மேலும் அறிய

துக்க நிகழ்வுக்குச் சென்று திரும்பியபோது நேரிட்ட கொடூரம்: சீர்காழி அருகே உலுக்கிய சோகம்!

சீர்காழி அருகே லாரிக்கு வழிவிட்டபோது ஷேர் ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்மணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் பகுதியில் இன்று நேரிட்ட கொடூர சாலை விபத்தில், ஷேர் ஆட்டோ ஒன்று சாலை ஓரப் பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஒரே கிராமத்தைச் சேர்ந்த 11 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

துக்க நிகழ்வுக்குச் சென்றபோது ஏற்பட்ட சோகம்

மயிலாடுதுறை மாவட்டம், குட்டியாண்டியூர் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், சீர்காழி அருகே உள்ள தொடுவாய் மீனவக் கிராமத்தில் வசிக்கும் தங்களது உறவினர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற துக்க நிகழ்வு (இறப்பு) ஒன்றில் பங்கேற்பதற்காக முடிவு செய்தனர். இதற்காக, அதே பகுதியைச் சேர்ந்த 12 பேர் கொண்ட குழுவினர் ஒரு ஷேர் ஆட்டோவை வாடகைக்கு எடுத்துக்கொண்டு இன்று காலை தொடுவாய் கிராமத்திற்குச் சென்றனர்.

அங்கு துக்க நிகழ்வில் கலந்துகொண்டு, தங்களது அஞ்சலியையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்ட அவர்கள், பின்னர் மதிய வேளையில் மீண்டும் தங்களது சொந்த ஊரான குட்டியாண்டியூர் கிராமத்திற்கு அதே ஷேர் ஆட்டோவில் புறப்பட்டனர்.

கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ஆட்டோ

ஆட்டோ சீர்காழி அடுத்த மங்கைமடம் கிராமச் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே அதிவேகமாக ஒரு லாரி வந்தது. குறுகலான அந்தச் சாலையில் லாரிக்கு வழிவிடுவதற்காக, ஆட்டோ ஓட்டுநர் வாகனத்தை இடதுபுறமாக, சாலை ஓரமாக ஒதுக்க முயன்றார்.

அப்போது, சாலையின் ஓரத்தில் இருந்த ஆழமான பள்ளத்தில் நிலைதடுமாறிய ஷேர் ஆட்டோ, கண் இமைக்கும் நேரத்தில் சாலையோரப் பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு 

விபத்து நடந்த உடனே, அருகில் இருந்த மங்கைமடம் கிராம மக்கள் மற்றும் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஆட்டோவின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை ஒவ்வொருவராக மீட்டனர்.

இருப்பினும், இந்த விபத்தின் கோரத் தாக்கத்தால் ஆட்டோவில் பயணம் செய்த குட்டியாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த கலையரசி (50) என்ற பெண்மணி, பலத்த தலைக்காயம் மற்றும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலைப் பார்த்த உறவினர்கள் விபத்து நடந்த இடத்திலேயே கதறி அழுதது பார்ப்போரின் நெஞ்சைக் உருக வைப்பதாக இருந்தது.

11 பேர் படுகாயம் - தீவிர சிகிச்சை

மேலும், இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த குழந்தைகள், பெண்கள் உட்பட மீதமுள்ள 11 பேரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெண்காடு காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த 11 பேரையும் மீட்டு உடனடியாக சீர்காழி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 பேருக்கும் அங்குள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

போலீசார் விசாரணை மற்றும் போக்குவரத்து பாதிப்பு

உயிரிழந்த கலையரசியின் உடலை மீட்ட திருவெண்காடு போலீசார், உடற்கூறாய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்குள்ளான ஆட்டோவை சாலையிலிருந்து அகற்றி, இச்சம்பவம் குறித்து திருவெண்காடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரைத் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த விபத்தின் காரணமாக சீர்காழி - மங்கைமடம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துக்க நிகழ்வுக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது நேரிட்ட இந்த விபத்தும், பெண்மணி ஒருவரின் உயிரிழப்பும் குட்டியாண்டியூர் மற்றும் தொடுவாய் ஆகிய இரு மீனவக் கிராமங்களிலும் சோக நிழலை படரச் செய்துள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!
“எதிர்ப்பு தெரிவிச்சு என்ன ஆகப்போகுது?” - கடந்த 50 ஆண்டுகளில் நடக்காதது இப்போ மட்டும் நடந்திடுமா..? மேகதாது விவகாரத்தில் அமைச்சர் ஷாஜகான் அதிரடி பேச்சு!
“எதிர்ப்பு தெரிவிச்சு என்ன ஆகப்போகுது?” - கடந்த 50 ஆண்டுகளில் நடக்காதது இப்போ மட்டும் நடந்திடுமா..? மேகதாது விவகாரத்தில் அமைச்சர் ஷாஜகான் அதிரடி பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Public Grievance Redressal : 30 நாள் தான் டைம்.! பொதுமக்களுக்கு ரிசல்ட் வந்தே ஆகணும்- அரசு அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு
30 நாள் தான் டைம்.! பொதுமக்களுக்கு ரிசல்ட் வந்தே ஆகணும்- அரசு அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Embed widget