மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு இவ்வளவு பிரச்சினைகளா.. குவிந்த மனுக்கள்...

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 287 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் கடைக்கோடி மக்களும் தங்களின் நீண்ட காலப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நம்பிக்கையுடன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் இருந்து திரண்டு வந்திருந்த பொதுமக்களிடமிருந்து மொத்தம் 287 மனுக்கள் பெறப்பட்டன. அனைத்து மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஒரு வார காலத்திற்குள் மனுதாரர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்குச் சுழற்சி முறையில் உத்தரவிட்டார்.

பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகள்

மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், கூட்ட அரங்கிற்கு வருகை தந்த ஒவ்வொரு பொதுமக்களையும் சந்தித்து, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி உடனடியாகத் தீர்வுகாண வலியுறுத்தினார். மக்கள் அளிக்கும் மனுக்கள் மீதான நடவடிக்கைகளில் எந்தவித தொய்வும் இருக்கக் கூடாது என்றும், ஒவ்வொரு மனுவின் நிலையும் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்குத் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

பொதுமக்களால் அளிக்கப்பட்ட 287 மனுக்களில், பல்வேறு பிரிவுகளின் கீழ் அதிகப்படியான கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன. இதில், இளைஞர்கள் மற்றும் சுயதொழில் ஆர்வலர்களிடமிருந்து தொழிற்கடன் வழங்கக் கோரி அதிகபட்சமாக 36 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளான, இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 29 மனுக்களும், பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளோருக்கு ஆதரவாக, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 27 மனுக்களும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிலப்பிரச்சினைகள் மற்றும் பல்வேறு பொதுப் புகார்கள் தொடர்பான மனுக்களும் கணிசமான அளவில் பெறப்பட்டன.

பெறப்பட்ட முக்கிய மனுக்களின் பிரிவுகள் 

  • தொழிற்கடன் வழங்கக் கோரி - 36
  • பல்வேறு புகார்கள் தொடர்பாக - 35 
  • இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல் - 29
  • முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை - 27 
  • மாற்றுத்திறனாளிகள் நலன் (அடையாள அட்டை, உதவித்தொகை, உபகரணங்கள் - 21
  • அடிப்படை வசதிகள் கோரி சாலை, குடிநீர், மின்சாரம் - 18 
  • ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி - 15 
  • சட்டம் ஒழுங்கு தொடர்பாக - 13 
  • நில அபகரிப்பு மற்றும் நிலப் பிரச்னை - 12
  • குடும்ப அட்டை தொடர்பாக - 11
  • இலவச கான்கிரீட் வீடு வேண்டி - 10
  • வேலைவாய்ப்பு கோரி - 08
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் - 05
  • தொழிலாளர் நலன் தொடர்பாக - 04
  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மனுக்கள் - 09
  • இதர கோரிக்கைகள் - 34 என மொத்தம் - 287 

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவுக்கரம்

பொதுமக்களின் மனுக்களைப் பெற்றபின், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சுயதொழிலுக்கு ஊக்கம்: தையல் தொழிலில் ஆர்வம் கொண்ட 5 மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கு, தலா ரூ. 6,820 மதிப்புள்ள, மோட்டார் பொருத்தப்பட்ட அதிநவீன தையல் இயந்திரங்களை ஆட்சியர் வழங்கினார்.

தகவல் தொழில்நுட்ப அணுகுமுறை: கல்வி மற்றும் தகவல் தொடர்புகளை எளிதாக்கும் பொருட்டு, 2 பயனாளிகளுக்குத் தலா ரூ. 17,000 மதிப்பிலான ஸ்மார்ட் ஃபோன்களை அவர் வழங்கினார்.

இயற்கை வாழ்வுக்கான துணை: விபத்து அல்லது பிற காரணங்களால் உடல் உறுப்புகளை இழந்த 4 பயனாளிகளுக்கு, அவர்கள் சுயமாக நடமாடவும், தங்கள் அன்றாடப் பணிகளைச் செய்யவும் உதவும் வகையில், ரூ. 2,11,400 மதிப்பிலான செயற்கை கை மற்றும் செயற்கை கால்களை ஆட்சியர் வழங்கினார்.

மொத்தமாக, ரூ. 2,58,500 மதிப்பிலான இந்த நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றுவதாக அமைந்தன.

இந்தக் கூட்டத்தில், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, மாவட்ட வழங்கல் அலுவலர் அர்ச்சனா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்  உமாமகேஷ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மணிக்கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சித்ரா மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சட்டம்) அன்பழகன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சட்டமன்ற உறுப்பினரும்... சட்டமன்ற தொகுதி வேட்பாளரும்.. சீர்காழி சூடுபிடித்த தேர்தல் களம்...
சட்டமன்ற உறுப்பினரும்... சட்டமன்ற தொகுதி வேட்பாளரும்.. சீர்காழி சூடுபிடித்த தேர்தல் களம்...
நோய் தீர்க்கும் வைத்தியநாதர் சன்னதியில் குவிந்த பக்தர்கள்: சித்திரை முதல் நாளில் வைத்தீஸ்வரன் கோயிலில் சிறப்பு தரிசனம்!
நோய் தீர்க்கும் வைத்தியநாதர் சன்னதியில் குவிந்த பக்தர்கள்: சித்திரை முதல் நாளில் வைத்தீஸ்வரன் கோயிலில் சிறப்பு தரிசனம்!
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு தீர்த்தவாரி: புதன் பகவானுக்கு மகா அபிஷேகம்!
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு தீர்த்தவாரி: புதன் பகவானுக்கு மகா அபிஷேகம்!
"ஐந்து வருஷமா எங்க போனீங்க?” - பூம்புகாரில் தி.மு.க வேட்பாளர் நிவேதா முருகனைச் சுற்றிவளைத்த பொதுமக்கள்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pope Leo Vs Trump: “அவருக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்“; தன்னை விமர்சித்த ட்ரம்ப்புக்கு போப் லியோ தில்லான பதிலடி
“அவருக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்“; தன்னை விமர்சித்த ட்ரம்ப்புக்கு போப் லியோ தில்லான பதிலடி
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
’’இபிஎஸ்ஸை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்; எங்களையும் பேச வச்சிடாதீங்க’’- அன்புமணி
’’இபிஎஸ்ஸை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்; எங்களையும் பேச வச்சிடாதீங்க’’- அன்புமணி
China Warns America: “எங்க கப்பல் மேல கை வச்சா...“; அமெரிக்காவுக்கு சீனா நேரடி வார்னிங்; ரணகளமாகும் ஹார்முஸ் ஜலசந்தி
“எங்க கப்பல் மேல கை வச்சா...“; அமெரிக்காவுக்கு சீனா நேரடி வார்னிங்; ரணகளமாகும் ஹார்முஸ் ஜலசந்தி
USA Iran War: உரிமைய ஏத்துக்கங்க, இல்லைன்னா சண்டைக்கு வாங்க” - ஈரான் ”ஆபத்தானது” என சீனா வார்னிங்
USA Iran War: உரிமைய ஏத்துக்கங்க, இல்லைன்னா சண்டைக்கு வாங்க” - ஈரான் ”ஆபத்தானது” என சீனா வார்னிங்
Tata EV Car Offers: மின்சார கார்களுக்கு கோடைத் தள்ளுபடி! டாடாவின் எந்த EV காருக்கு எவ்ளோ ஆஃபர்?
Tata EV Car Offers: மின்சார கார்களுக்கு கோடைத் தள்ளுபடி! டாடாவின் எந்த EV காருக்கு எவ்ளோ ஆஃபர்?
CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
Mahindra Thar Price Hike: தார் SUV பிரியர்களுக்கு அதிர்ச்சி.! மீண்டும் விலையை உயர்த்திய மஹிந்திரா; அதுக்காக இவ்வளவா.?
தார் SUV பிரியர்களுக்கு அதிர்ச்சி.! மீண்டும் விலையை உயர்த்திய மஹிந்திரா; அதுக்காக இவ்வளவா.?
Embed widget