மேலும் அறிய
Thiruparankundram Issue: மதுரையில் 144 தடை உத்தரவு.. திருப்பரங்குன்றம் மலையை சுற்றி 300 போலீஸ் பாதுகாப்பு
Thiruparankundram Temple Issue: படிகட்டு இல்லாமல் மலை மீது ஏறி விடக்கூடாது என்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பேரிக்கார்டுகள் கொண்டு மலையை சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம்
Source : whats app
மதுரையில் 144 தடை உத்தரவு உள்ள நிலையில் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகரில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு
நாளை (4.2.2025) இந்து அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், அதற்கு தென் மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளதால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து உள்ளனர். இதனால் இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் இடையே அசாதாரண சூழல் உருவாக வாய்ப்புள்ளதால் மதுரை மாநகரில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல்துறைய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி, இரண்டு படி பாதைகளிலும் மற்றும் மலை மீது 300-க்கும் மேற்பட்ட காவல்துறைய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் படிக்கட்டுகள் இல்லாமல் வேறு எந்த பாதையிலும் யாரும் ஏறாத வண்ணம் நூற்றுக்கும் மேற்பட்ட பேரி கார்டுகளைக் கொண்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. மலைமீது சென்று வழிபாடு நடத்துவதற்கு இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு அனுமதி உள்ள நிலையில் வருபவர்களின் பெயர் விவரங்கள் உள்ளிட்டவற்றை சோதனை செய்து அதன் பின்னர் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்து அமைப்பினர் நாளை மாலை ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருப்பதால் நாளை கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி
மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் வெளி நபர்கள் பிரவேசிக்காத வகையில் 3-2-2025 காலை 6 பணி முதல் 4-2-2025 இரவு 12 மணி வரை 2 நாட்கள் மட்டும் மதுரை மாநகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் பொது அமைதியை பாதுக்காக்கும் பொருட்டு, மனித வாழ்வு , பொது பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை கருத்தில் கொண்டும் போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் தர்ணாக்கள் போன்றவற்றிற்கு 163 BNSS (144 CrPC) தடை உத்தரவு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - TVK Madurai: விஜய் தலைமையில் மதுரையில் பொதுக்கூட்டம் - வந்தது புதிய அப்பேட்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Praggnanandhaa Vs Gukesh: குகேஷுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரக்ஞானந்தா... சர்வதேச செஸ் தொடரை வென்று அசத்தல்...
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
கல்வி
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion