மேலும் அறிய

Mayiladuthurai leopard:  நீர்நிலைகளின் வழியாக இடம் பெயரும் சிறுத்தை; 7 இடங்களில் கூண்டுகள் - அலர்ட் ஆகும் வனத்துறை 

மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தையை ஏழாவது நாளாக வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஏழாவது நாளாக மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்

கடந்த 00.04.2024 அன்று மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக வெவ்வேறு புலிகள் காப்பகங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட சிறுத்தை பிடிக்கும் கூண்டுகள் 7 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்க தானியங்கி சென்சார் கேமராகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 


Mayiladuthurai leopard:  நீர்நிலைகளின் வழியாக இடம் பெயரும் சிறுத்தை; 7 இடங்களில் கூண்டுகள் - அலர்ட் ஆகும் வனத்துறை 

நீர்நிலைகளில் வழியாக பயணம் செய்யும் சிறுத்தை 

கடந்த 4 நாட்களாக சிறுத்தையின் நடமாட்டம் குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் சிறுத்தையானது ஆறு, வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர் வழிகளை அதிகமாக பயன்படுத்துவதாக அறியமுடிகிறது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். முக்கியமாக மயிலாடுதுறை சுற்றுப்பகுதியில் உள்ள மஞ்சலாறு, மகிமலையாறு மற்றும் பழைய காவேரி ஆறு ஆகிய ஆறுகளில் சிறுத்தையின் நடமாட்டத்திற்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளது‌. அதனை அடுத்து சிறுத்தையின் நடமாட்டத்தின் அடிப்படையில் மஞ்சலாறு, மறையூர் பகுதியில் 3 கூண்டுகளும் ஆரோக்கியநாத பகுதியல் கூண்டும் மகிமலையாறு பகுதியில் 2 கூண்டுகளும் ரயில்வே ஜங்சன் அருகில் காவேரி ஆற்றுப்பாலத்தின் அருகில் ஒரு கூண்டும் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 


Mayiladuthurai leopard:  நீர்நிலைகளின் வழியாக இடம் பெயரும் சிறுத்தை; 7 இடங்களில் கூண்டுகள் - அலர்ட் ஆகும் வனத்துறை 

சிறுத்தையை தொடர்ந்து இடமாறும் கேமராக்கள்

மேலும், ஏற்கனவே 15 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் 30 தானியங்கி கேமராக்கள் வரவழைக்கப்பட்டு அவற்றை சரியான இடங்களில் பொருத்தும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. சிறுத்தையின் நடமாட்டத்தை அறிய மறையூர், சித்தர்காடு, ஊர்க்குடி போன்ற பல கிராமங்களில் குழுக்களாக சென்று பொதுமக்களிடம் தகவல் குறித்து விபரங்கள் சேகரித்தும் ஆங்காங்கே வீடுகளிலும் கடைகளிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும் வரப்பட்டுள்ளது. 


Mayiladuthurai leopard:  நீர்நிலைகளின் வழியாக இடம் பெயரும் சிறுத்தை; 7 இடங்களில் கூண்டுகள் - அலர்ட் ஆகும் வனத்துறை 

நாய்களின் உதவி

மேலும், உள்ளூரில் உள்ள நாட்டு வகை நாய்கள் வைத்திருப்பவரின் உதவியுடன் அந்த நாட்டுவகை நாய்களை கொண்டு புதர் பகுதிகளிலும், ஓடை பகுதிகளிலும் சிறுத்தை நடமாட்டத்தை அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிறுத்தையின் எச்சம்

இதனிடையில் மயிலாடுதுறை ரயில்வே ஜங்சன் அருகில் உள்ள காவேரி ஆற்று பாலத்தின் அருகில் சிறுத்தையின் எச்சம் கிடைக்கப்பெற்றது. அதனை, ஆய்வு செய்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சிறுத்தை உட்கொண்ட இரை தொடர்பாகவும், சிறுத்தையின் அடையாளம் குறித்தான சோதனைக்காகவும் சென்னை வண்டலூரில் உள்ள உயர் தொழில்நுட்ப வனஉயிரின மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.


Mayiladuthurai leopard:  நீர்நிலைகளின் வழியாக இடம் பெயரும் சிறுத்தை; 7 இடங்களில் கூண்டுகள் - அலர்ட் ஆகும் வனத்துறை 


மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டரில் சிறுத்தை நடமாட்டம்

இந்நிலையில் சிறுத்தை நேற்று மயிலாடுதுறை நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவு பயணித்து குத்தாலம் தாலுக்கா காஞ்சிவாய் கிராமத்தில் சுற்றி திரிந்ததாக அப்பகுதியை சேர்ந்த மாசிலாமணி என்பவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து நேற்று அங்கு முகாமிட்ட வனத்துறையினர் 15 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தியும், ஆற்று ஓரங்களில் கூண்டுகள் அமைத்தும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினார். இந்த சூழலில் இன்று காலை வனத்துறை வந்து பார்த்தபோது  கூண்டுகளில் சிறுத்தை சிக்கவில்லை. மேலும் தானியங்கி கண்காணிப்பு கேமராவை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


Mayiladuthurai leopard:  நீர்நிலைகளின் வழியாக இடம் பெயரும் சிறுத்தை; 7 இடங்களில் கூண்டுகள் - அலர்ட் ஆகும் வனத்துறை 

அதே வேளையில் காஞ்சிவாய் கிராமத்தை அடுத்த பேராவூர் ஊராட்சியில் நாகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் சிறுத்தையை நேற்று இரவு பார்த்ததாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மசினகுடியில் டி23 புலியை பிடிப்பதில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன் மற்றும் காலன் ஆகியோர் காஞ்சிவாய் ஊராட்சியை அடுத்த பேராவூர் ஊராட்சியில் சிறுத்தையின் கால் தடம் தென்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேற்கண்ட தகவல் மற்றும் கடந்த சில தினங்களாக சேகரித்த தகவல்கள் அடிப்படையில் காவேரி, பழைய காவேரி மற்றும் மஞ்சலாறு உட்பட்ட பகுதிகளின் நீர்வழிப் புதர்களிலேயே அச்சிறுத்தை இருக்கலாம் என்று அறியமுடிகிறது. அதற்கேற்றவாறு, கண்காணிப்பு குழுக்கள் தணிக்கை மேற்கொள்வதற்கும்,கூண்டுகளை இடமாற்றம் செய்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் உத்தரவு..! அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் உத்தரவு..! அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்...
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
ஸ்டீயரிங் பிடிக்கும் திருநங்கைகள்.. சுழலும் வாழ்க்கைச் சக்கரம்! - சீர்காழியில் நெகிழ்ச்சி சம்பவம்!
ஸ்டீயரிங் பிடிக்கும் திருநங்கைகள்.. சுழலும் வாழ்க்கைச் சக்கரம்! - சீர்காழியில் நெகிழ்ச்சி சம்பவம்!
"காசியை விட புனிதம்" - ஆனால் சொட்டு நீர் இல்லை... மயிலாடுதுறை துலா கட்டத்தில் சோகமான ஆடி அமாவாசை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Embed widget