தேனியின் அரசு பள்ளி மாணவிகள் சார்பாக உலக சிட்டுக்குருவி தினம் அனுசரிப்பு
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 20ம் தேதி உலகம் முழுவதும் சிட்டுக்குருவி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிட்டுக்குருவிகள் மனிதர்களுக்கும் விவசாயத்திற்கும் பெரும் உறுதுணையாக இருக்கின்றன.
பள்ளி மாணவர்களால் கொண்டாடப்பட்ட சிட்டுக்குருவி தினம் :
அரசு பள்ளி மாணவிகள் மற்றும் பசுமை வடுகை அறக்கட்டளை சார்பாக உலக சிட்டுக்குருவி தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் மாணவிகள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த திணை, கம்பு, கேழ்வரகு, நெல் உள்ளிட்ட தானிய வகைகளை பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களில் சிட்டுக்குருவிகளுக்கு உணவு மற்றும் நீர் அருந்தும் வகையில் தொங்கவிடப்பட்ட குடுவையில் உணவு தானியங்களை போட்டு சிட்டுக்குருவிகளை பாதுகாப்போம் என விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
CSK New Captain: முடிவுக்கு வந்த தோனியின் சகாப்தம்; சென்னை அணியின் புதிய கேப்டனான இளம் சிங்கம்!
அலைபேசி கதிர்வீச்சால் குறைந்து வரும் சிட்டுக்குருவி:
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 20ம் தேதி உலகம் முழுவதும் சிட்டுக்குருவி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிட்டுக்குருவிகள் மனிதர்களுக்கும் விவசாயத்திற்கும் பெரும் உறுதுணையாக இருக்கின்றன. ஆனால் சமீபகாலமாக மனிதர்கள் பயன்படுத்தும் அலைபேசியில் ஏற்படும் கதிர்வீச்சுகளால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பசுமை வடுகை அறக்கட்டளையின் சார்பாக உலக சிட்டுக்குருவி தினம் அனுசரிக்கப்பட்டது.
Lok Sabha Election: 20 தொகுதிகளில் பாஜக; கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதி - அண்ணாமலை அறிவிப்பு
சிட்டுக்குருவிக்கு உணவுகள் :
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவ, மாணவிகள் வீடுகளில் இருந்து சிறுதானிய வகைகளான கம்பு, கேழ்வரகு, திணை, மற்றும் நெல் உள்ளிட்ட சிறுதானியங்களை ஒரு கைப்பிடி அளவு கொண்டுவரப்பட்டு அவற்றை ஒன்று சேர்த்து பள்ளி வளாகத்தில் உள்ள மறக்கிலைகளில் உணவு மற்றும் நீர் பருகும் வகையில் குடுவைகள் தொங்கவிடப்பட்டு அவற்றில் சிட்டுக்குருவிகளுக்கு உணவளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.மேலும் சிட்டுக்குருவிகளால் மனிதர்களுக்கு நோயை உருவாக்கும் கொசு, மற்றும் சிறிய வகை பூச்சிகளை அளிப்பதோடு, இல்லாமல் விவசாயத்தில் விவசாய பயிர்களை தாக்கும் பூச்சிகளை அளிப்பதால் சிட்டுக்குருவிகள் விவசாயத்திற்கும், மனிதர்களுக்கும் நன்மை செய்யும் ஒரு பறவையாக ஆக உள்ளது என்பதனை ஒரு பள்ளி மாணவி அருமையாக எடுத்துரைத்தார்.
சிட்டுக்குருவி அழியாமல் இருக்க விழிப்புணர்வு:
மேலும் உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் வீடுகளில் நீர் மற்றும் சிறுதானியங்கள் அருந்தும் வகையில் மொட்டை மாடிகளில், அல்லது வீட்டின் முன் உள்ள மரக்கிலைகளில் அவைகளுக்கு உணவு மற்றும் நீர் அளிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டால் அழிந்து வரும் சிட்டுக்குருவி இனங்களை காப்பாற்ற முடியும் என பள்ளி மாணவ மாணவிகள் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.