மேலும் அறிய

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!

திருக்கோயிலைச் சுற்றியுள்ள பிரகாரங்கள் மற்றும் வீதிகளில் உள்ள பழுதடைந்த சாலைகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும்.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் 2026: முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் சென்று கள  ஆய்வு.

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்
 
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் 2026 பெருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை, மாவட்ட ஆட்சித் தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையாளர் எஸ்.ராஜேந்திரன், மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், ஆகியோர் இன்று (20.08.2026) நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கிய முக்கிய அறிவுரைகள்..," மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா வருகின்ற 06.09.2026 முதல் 02.10.2026 வரை நடைபெறவுள்ளது. 06.09.2026 முதல் 16.09.2026 வரை (ஆவணி 20 முதல் ஆவணி 30 வரை) திருக்குடமுழுக்கு பெருவிழாவிற்கான யாகசாலை பூஜைகள், 16.09.2026 புதன்கிழமை (ஆவணி 30) அன்று பரிவார மூர்த்திகள் மஹாகும்பாபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், 17.09.2026 வியாழக்கிழமை (ஆவணி 31) அன்று காலை 07.40 மணிக்கு மேல் 08.10 மணிக்குள் திருக்குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நன்னீராட்டு பெருவிழா, 18.09.2026 முதல் 02.10.2026 வரை (புரட்டாசி 01 முதல் புரட்டாசி 15 வரை) மண்டல பூஜைகள் நடைபெறவுள்ளது. மேற்படி விழாவினை எவ்வித சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையின்றி பாதுகாப்பான முறையில் நடத்தி முடித்திட ஒவ்வொரு துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
 
பக்தர்கள் வருகை மற்றும் பாதுகாப்பு: பக்தர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கோயிலுக்குள் மற்றும் கோபுரப் பகுதிகளுக்குச் செல்வதற்கான வழிகளை முறைப்படுத்தி, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி தரிசனம் செய்ய ஏதுவாக தடையற்ற குடிநீர் மற்றும் முறையான சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டும். சித்திரை மற்றும் ஆவணி மூல வீதிகளில் கூடுதல் தற்காலிக கட்டணமில்லா காலணி பாதுகாப்பகங்களை அமைக்க வேண்டும். எல்.இ.டி (LED) திரைகள் & பார்க்கிங்: கும்பாபிஷேக நிகழ்வுகளைப் பக்தர்கள் தெளிவாகக் கண்டு தரிசிக்க ஏதுவாகப் போதுமான இடங்களில் LED வண்ணத்திரைகள் அமைக்கப்பட வேண்டும். அத்துடன் கூடுதல் வாகன நிறுத்துமிட (Parking) வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதுகாப்பு கருதி மின்மாற்றிகளைச் (Transformer) சுற்றி பாதுகாப்பு அரண்கள் அமைக்க வேண்டும். பழுதடைந்த மின்விளக்குகளை உடனடியாகச் சரிசெய்வதோடு, தேவையான இடங்களில் புதிய மின்விளக்குகளைப் பொருத்த வேண்டும். ​திருக்கோயிலைச் சுற்றியுள்ள பிரகாரங்கள் மற்றும் வீதிகளில் உள்ள பழுதடைந்த சாலைகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக திருக்கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகளில்  குடிநீர், கழிப்பறை, நடைபாதை, தெருவிளக்குகள், மழைநீர் வடிகால் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்து தேவையான பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், கழிப்பறைகள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், பழுதான தெருவிளக்குகள் மற்றும் நடைபாதைகளை உடனடியாக சீரமைக்கவும், குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும் உத்தரவிட்டார்.
 
உடனடி நடவடிக்கை
 
திருக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் மாநகராட்சியின் மூலம் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகள் சேர்ந்தவுடன் அவற்றை உடனடியாக மாநகராட்சி வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தி அப்பகுதிகளை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றி பாதுகாப்பாகவும், மனநிறைவோடும் தரிசனம் செய்வதை உறுதி செய்யும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளுமாறு தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இக்கள ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர்கள், மேலாளர்கள், கண்காணிப்பாளர்கள் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
மானாமதுரை மண்பாண்ட விநாயகர்: புதிய வடிவங்கள், சுற்றுச்சூழல் காக்கும் சிலைகள்!
மானாமதுரை மண்பாண்ட விநாயகர்: புதிய வடிவங்கள், சுற்றுச்சூழல் காக்கும் சிலைகள்!
varalakshmi vratham 2026: உறவினர்கள், நண்பர்களுக்கு சொல்ல வேண்டிய ஐஸ்வர்யம் தரும் வரலட்சுமி விரதம் வாழ்த்துக்களும், மந்திரங்களும்!
உறவினர்கள், நண்பர்களுக்கு சொல்ல வேண்டிய ஐஸ்வர்யம் தரும் வரலட்சுமி விரதம் வாழ்த்துக்களும், மந்திரங்களும்!
கொடியேற்றம் முதல் கொடியிறக்கம் வரை: வேளாங்கண்ணி பேராலய விழாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! - முழு விவரங்கள்
கொடியேற்றம் முதல் கொடியிறக்கம் வரை: வேளாங்கண்ணி பேராலய விழாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! - முழு விவரங்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget