எப்படி நடந்து கொள்வது என ஆண் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்கள், பெண்பிள்ளைகளை திட்டாதீர்கள்.

போதைப் பொருட்களின் விற்பனை மையமாக தமிழகம் மாறிவிட்டது: தினகரன் கடும் குற்றச்சாட்டு


இனி குற்றங்களை பார்த்துவிட்டு மக்கள் சும்மா இருக்க கூடாது - மயிலாடுதுறை எஸ்.பி

எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம் 

கஞ்சா, கள்ளச்சாராயம், குட்கா, கூல்லிப் போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் தங்களது பகுதியில் விற்கப்பட்டாலும், குற்றச்சம்பவங்கள் நடந்தாலும் 9442626792 இந்த நம்பரில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம். மேலும், ரோந்து பணி வரவேண்டும் என கோரிக்கை வைத்தீர்கள் அதனை ஏற்று இரவு நேரங்களில் உங்களது பகுதிக்கு ரோந்து பணிக்கு காவலர்களை அனுப்பி வைக்கின்றேன் என்றார்.


இனி குற்றங்களை பார்த்துவிட்டு மக்கள் சும்மா இருக்க கூடாது - மயிலாடுதுறை எஸ்.பி

ஹய் ஸ்பீடு வண்டி வாங்குவதை தவிர்த்துவிடுங்கள்

தங்களது பிள்ளைகளுக்கு ஹய் ஸ்பீடு வண்டி வாங்குவதை தவிர்த்துவிடுங்கள், சின்ன‌வண்டி வாங்கி கொடுங்கள். இருசக்கர வாகனம் இல்லாமல் இருக்க முடியாது, பெரிய வண்டி வாங்கித்தர கட்டாயம் ஏற்பட்டால் அவர்களால் சரியாக வாகனம் ஓட்ட முடியுமா? என பார்த்து வாங்கி கொடுங்கள். வண்டி ஓட்டிச்செல்லும்போது பிள்ளைகளிடம் உனக்காக இங்கு ஒரு குடும்பம் காத்துகிட்டு இருக்கு என சொல்லுங்கள்.


இனி குற்றங்களை பார்த்துவிட்டு மக்கள் சும்மா இருக்க கூடாது - மயிலாடுதுறை எஸ்.பி

தற்கொலை என்ற எண்ணம் யாருக்குமே வரவேண்டாம்‌

அதேபோல, கந்துவட்டி, சீட்டு வட்டி  இது போல தொந்தரவு இருந்தால் காவல் துறையில் தகவல் தாருங்கள், எந்த காரணத்திற்காகவும் தற்கொலை என்ற எண்ணம் யாருக்குமே வரவேண்டாம்‌ என அறிவுருத்தினர். இக்கூட்டத்தில் மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் திருப்பதி, மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

காவிரியில் புனித நீராடி... அக்னி குண்டத்தில் இறங்கி... மயிலாடுதுறையைச் சிலிர்க்க வைத்த அக்னி விழா!
காவிரியில் புனித நீராடி...அக்னி குண்டத்தில் இறங்கி... மயிலாடுதுறையைச் சிலிர்க்க வைத்த அக்னி விழா!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
விவசாயிகளே உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டுமா? மயிலாடுதுறையில் ஜூலை 30-இல் முக்கிய கூட்டம்!
விவசாயிகளே உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டுமா? மயிலாடுதுறையில் ஜூலை 30-இல் முக்கிய கூட்டம்!

வீடியோ

Kangana Ranaut on CJP Protest :”போராட்டமா இது வாந்தி வருது இவங்களை வளர்த்தது யார்?” மாணவர்களை அசிங்கப்படுத்திய கங்கனா
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
Embed widget