மேலும் அறிய

Christmas 2024: தரங்கம்பாடியில் உருவாகும் வரலாறு சிறப்பு மிக்க மொரோவியன் ஸ்டார் பற்றி தெரியுமா உங்களுக்கு...?

இரண்டு நூற்றாண்டுகளை கடந்து மொரோவியன் ஸ்டார்கள் தரங்கம்பாடியில் தயாராகி வருகிறது. 

கிறிஸ்துமஸ் பண்டிகை

நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் முதல் வார ஞாயிற்றுக் கிழமையில் வரும் ‘ஞாயிறு’ என்கிற பண்டிகைதான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் தொடக்கமாகும். அதில் இருந்து புத்தாண்டு தொடக்கம் முடிந்து வரும் முதல் ஞாயிறான மகிமை விளங்கின பண்டிகை என்ற பண்டிகையோடு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நிறைவடையும்.

கிறிஸ்துமஸ் ஸ்டார்கள்

Christmas 2024: தரங்கம்பாடியில் உருவாகும் வரலாறு சிறப்பு மிக்க மொரோவியன் ஸ்டார் பற்றி தெரியுமா உங்களுக்கு...?

கிறிஸ்துமஸ் பண்டிகை வந்துவிட்டாலே வீடுகள் தோறும் வண்ண, வண்ண நட்சத்திரங்களை (ஸ்டார்கள்) கட்டி அதில் மின் விளக்குகளை ஒளிரவிட்டு உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் கொண்டாடுவது வழக்கம். தற்போது மதங்களைக் கடந்து அனைத்து தரப்பு மக்களும் தங்களது வீடுகளில் இதுபோன்று ஸ்டார்களை கட்டி ரசித்து வருகின்றனர். 

மொரோவியன் ஸ்டார்

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பயன்படுத்தும் விதவிதமான ஸ்டார்கள் உலகம் முழுக்க இருந்தாலும், மொரோவியன் ஸ்டார்களுக்கு என தனி மவுசு உள்ளது. ஜெர்மனி நாட்டிலுள்ள மொரோவியன்ஸ் என்கிற பகுதியில் உருவான ஸ்டார் என்பதாலும், அங்கு வசிப்பவர்கள் அறிமுகப்படுத்தியதாலும் அது ‘மொரோவியன் ஸ்டார்’ என அழைக்கப்படுகிறது. 

Christmas 2024: தரங்கம்பாடியில் உருவாகும் வரலாறு சிறப்பு மிக்க மொரோவியன் ஸ்டார் பற்றி தெரியுமா உங்களுக்கு...?

டேனிஷ்காரர்கள்

260 ஆண்டுகளுக்கு முன்பே டேனிஷ்காரர்கள் (டென்மார்க்) கட்டுப்பாட்டில் இருந்தபோது 1760-களில் தரங்கம்பாடியை தலைமையிடமாக கொண்டு, அந்தமான், நிக்கோபார் தீவுகளில் கிறிஸ்தவத்தை பரப்பி வந்தனர். ஜெர்மனி நாட்டின் மொரோவியன் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர்கள் தரங்கம்பாடிக்கு மேற்கே 1.5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சாத்தங்குடி கிராமத்திலுள்ள சாலமன் தோட்டம் என அழைக்கப்படுகிற இடத்தில் தங்கி இருந்து, அங்கு திராட்சை, சாத்துக்குடி போன்ற பழ வகைகளையும், காய்கறிகளையும் பயிரிட்டு வந்துள்ளனர். 

Christmas 2024: தரங்கம்பாடியில் உருவாகும் வரலாறு சிறப்பு மிக்க மொரோவியன் ஸ்டார் பற்றி தெரியுமா உங்களுக்கு...?

இந்தியாவில் அறிமுகமான மொரோவியன் ஸ்டார் 

மேலும், பல்வேறு கைவினைப் பொருட்களை செய்து கலைகளை கற்றுத் தேர்ந்தவர்களாகவும் வாழ்ந்துள்ளனர். அவர்கள் அங்கு தங்கியிருந்த போதுதான், மொரோவியன் ஸ்டார்களை இந்தியாவில் முதன்முறையாக தயாரித்து அறிமுகப்படுத்தி தரங்கம்பாடி, பொறையார், தில்லையாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், தாங்கள் சென்ற ஒவ்வொரு பகுதிகளுக்கும் வழங்கியுள்ளனர்.  

வரலாற்று சான்றுகள்

அது முதல் இந்த மொரோவியன் ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் காலங்களில் தரங்கம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பாரம்பரிய ஆலயங்கள், கட்டிடங்களில் ஒளிர்ந்து வருகிறது. டேனிஷ் ஆட்சிக் காலம் முதல் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகும், கிறிஸ்தவர்கள் அதிகமாய் வசிக்கும் ஊர்களில் பாரம்பரிய மொரோவியன் ஸ்டார்களை தொங்க விட்டிருந்தாலும், அவை தரங்கம்பாடியில்தான் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது, இதற்கு அங்கு வசித்த ஜெர்மனி நாட்டினராலேயே இந்த ஸ்டார்கள் தயாரிக்கப்பட்டு வந்து உள்ளன என்ற வரலாற்று சான்றுகள் நிறைய உள்ளன. 

