தேனி: வைகை அணையிலிருந்து 58 கிராமங்கள் திட்ட கால்வாயில் தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. ஐ.பெரியசாமி அவர்கள் வைகை அணையிலிருந்து 58 கிராமங்கள் திட்ட கால்வாயில் தண்ணீரை திறந்து வைத்தார்.
தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து 58 கிராமங்கள் திட்ட கால்வாயில் தண்ணீரை தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா அவர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, ஆகியோர் முன்னிலையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் மகாராஜன் (ஆண்டிபட்டி) , சரவணக்குமார் (பெரியகுளம்) , ஐயப்பன் (உசிலம்பட்டி) அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தங்கதமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
CM Stalin: "தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம்” - முதலமைச்சர் ஸ்டாலின்!
இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, வைகை அணையிலிருந்து, 58 கிராமங்கள் திட்ட கால்வாய்க்கு 300 மி.க.அடி தண்ணீர் நாளொன்றுக்கு 150 கனஅடி வீதம் அணையின் நீர் வரப்பு மற்றும் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி வட்டம், உசிலம்பட்டி வட்டம் நிலக்கோட்டை வட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 35 கண்மாய்கள் நிரப்பப்படும். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டத்திற்குட்பட்ட 1,912 ஏக்கர் நிலங்களும் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 373 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 2,285 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும். மேலும் 58 கிராம கால்வாய் பகுதி மக்களின் விவசாய நிலங்கள், கால்நடை மற்றும் குடிநீர் தேவைக்காகவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்காகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களை சார்ந்த மக்களின் விவசாயத்திற்காக முல்லைபெரியாறு அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, சண்முகாநதி கால்வாய், 18-ஆம் கால்வாய், பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் கால்வாய் ஆகியவற்றிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நீரை விவசாயப் பெருமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
"கேரள சகோதரர்கள் அன்புக்கு நன்றி" வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பியதற்கு மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
மேலும், விவசாய பெருமக்களின் கோரிக்கையை ஏற்று, கால்வாய்களில் சிமெண்ட் தளம் அமைப்பது குறித்தும், 18-ஆம் கால்வாயிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறப்பது குறித்தும் பொறியாளர்களிடம் உரிய கலந்தாலோசனை செய்து தண்ணீர் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.