மேலும் அறிய

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், பங்குனி மாத திருக்கல்யாணம்

இந்த ஆண்டு திருமண நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம்.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி ,சௌந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக மிகவும் எளிமையாக நடைபெற்ற பங்குனிப் பெருவிழா இந்த ஆண்டு கடந்த மிகவும் விமர்சையாக நடைபெற்று வருகிறது.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், பங்குனி மாத திருக்கல்யாணம்

இந்நிலையில் கடந்த மாசி மாதம் 26ஆம் நாள் 10.03.2022  வியாழக் கிழமை காலை ரிஷப லக்கனத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி பெருவிழா நாள்தோறும் சுவாமி உற்சவம் திருவீதி உலா காலையிலும், மாலையிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவம் திருவீதி உலாவில் சுவாமி கல்யாணபசுபதீஸ்வரர் நந்தி வாகனத்திலும், பூத வாகனத்திலும், திருக்கயிலாய வாகனத்தில், கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஜவகர் பஜார், மாரியம்மன் கோவில் தெரு, 5 ரோடு, வா உ சி தெரு, வஞ்சியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ஆலயம் குடி புகுவார்.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், பங்குனி மாத திருக்கல்யாணம்

அதைத்தொடர்ந்து பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமி திருக்கல்யாண வைபவம் சிறப்பு. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று மாலை அப்பி பாளையத்திலிருந்து சுவாமி கல்யாண வெங்கட்ரமண சுவாமி மற்றும் அலங்காரவல்லி, சவுந்தரநாயகி உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க ஆலயம் வந்தடைந்தனர். அதன்பிறகு மாப்பிள்ளை அழைப்பு, பெண் வீட்டார் அழைப்பு உள்ளிட்ட திருமண நிகழ்ச்சிக்கு முன்பாக நடைபெறும் நிகழ்ச்சிகள் நடைபெற்று, இன்று காலை பத்து முப்பது மணிக்கு மேல் பதினொன்று முப்பது மணிக்குள் ரிஷப லக்னத்தில் ஆலய மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், பங்குனி மாத திருக்கல்யாணம்

திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு ஆலயத்திலிருந்து சுவாமி திருக்கோயிலை வலம் வந்த பிறகு ஆலய மண்டபத்தில் மணக்கோலத்தில் சுவாமியே அமரச் செய்தனர். பின்னர் ஆலயத்தின் தலைமை சிவாச்சாரியார் பிரத்தியேக யாக குண்டங்கள் அமைத்து யாக வேள்வி நடைபெற்ற பிறகு, சுவாமிக்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சிக்கு பிறகு  குறித்த நேரத்தில் திருமண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.  பிறகு சுவாமிக்கு பால், பழம் கொடுக்கும் நிகழ்ச்சியும், மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று மொய் வைக்கும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், பங்குனி மாத திருக்கல்யாணம்

பின்னர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உள்ளிட்ட தெய்வங்களுக்கு தூப தீபங்கள் காட்டி, நெய்வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, கற்பூரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. அதன் பிறகு கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் மஞ்சள் கயிறு உள்ளிட்ட பொருட்களுடன் பிரசாதமும் வழங்கப்பட்டது.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், பங்குனி மாத திருக்கல்யாணம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பங்குனி பெருந்திருவிழா திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் ,திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

தலைப்பு செய்திகள்

மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
Embed widget