Ram Halwa: அயோத்தி பக்தர்களுக்காக 7 ஆயிரம் கிலோ அல்வா.. சிறப்புகள் என்ன தெரியுமா?
Ram Halwa : அயோத்தி வரும் 1.5 லட்சம் பக்தர்களுக்கு வழங்கும் வகையில் 7 ஆயிரம் கிலோ அல்வாவை கின்னஸ் சாதனை படைத்த சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் தயாரிக்கிறார்.
Ram Halwa : அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடக்கிறது. பிரதமர் மோடி நாளை அயோத்தி ராமர் கோயிலை திறந்து வைக்க உள்ளார். உத்தரபிரதேசம் முழுவதும் ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக களைகட்டியுள்ளது.
ராம் அல்வா:
ராமர் கோயில் திறப்பு விழாவை காண நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் அயோத்தி கோயில் நோக்கி படையெடுத்து வருகின்றனர். அயோத்தி வரும் பக்தர்களுக்காக பல இந்து அமைப்புகளும், தன்னார்வலர்களும் பிரசாதம் தயார் செய்து வருகின்றனர்.
அயோத்தி வரும் பக்தர்களுக்காக இந்தியாவின் புகழ்பெற்ற சமையற்கலை நிபுணர் விஷ்ணு மனோகர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக அல்வா தயாரிக்கிறார். இதற்காக அயோத்தியில் அவர் சிறப்பு சமையல் கூடத்தையே ஏற்படுத்தியுள்ளார். இந்த அல்வாவிற்கு ராம் அல்வா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
7 ஆயிரம் கிலோ அல்வா:
இதைத் தயாரிப்பதற்காகவே மிகப்பெரிய கடாய் ஒன்று சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கடாய் மட்டும் சுமார் 1400 கிலோ கிராம் எடை கொண்டது. இந்த கடாயின் மையப்பகுதி மட்டும் இரும்பால் தயாரிக்கப்பட்டுள்ளது. அல்வா நெருப்பில் கருகிவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அல்வா தயாரிப்பதற்காக 900 கிலோ ரவா, 1000 கிலோ கிராம் நெய், 1000 கிலோ கிராம் சுகர், 2 ஆயிரம் லிட்டர் பால், 2500 லிட்டர் தண்ணீர், 300 கிலோ கிராம் உலர் பழங்கள் மற்றும் 75 கிலோ கிராம் ஏலக்காய் தூள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த பொருட்களை கொண்டு சமையற்கலை நிபுணர் மனோகர் 7 ஆயிரம் கிலோ அல்வா தயாரிக்கப்பட உள்ளது. இந்த 7 ஆயிரம் கிலோ அல்வா அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் 1 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த அல்வா முதலில் அயோத்தி ராமருக்கு படைக்கப்பட உள்ளது. அங்கு பூஜைகள் நடைபெற்ற பிறகு, மற்ற பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
கின்னஸ் சாதனையாளர்:
ராம் அல்வா தயாரிக்கப்பட கடாய் நாக்பூரில் இருந்து அயோத்திக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ராம் அல்வாவை தயாரிக்க உள்ள மனோகர் ஏற்கனவே கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தவர். நாக்பூரில் பிறந்த இவர் ஏற்கனவே 75 வகையான அரிசிகளை கொண்டு 75 வகை உணவுகளை வெறும் 285 நிமிடங்களில் செய்து சாதனை படைத்துள்ளார்.
மேலும் படிக்க: Watch Video: பென்சில் நுனியில் அயோத்தி ராமர் சிலை! கின்னஸ் சாதனையாளர் அசத்தல்!
மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?