மேலும் அறிய

மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் சோகம்..!

சீர்காழி அருகே மின்னல் தாக்கியதில் பெண்மணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, நிம்மேலி ஊராட்சிக்கு உட்பட்ட சம்புவராயன் கோடங்குடி கிராமத்தில் நேற்று மாலை மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோடங்கிடி கிராமத்தில் நடந்த இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன், நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

அவ்வாறு பெய்து வரும் மழை 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று மாலை திடீரென காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் சம்புவராயன் கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நடராஜன் என்பவரது மனைவி 45 வயதான கொளஞ்சியாள். இவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக வயலில் விடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை வேளையில் மழை வருவதைக் கண்ட கொளஞ்சியாள், வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த தனது ஆடுகளை மழைக்கு ஒதுங்க ஓட்டி வரச் சென்றுள்ளார்.

பெண்னை தாக்கிய மின்னல் 

அப்போது, திடீரென இடி மின்னலுடன் கூடிய மழை கொட்டியது. வயலில் இருந்து கொளஞ்சியாள் ஆடுகளை ஓட்டி வரும்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்னல் தாக்கியது. மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மயங்கி விழுந்தார். இந்தக் கோரமான நிகழ்வை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கொளஞ்சியாளை காப்பாற்ற விரைந்துள்ளனர்.மின்னல் தாக்கியதில் நிலைகுலைந்த கொளஞ்சியாளை மீட்க கிராம மக்கள் முயற்சித்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் விரைந்து வந்து, கொளஞ்சியாளை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. மருத்துவமனையில் கொளஞ்சியாளைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மின்னல் தாக்கியதன் கடுமையான தாக்கத்தால் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சோகத்தில் மக்கள் 

இந்தச் செய்தி, கொளஞ்சியாளின் குடும்பத்தினருக்கும், கிராம மக்களுக்கும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி அரசு மருத்துவமனையில் கொளஞ்சியாளின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் குறித்த தகவல் அறிந்த சீர்காழி கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் வட்டாட்சியர் அருள்ஜோதி ஆகியோர் உடனடியாக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றனர். உயிரிழந்த கொளஞ்சியாளின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். வருவாய் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கொளஞ்சியாள் மின்னல் தாக்கியதால் தான் உயிரிழந்தார் என்பது உறுதியானது.

நிவாரணம் குறித்த அறிவிப்பு

இந்த துயரமான நேரத்தில் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அதிகாரிகள், அரசு சார்பில் நிவாரணம் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இயற்கை சீற்றங்களால் உயிரிழக்கும் நபர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் நிதி உதவி, கொளஞ்சியாளின் குடும்பத்திற்கும் கிடைக்க உரிய ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கை, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஒரு சிறிய ஆறுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போலீஸ் விசாரணை

இந்தச் சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்னல் தாக்கியதற்கான காரணங்கள் மற்றும் சம்பவம் நடந்த விதம் குறித்து போலீசார் விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர். வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து இந்த சம்பவத்தின் அறிக்கையை தயாரித்து, அரசின் உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்க உள்ளனர்.

இயற்கை சீற்றங்களின் பாதிப்பு

மழைக்காலங்களில் இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆண்டு தோறும் அதிகரித்து வருகின்றன. திறந்தவெளிகள், வயல்வெளிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் இருக்கும்போது இடி, மின்னல் தாக்க வாய்ப்புகள் அதிகம். இடி, மின்னல் ஏற்படும்போது திறந்தவெளிகளில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான இடங்களான வீடுகள், கட்டிடங்கள் அல்லது வாகனங்களுக்குள் தங்குவது பாதுகாப்பானது என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்துகிறது. இந்த துயரச் சம்பவம், இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. மேலும், இதுபோன்ற சமயங்களில் பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உயிர் சேதங்களை குறைக்கலாம். கொளஞ்சியாளின் மரணம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் கைகளால் விருது பெற ஒரு அரிய வாய்ப்பு: நீங்களும் தகுதியானவரா என்று பாருங்கள்!
முதலமைச்சர் கைகளால் விருது பெற ஒரு அரிய வாய்ப்பு: நீங்களும் தகுதியானவரா என்று பாருங்கள்!
சோழநாட்டு திருச்செந்தூர் திருவிடைக்கழியில் வைகாசி சதயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! 
சோழநாட்டு திருச்செந்தூர் திருவிடைக்கழியில் வைகாசி சதயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! 
மயிலாய் மாறிய அன்னை வழிபட்ட தலம்: மின்விளக்கு ஒளியில் மிதந்த மயூரநாதர் - கண்கொள்ளாக் காட்சி!
மயிலாய் மாறிய அன்னை வழிபட்ட தலம்: மின்விளக்கு ஒளியில் மிதந்த மயூரநாதர் - கண்கொள்ளாக் காட்சி!
மாணவிகள் பாதுகாப்பில் நோ காம்ப்ரமைஸ்! - எஸ்பி ஸ்டாலின் - கலெக்டர் ஸ்ரீகாந்த் காட்டிய அதிரடி ஆக்ஷன்!
மாணவிகள் பாதுகாப்பில் நோ காம்ப்ரமைஸ்! - எஸ்பி ஸ்டாலின் - கலெக்டர் ஸ்ரீகாந்த் காட்டிய அதிரடி ஆக்ஷன்!

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Central Minister on Hormuz: ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
Trump New Tariff: மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
Inverter Battery Tips: கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
Embed widget