மேலும் அறிய
Advertisement
படிப்பதைப் போலவே பெண்கள் வேலைக்குச் செல்வதும் அதிகரிக்க வேண்டும் - நிதியமைச்சர் பி.டி.ஆர் தியாகராஜன்
பெண்கள் கல்வியைத்தாண்டி தொழில்துறையில் தடம் பதிக்க வேண்டும் : நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்பழனிவேல் தியாகராஜன் பேச்சு.
மதுரை மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் தலைமை உரை நிகழ்த்திய நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்..,"ஒரு அரசியல்வாதி என்பது பல இடங்களில் பெருமைக்குரிய ஒரு தலைப்பாக இல்லாமல் அச்சம் உருவாக்குகிறதோ இல்லாவிட்டால் தவறான திசையில் செல்கிறதோ என்ற சூழ்நிலை இன்றைக்கு நாட்டில் இருக்கிறது.
ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும், எங்கள் குடும்பத்தை பொறுத்தவரைக்கும், எங்கள் தலைவரை பொறுத்தவரைக்கும் நாங்கள் அரசியல் செய்வது எல்லாம் ஒரே காரணத்திற்காகத்தான் அதன் அடிப்படை கொள்கை தத்துவம் சுயமரியாதை, சமூக நீதி , எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வாய்ப்பு ,பெண்களுக்கு சம உரிமை இந்த மாதிரி தத்துவங்களை சட்டமாக அதனை திட்டமாக கொண்டு வந்து நாட்டை மாற்றுவதற்காகவே நாங்கள் அரசியல் செய்கிறோம். சமூக நல்லிணக்கத்திற்கு உதாரணமாக எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி இங்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
எந்த ஒரு சமுதாயத்திலும் பெண்களுக்கு எந்த அளவிற்கு கல்வி, சொத்துரிமை ,வேலை வாய்ப்பு கிடைக்கிறதோ அதுதான் அந்த சமுதாயத்தின் எதிர்காலத்தை,பாதையை தீர்மானிக்கும். அந்த ஒரு வேற்றுமையினால் தமிழ்நாடு இந்திய சராசரியை விட பல மடங்கு முன்னேறி இருக்கிறது. ஏனென்றால் 1920 ஆம் ஆண்டு திராவிடக்கட்சிகளின் தந்தையான நீதிக்கட்சி ஆட்சியில் பெண்களுக்கு சட்டரீதியாக வாக்குரிமை அளிக்கப்பட்டது.
அதேபோல் கட்டாயக்கல்வி ஆண்களுக்கும் பெண்களுக்கும் 1920 ல் சட்டம் உருவாக்கப்பட்டது. அதேபோல் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு நம் மாநிலம் இந்த நிலையை அடைந்து இருக்கிறது. அத்தகைய மகளிர் கல்லூரிக்கு சென்று ஊக்கமளிக்க்க வேண்டும் என்பதற்காக இங்கு வருகை தந்தேன். இந்த மாதிரி போட்டிகள் மிக முக்கியமானவை ஏனென்றால் 90 முதல் 95 சதவிகிதம் உங்களது கற்றல் பழக்கம் உள்ளிட்டவை கல்லூரிக்கு உள்ளேயே இருக்கும்" என்றார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், பங்குனி மாத திருக்கல்யாணம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion