மேலும் அறிய

ஆனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி திருக்கோயில்: 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகம்

தரங்கம்பாடி அருகே புகழ் பெற்ற  ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தரங்கம்பாடி அருகே  ஆனந்தமங்கலத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற  ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழைமை வாய்ந்த அருள்மிகு செங்கமலவல்லி தாயார் சமேத ராஜகோபால சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. 

Eri Katha Ramar Temple: சீதையின் கரம்பிடித்த ராமர்..! ஏரி காத்த ராமர் கோயில் சிறப்புகள் !

ஆனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி திருக்கோயில்: 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகம்

இக்கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும் கொண்டு அந்தக் கரங்களில் எல்லாம் சங்கு, சக்கரம், வில், அம்பு, சூலம் போன்ற ஆயுதங்களை ஏந்தி, முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சித் தருகிறார். இதுபோன்ற ஆஞ்சநேயர் திருமேனி உலகில் இங்கு மட்டுமே உள்ளது. மேலும், ஆஞ்சநேயர் இலங்கையில் உள்ள அரக்கர்களை சம்ஹாரம் செய்து திரும்பி வரும் வழியில் கடலோரம் இயற்கைச் சூழ்ந்த இடத்தில் இறங்கி ஆனந்தமாய் தங்கியிருந்த இடம்தான் இந்தத் தலம் என்றும், அதனாலேயே இது ஆனந்தமங்கலம் என்று அழைக்கப்பட்டு தற்போது மறுவி அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது என்பது தலவரலாறு.

தை மாத கிருத்திகை; கரூர் ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் 

ஆனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி திருக்கோயில்: 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகம்

எனவே இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவன், திருமால், பிரம்மா, ஸ்ரீராமர், இந்திரன், ருத்ரன், கருடாழ்வார் ஆகிய அனைவரையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு மிக்க இவ்வாலயத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. தொடர்ந்து  ஐந்து கால யாகசாலை பூஜை இன்று காலை நிறைவுற்று, பூர்ணாவதி மேற்கொள்ளப்பட்டு, மேளதாள வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்றது. 

Ram Halwa: அயோத்தி பக்தர்களுக்காக 7 ஆயிரம் கிலோ அல்வா.. சிறப்புகள் என்ன தெரியுமா?

ஆனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி திருக்கோயில்: 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகம்

அதனை அடுத்து ராமன், லட்சுமணன், சீதை, திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகள் முன் செல்ல கடமானது ஆலயத்தை சுற்றி வலம் வந்தது கோபுர கலசங்களை அடைந்தது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ‌இதில் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மபுரீஸ்வரர் கோயில் தைப்பூச விழா கோலாகலம்..! நாக வாகனத்தில் எழுந்தருளிய சந்திரசேகரர்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget