Urban Local Body Election 2022 | மண்டபம் இலவசம், ஐஸ்பாக்ஸ் இலவசம்.. விநோத வாக்குறுதிகளை கொடுத்த பெண் வேட்பாளர்..
”இல்ல விழாவிற்கு மண்டபம் இலவசம் - இறந்த வீட்டிற்கு உடலை வைக்க ஐஸ் பாக்ஸ் இலவசம்” - விநோத வாக்குறுதியுடன் வாக்கு சேகரிப்பில் மதுரை பெண் வேட்பாளர்.
தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளுடைய பதவிக்காலம் முடிவடைந்தும் நீண்ட காலம் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த சூழலில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுமென தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணிகள் அரசியல் கட்சிகளிடம் இறுதியாகிவிட்ட நிலையில், அந்தந்த கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கத் தொடங்கிவிட்டன.
இந்நிலையில் உசிலம்பட்டியில் பெண் வேட்பாளர் ஒருவர் தனது தேர்தல் அறிவிப்பில் “இல்ல விழாவிற்கு மண்டபம் இலவசம் - இறந்த வீட்டிற்கு உடலை வைக்க ஐஸ் பாக்ஸ் இலவசம்” - என விநோத வாக்குறுதியுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
#Abpnadu | இல்ல விழாவிற்கு மண்டபம் இலவசம் - இறந்த வீட்டிற்கு உடலை வைக்க ஐஸ் பாக்ஸ் இலவசம் - விநோத வாக்குறுதியுடன் வாக்கு சேகரிப்பு. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த 11-வது வார்டு தி.மு.க வேட்பாளர் சகுந்தலா இவ்வாறன அறிவிப்புகளை செய்திதுள்ளார்.@arivalayam | #Abpnadu | pic.twitter.com/sKYnoa9kql
— Arunchinna (@iamarunchinna) February 2, 2022