கலெக்டரிடம் மனு கொடுத்த ஐயப்ப சுவாமி ; எங்கே? ஏன்?
கானா பாடகி இசைவாணி மற்றும் இயக்குனர் ரஞ்சித் மீது அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் ஐயப்ப சுவாமி வேடம் அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
மயிலாடுதுறையில் ஐயப்ப சுவாமி வேடத்தில் வருகை தந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கானா பாடகி இசைவாணி மற்றும் இயக்குனர் ரஞ்சித் மீது அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
கானா பாடகி இசைவாணி
"ஐ ஆம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தால் என்னப்பா.. பயம்காட்டி அடக்கி வைக்க பழைய காலம் இல்லப்பா.. நான் தாடிக்காரன் பேத்தி.. இப்போ காலம் மாறிப்போச்சி" என்று கானா பாடகி இசைவாணி பாடிய பாடல் சர்ச்சையை ஏற்படுத்தி விவாதமாகி உள்ளது. திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் ‛கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' என்ற இசைக்குழுவில் கானா பாடகியாக இசைவாணி உள்ளார். இவர் ஐயப்பன் குறித்து பாடிய பாடல் தற்போது பெரும் சர்ச்சையாக இருந்து வருகிறது.
உள்ளூரிலேயே சொகுசு கப்பல் சுற்றுலா! வேற stateக்கு போக கூட தேவையில்ல.. இனி ஜாலிதான்!
தொடர்ந்து அளிக்கப்படும் மனுக்கள்
கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் சுவாமி கோயிலுக்கு பெண்கள் செல்ல தடை உள்ளது. இதனை கேள்வி கேட்கும் வகையில் அவர் இந்த பாடலை பாடியிருந்தார். அடிப்படையில் இசைவாணி கிறிஸ்தவர் என்பதாலும், ஐயப்பன் சுவாமி பற்றி அவதூறாக பாடல் பாடி இந்து மதத்தையும், பக்தர்களின் நம்பிக்கையை புண்படுத்தி விட்டதாக தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இசைவாணியை கைது செய்ய வேண்டும் ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர்.
ஐயப்பன் வேடமணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த நபர்
இந்து மத நம்பிக்கையை புண்படுத்திவிட்டதாக அவர் மீது புகார்கள் கொடுக்கப்பட்டு வருவது தொடரும் நிலையில், மயிலாடுதுறையில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் இசைவாணி மீது புகார் மனு இன்று கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஐயப்ப சுவாமியை பற்றி தவறாக சித்தரித்து பாடல் வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஐயப்பன் வேடமடமணிந்த நபர் மனுவுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
இந்து பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை
பின்னர் ஐயப்பன் வேடம் அணிந்த நபருடன் அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே செல்வதற்கு காவல்துறையினர் மறுத்தனர். தொடர்ந்து உள்ளே சென்ற நிர்வாகிகள் இந்துமக்கள் மற்றும் தெய்வங்களை இனி வரும் காலங்களில் இழிவு படுத்தி யாரும் பேசாதவாறு இந்து பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும், வழுவூர் வழிக்கரையான் ஆலயம் ஐயப்ப சுவாமியின் பூர்வீக இடம் என கூறப்படும் நிலையில் புராண கதைகளை ஆராய்ந்து விரைந்த அக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்திட வேண்டும் என வலியுறுத்தி நிர்வாகிகள் ஒன்றிணைந்து மனு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து சென்றனர்.