மேலும் அறிய
Advertisement
Trains Cancelled: ஜன., பிப்ரவரியில் தென் மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தென் மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
வடக்கு ரயில்வேயில் ரயில் பாதை மேம்பாட்டு பணியால் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் டெல்லி செல்லும் ரயில்கள் ரத்து.
ரயில்களை பாதுகாப்பாக இயக்க, வடக்கு ரயில்வே ஆக்ரா கோட்டத்தில் உள்ள மதுரா ரயில் நிலையம் மற்றும் மதுரா - பல்வால் ரயில் நிலைய பிரிவில் ரயில் பாதை மற்றும் சைகை (Signal) மேம்பாட்டு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தென் மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி ஜனவரி 10, 12, 17, 19, 24, 26, 31 பிப்ரவரி 2 ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641), ஜனவரி 14, 16, 21, 23, 28, 30 பிப்ரவரி 4 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் (12651), ஜனவரி 10, 14, 17, 21, 24, 28, 31 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகர் எக்ஸ்பிரஸ் (12687), ஜனவரி 8,15, 22, 29 ஆகிய நாட்களில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய திருநெல்வேலி - ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா எக்ஸ்பிரஸ் (16787) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கத்தில் ஜனவரி 13, 15, 20, 22, 27, 29, பிப்ரவரி 3, 5 ஆகிய நாட்களில் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12642), ஜனவரி 16, 18, 23, 25, 30 பிப்ரவரி 1, 6 ஆகிய நாட்களில் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - மதுரை எக்ஸ்பிரஸ் (12652), ஜனவரி 15, 19, 22, 26, 29, பிப்ரவரி 2, 5 ஆகிய நாட்களில் சண்டிகரில் இருந்து புறப்பட வேண்டிய சண்டிகர் - மதுரை எக்ஸ்பிரஸ் (12688), ஜனவரி 11, 18, 25, பிப்ரவரி 1 ஆகிய நாட்களில் ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ராவில் இருந்து புறப்பட வேண்டிய ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (16788) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.” என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Karthik Subbaraj : நான் எதிர்பார்க்காததை யானைகள் செய்தன - ஜிகர்தண்டா டபுள் எகஸ் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கானுக்கு எதிராக வட்டச்செயலாளர்கள் போர்க்கொடி..! மீண்டும் வெடிக்கும் போர்..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion