திண்டுக்கல் ஒருவர்.. தேனி இருவர்... கொரோனா உயிரிழப்பு பதிவு!
கடந்த சில தினங்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது. தேனியிலும் இன்று இரண்டு பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தேனி , திண்டுக்கல் இரு மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ்சால் ஏற்படும் உயிரிழப்புகள் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த வாரத்தை பொருத்த வரையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது. கடந்த சில தினங்களாக நோய் தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும்18 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31890ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இன்று மட்டும் 26நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 31047ஆக குறைந்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 613ஆக இருக்கிறது. தற்போது 230பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் உயிரிழப்புகள் ஏதும் இல்லாத நிலையில் நேற்று 5 பேரும் இன்று ஒருவரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
அதே போல் தேனி மாவட்டத்தில் இன்று மட்டும் 26நபர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42698-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இன்று மட்டும் 26 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 41862-ஆக குறைந்துள்ளது. தற்போது வரையில் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 508 ஆக இருக்கிறது. இன்று 328 நபர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் தேனி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேனி மாவட்டத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மற்றும் தேனி இரு மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருவோர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் உயிரிழப்புகள் தொடர் கதையாகி வருகிறது.
மேலும் படிக்க தெரிந்துகொள்ள,
கேரளாவின் சில இடங்களில் பொதுமுடக்கம்: எல்லையோர மாவட்டத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பு





















