மேலும் அறிய

ஆருத்ரா தரிசன விழா.. உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலைக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்..!

மார்கழி மாத திருவாதிரை தினத்தின் போது நடராஜர் நடனக் கோலத்தில் காட்சியளிப்பது ஆருத்ரா தரிசனம்  என்று அழைக்கப்படுகிறது.

மயிலாடுதுறையில் உள்ள கோனேரிராஜபுரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. 

புராண காலத்தில் முனிவர்கள் சிலர் சிவ பெருமானுக்கு எதிராக வேள்வி நடத்தினர். அவர்கள் இல்லங்களுக்கு யாசகம் கேட்பவர் போல சிவ பெருமான் மீது சென்றார். அப்போது முனிவர்கள் புலி, உடுக்கை, நாகம் போன்ற பலவற்றை யாகத்தில் உருவாக்கி, அவற்றை ஏவி விட்டனர். அவற்றை தனது அணிகலன்களாக சிவ பெருமான் ஆக்கிக் கொண்டார். முனிவர்கள் ஏவி விட்ட யானையை மிதித்து பாதாளத்தில் அழுத்தி, ஒரு காலை தூக்கி, தனது விஸ்வரூப தரிசனத்தை காட்டினார்.

இதனைக் கண்டு பிரமித்து போன முனிவர்கள் மனம் திருந்தினர். தங்கள் ஆவணத்தை விட்டு சிவபெருமானிடம் சரணடைந்தனர். இந்த காட்சியை உலக மக்களும் காண வேண்டும் என சிவ பெருமானிடம் வேண்டிக் கொண்டதன் காரணமாக மார்கழி திருவாதிரை நாளில்  ஆருத்ரா தரிசன நிகழ்வு கொண்டாடப்படுகிறது. 

சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை என்ற நிலையில் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாள் அனைத்து சிவாலயங்களிலும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். 

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு மார்கழி மாதத்துக்கான ஆருத்ரா தரிசனம் நிகழ்வு இன்று நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் ஒன்றான ஆகாய தலமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசனம் நிகழ்வு தொடங்கியது. இதேபோல் மற்ற சிவாலயங்களிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. 

இதனிடையே மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோனேரிராஜபுரத்தில் திருநாகேஸ்வரம் ராகு பகவான் சுவாமி கோயிலின் உபகோயிலாக தேகசௌந்தரி அம்பாள் உடனுறை உமாமகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.  இங்கு திருவாதிரையை முன்னிட்டு உலகில் மிக பெரிய வடிவமான புகழ்பெற்ற எட்டரை அடி உயர நடராஜபெருமான் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், உள்ளிட்டவை கொண்டு சோடஷ அபிஷேகம் செய்யப்பட்டு, திராட்சை மாலை, ஆபரணங்கள், ருத்ராட்ச மாலை, புலித்தோல், பட்டாடை அணிவிக்கப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் அதிகாலை முதலே தரிசனம் செய்து வருகின்றனர். ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியை முன்னிட்டு கோயிலை சுற்றி பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Embed widget