மேலும் அறிய

மயிலாடுதுறை: மக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்ட கதவுகள்! மாவட்ட ஆட்சியரகத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் - பின்னணி என்ன?

மயிலாடுதுறையில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்வுக்குப் பின் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற முதல் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 127 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக நடைமுறையில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மீண்டும் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் குறைகளைத் தெரிவிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர்.

குவிந்த மனுக்கள்

மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த அமர்வில், கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரம், அடிப்படை வசதிகள் மற்றும் தனிப்பட்ட குறைகள் குறித்த 127 கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் நேரடியாக வழங்கினர்.

பெறப்பட்ட 127 மனுக்களின் விவரம் 

* முதியோர், மாற்றுத்திறனாளிகள் & கைம்பெண்கள் உதவித்தொகை - 28 

* நில அபகரிப்பு மற்றும் நிலப் பிரச்சனைகள் - 15 

* பல்வேறு புகார்கள் தொடர்பான மனுக்கள் - 15 

* வேலைவாய்ப்பு கோரி விண்ணப்பங்கள் - 14 

* இதர பொதுவான கோரிக்கைகள் - 12 

* இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல் - 10 

* ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோருதல் - 10 

* குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் - 09 

* கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் - 08 

மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக உதவி/உபகரணங்கள் - 06 

என மொத்தம் - 127 மனுக்கள் பெறப்பட்டன.

உடனடி நடவடிக்கைகளுக்கு ஆட்சியர் உத்தரவு

பெறப்பட்ட மனுக்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், மனுதாரர்களின் குறைகளை கனிவுடன் கேட்டறிந்தார். பின்னர், அந்தந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம் (வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல்துறை மற்றும் சமூக நலத்துறை) உடனடியாக ஒப்படைத்தார்.

அப்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஆட்சியர், "பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது காலதாமதமின்றி, சட்ட விதிகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, அடிப்படை வசதிகள் கோரும் மனுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான விவரங்களை சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும்" எனத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை

இன்றைய கூட்டத்தின் சிறப்பம்சமாக, சமூக நீதியைப் பேணும் வகையில் ஒரு முக்கியப் பணி நியமன ஆணையை ஆட்சியர் வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம், அடியாமங்கலம் கிராமத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் வாரிசுதாரருக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அரசு வேலை வழங்க அரசு ஆணை பிறப்பித்திருந்தது.

அதன்படி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் பணியாற்றுவதற்கான கருணை அடிப்படை பணி நியமன ஆணையை, பாதிக்கப்பட்டவரின் வாரிசுதாரரிடம் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் நேரில் வழங்கி ஆறுதல் கூறினார்.

பங்கேற்ற அலுவலர்கள்

இந்தக் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துவடிவேல், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் (பொறுப்பு) மலைமகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் ஹரிதரன் மற்றும் அனைத்து அரசுத் துறைகளின் முதன்மை அலுவலர்கள், துறைச் சார்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீர் கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது, மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசு இயந்திரம் மீண்டும் முழு வீச்சில் மக்கள் நலப் பணிகளில் இறங்கியுள்ளதை இன்றைய மனுக்கள்குவிந்த நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!
“எதிர்ப்பு தெரிவிச்சு என்ன ஆகப்போகுது?” - கடந்த 50 ஆண்டுகளில் நடக்காதது இப்போ மட்டும் நடந்திடுமா..? மேகதாது விவகாரத்தில் அமைச்சர் ஷாஜகான் அதிரடி பேச்சு!
“எதிர்ப்பு தெரிவிச்சு என்ன ஆகப்போகுது?” - கடந்த 50 ஆண்டுகளில் நடக்காதது இப்போ மட்டும் நடந்திடுமா..? மேகதாது விவகாரத்தில் அமைச்சர் ஷாஜகான் அதிரடி பேச்சு!
நெல் சாகுபடிக்கு ஆப்பு வைக்கும் தண்ணீர் பற்றாக்குறை! – தீர்வை நோக்கி நகரும் மயிலாடுதுறை விவசாயிகள்
நெல் சாகுபடிக்கு ஆப்பு வைக்கும் தண்ணீர் பற்றாக்குறை! – தீர்வை நோக்கி நகரும் மயிலாடுதுறை விவசாயிகள்
நாகப்பட்டினத்தில் இல்லம் தேடி வரும் ரேஷன் பொருட்கள்: ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் விநியோகம்!
நாகப்பட்டினத்தில் இல்லம் தேடி வரும் ரேஷன் பொருட்கள்: ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் விநியோகம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
Embed widget