சுற்றுலா செல்லும் மனைவியை வழியனுப்ப வந்த கணவர் - கணவர் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி...!
மனைவியை ரயில் ஏற்றிவிட வந்த கணவர் ரயில் இருந்து கீழே விழுந்தது படுகாயம் அடைந்த சம்பவம் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில் ரயில் நிலையத்தில் ஏற்பற்ற விபத்தில் கணவன் மனைவி காயமடைந்த சம்பவம் சக ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை ஜங்ஷன்
தமிழ்நாட்டில் கடைசி 38 வது மாவட்டமாக பிரிக்கப்பட்ட மாவட்டம் மயிலாடுதுறை. இங்கு ஏராளமான வணிக நிறுவனங்கள், வணிக வளாகலங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என செயல்பட்டு வருகிறது. மேலும் மயிலாடுதுறை நகருக்கு நாள்தோறும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வதுடன், அவர்கள் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றால் மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு வந்து அதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு ரயிலில் சென்று வருகின்றன.

திருவாரூரை சேர்ந்த தம்பதியர்
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் திருமஞ்சன வீதியைச் சேர்ந்த வயதான தம்பதியர் 74 வயதான பாலசுப்பிரமணியன், இவரது மனைவி 59 வயதான ராணி. ராணி அகமதாபாத்திற்கு மேலும் சில பெண்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளார். அதற்காக இன்று அகமதாபாத் செல்வதற்காக ரயிலில் குளிர்சாதன பெட்டியில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் மனைவி ராணியை ரயில் ஏற்றி விடுவதற்காக அவரது கணவர் பாலசுப்பிரமணியன் தனது மனைவியுடன் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். தொடர்ந்து காலை எட்டரை மணி அளவில் வந்த அகமதாபாத் ரயிலில் ராணி ஏறி உள்ளார். லக்கேஜை கொடுப்பதற்காக அவருடன் ரயிலில் பாலசுப்பிரமணியனு ஏறி உள்ளார்.
iPhone 17: ஐபோன் 17 மாடல் லீக்கானது: இனி கேமரா வடிவமைப்பே மாறுகிறது..புகைப்படம் இதோ

தவறி விழுந்த நபர்
அப்போது ரயில் புறப்பட்ட தொடங்கியுள்ளது. இதனால் பதட்டமடைந்த பாலசுப்பிரமணியன் ரயிலில் இருந்து அவசர அவசரமாக கீழே இறங்க முயன்றுள்ளார். இதில் நிலை தடுமாறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் விழுந்து, பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கட்டைவிரல் சிதைந்தும், தலையிலும், இடுப்பிலும் அடிபட்டு படுகாயம் அடைந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ராணி புறப்பட்ட ரயில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் ராணிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மீட்ட ரயில்வே போலீஸ்
தொடர்ந்து ரயில்வே போலீசார் பாலசுப்பிரமணியனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தொடரும் விபத்துகள்
மேலும் மயிலாடுதுறையில் ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை அறிப்புகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இங்கு இதுபோன்ற விபத்து அவ்வபோது நடைபெறுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த வாரம் இதுபோன்று ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணி ஒருவர் மீது ரயில் மோதிய இரண்டு கால்களும் சிதைந்த நிலையில் மீண்டும் இன்று ஒருவர் விபத்துக்கு உள்ளான சம்பவம் ரயில் பயணிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காமல் நடந்தால் இது போன்ற விபத்துக்களால் பாதிக்கப்படுவது உறுதி என்பதற்கு சான்றாக இச்சம்பவம் அமைந்துள்ளது.






