Christmas 2024: தரங்கம்பாடியில் உருவாகும் வரலாறு சிறப்பு மிக்க மொரோவியன் ஸ்டார் பற்றி தெரியுமா உங்களுக்கு...?

கடந்த 1980-களில் சீகன்பால்க் ஆன்மீக மன்றத்தில் இயக்குநராக பணியாற்றி ஏராளமான ஏழை, எளிய குழந்தைகளுக்கு கல்வி உதவி அளித்துள்ளார் மறைந்த பிஷப் ஜான்சனின் துணைவியாரான ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஈவா மரியா சீபெர்ட் ஜான்சன். இந்நிலையில் தரங்கம்பாடி சீகன்பால்கு ஆன்மீக மன்றத்தில் தோட்ட வேலை செய்து வருகிற சமாதானம் பாக்யராஜ் என்பவர், ஈவா மரியா சீபெர்ட் ஜான்சன் வைத்திருந்த மொரோவிய ஸ்டாரை பார்த்தும், அவர் சொன்ன செய்முறை பயிற்சியின் மூலம் இந்த ஸ்டார் தயாரிப்பில் கற்றுத் தேர்ந்துள்ளார். 

Christmas 2024: தரங்கம்பாடியில் உருவாகும் வரலாறு சிறப்பு மிக்க மொரோவியன் ஸ்டார் பற்றி தெரியுமா உங்களுக்கு...?

சமாதானம் பாக்யராஜ் தம்பதியர் 

43 ஆண்டுகளாக தொய்வின்றி மொரோவியன் ஸ்டார்களை செய்து, விரும்பி கேட்பவர்களுக்கு குறைந்த விலையில் தருகிறார். இவற்றை அதிக நேரம் செலவிட்டு தயாரிப்பதாகவும், உதவிக்கு தனது மனைவி இருப்பதாகவும், அவரும் இந்த ஸ்டார்களை செய்ய கற்றுக் கொண்டுள்ளார் என ஆர்வமுடன் கூறுகிறார் சமாதானம் பாக்யராஜ். மேலும், தன்னிடம் வரும் ஏராளமான இளைஞர்களுக்கு இக்கலையை கற்றுத் தருவதாக கூறுகிறார். 

Christmas 2024: தரங்கம்பாடியில் உருவாகும் வரலாறு சிறப்பு மிக்க மொரோவியன் ஸ்டார் பற்றி தெரியுமா உங்களுக்கு...?

அரசுக்கு கோரிக்கை 

பாரம்பரியமான மொரோவியன் நட்சத்திரங்களை செய்து வரும் சமாதானம் பாக்யராஜ் போன்றவர்களுக்கு கடனுதவி வழங்கி ஊக்குவித்தால், தரங்கம்பாடியின் பெருமை பேசும் மொரோவியன் ஸ்டார்கள் விழாக் காலங்களில் வருமானம் ஈட்டும் தொழிலாக அமையும். பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி வெறும் காகிதத்தாலேயே செய்யப்படும் மொரோவியன் ஸ்டார் உற்பத்தியை ஊக்குவிப்பதோடு, ஜெர்மனி-தரங்கம்பாடி இடையேயான வரலாற்று ரீதியான சுவடுகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

உங்கள் குடும்ப தகவல் பதிவாகிவிட்டதா? மயிலாடுதுறை மக்களுக்கு ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு..!
உங்கள் குடும்ப தகவல் பதிவாகிவிட்டதா? மயிலாடுதுறை மக்களுக்கு ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு..!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? மயிலாடுதுறையில் மாத சம்பளம் ₹35,000-ல் அரசுத் திட்ட வேலை - முழு விவரம்!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? மயிலாடுதுறையில் மாத சம்பளம் ₹35,000-ல் அரசுத் திட்ட வேலை - முழு விவரம்!
ஆழ்வார் காய்கறி பயிரிட்ட பெருந்தோட்ட கிராமத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் விழா - ஆதிகேசவ பெருமாள் அருளை பெற்ற பக்தர்கள்..!
ஆழ்வார் காய்கறி பயிரிட்ட பெருந்தோட்ட கிராமத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் விழா - ஆதிகேசவ பெருமாள் அருளை பெற்ற பக்தர்கள்..!
வானில் வட்டமிட்ட கருடன்... சேத்திரபாலபுரம் பெருமாள் கோயில் பக்தர்கள் பரவசம்..
வானில் வட்டமிட்ட கருடன்... சேத்திரபாலபுரம் பெருமாள் கோயில் பக்தர்கள் பரவசம்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget