மேலும் அறிய
Advertisement
750 கிலோ ரேசன் அரிசி கடத்தல்; மதுரையில் இருவர் கைது - உணவு கடத்தல் தடுப்பு போலீசார் அதிரடி
அரிசி கடத்தல் கும்பலின் வாகனம் மற்றும் அரிசியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் திட்டங்களைப் பெறவும், பொதுவிநியோகக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மலிவு விலை அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களைப் பெறவும் ரேஷன் அட்டை முக்கியமானதாகும். இது பல்வேறு இடங்களில் ஆவணமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரசின் சார்பாக வழங்கப்படும் அட்டையாகும். குடிமக்களுக்கான இந்த ரேஷன் அட்டையானது முன்பு பேப்பரில் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஸ்மார்ட் கார்ட் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடும்ப அட்டையில் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர்கள், முகவரி உள்ளிட்ட பல தகவல்களைக் கொண்டிருக்கும். இந்நிலையில் இந்த ரேஷன் அட்டை அடிப்படையில் வழங்கப்படும் ரேஷன் அரிசி வெளியூர்களுக்கு கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
#madurai | மதுரை மாவட்டம் பெருங்குடி பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில் 750 கிலோ ரேசன் அரிசி கடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
— arunchinna (@arunreporter92) August 18, 2023
Further reports to follow - @abpnadu#rice | @MaruthupandiN2 @vetridhaasan @LPRABHAKARANPR3 #abplive pic.twitter.com/45lhZaUsSw
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதை கண்காணிக்கும் பொருட்டு, சென்னை உணவு கடத்தல் பிரிவு தலைவர் வன்னிய பெருமாள் இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி ,மதுரை மண்டல உணவுப்பொருள் தடுப்பு காவல் கண்காணிப்பாளர் விஜய் கார்த்திக் ராஜா தலைமையில் மதுரை மாவட்டம் பெருங்குடி பகுதியில் மதுரை சரக டி எஸ்.பி ஜெகதீசன் மதுரை பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார், எஸ்.ஐ முத்துராஜா மற்றும் போலீசார் தலைமையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது , அந்த வழியாக வந்த (ape load ஆட்டோ ) வாகனத்தை சோதனை செய்த போது 750- கிலோ ரேஷன் அரிசி கடத்தி கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மதுரையை சேர்ந்த செல்வ குமார், சண்முக வேல் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து , வாகனம் மற்றும் அரிசியை பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு வந்து வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக அரசு ஏழை எளிய நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்து வருகிறது. இவற்றை முறைகேடாக கடத்தி கள்ள சந்தையில் விற்று அதிக லாபம் பெறும் நோக்கில் செயல்படுகின்றனர். இவர்கள் பற்றியும் ரேஷன் பொருள் பதுக்குதல் குறித்தும் மதுரை பொதுமக்கள் 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர் ரகசியம் காக்கப்படும் இதற்காக மாநில சிவில் சப்ளை சிஐடி போலீசில் 24 மணி நேரமும் செயல்படும் காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இது சென்னையில் இயங்கும் கூடுதல் டிஜிபி-ன் நேரடி கண்காணிப்பில் செயல்படுகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - CM Stalin: மீனவர்களுக்காக இதுவரை திமுக செய்தது என்ன? - ராமநாதபுரத்தில் பட்டியலை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion