நாளை மின் தடை: தமிழகத்தின் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்கள் பகுதி உள்ளதா? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
தமிழகத்தில் நாளை 08-12-2025 (திங்கட்கிழமை) எந்தெந்த பகுதிகளில் மின் தடை செய்யப்படும் முழு விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. குறிப்பாக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். அதில் பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சாரமானது நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அதன்படி தமிழகத்தில் நாளை 08-12-2025 (திங்கட்கிழமை) எந்தெந்த பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்பது தொடர்பாக காணலாம்.
கோவையில் மின் தடை - எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர், ஒண்டிப்புதூர் கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி. மன்னம்பாளையம், வலசுபாளையம் மற்றும் அய்யப்பநாயக்கன்பாளையம் பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம்.
தர்மபுரி மின் தடை பகுதிகள் - குமாரபுரி ஸ்பின்னிங் மில், அதியமான்கோட்டை, ஏழகிரி, பாளையம்புதூர், ஹெச்பிசிஎல், பரிகம், மணியத்தள்ளி, வீட்டு வசதி வாரியம், நீதிமன்ற வளாகம், நகர் கூடல்.
ஈரோடு மின்தடை பகுதிகள் - அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம் மற்றும் கே.ஏ.எஸ். தொழில்கள்
பல்லடம் மின் தடை பகுதிகள் - பொன்னிவாடி, வடுகபட்டி, சின்னகம்பட்டி, அக்கரைபாளையம் கரடிவாவி, புளியம்பட்டி.
புதுக்கோட்டை மின்தடை பகுதிகள் - வடுகபட்டி முழுப் பகுதியும்.
உடுமலைப்பேட்டை மின்தடை பகுதிகள் - இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம், தூங்காவி, ராமகவுண்டன்புதூர், மாதரத்தி, போல்ட்ராபட்டி, கே.கே.,புதூர்.
மின் தடை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள்
* மின் தடை அமலுக்கு வரும் முன் மொபைல், பவர் பேங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளவும்.
* மின்சார பம்புகள் இயங்காது என்பதால் குடிநீர் மற்றும் வீட்டு நீரை போதுமான அளவில் சேமித்து வைத்திருக்கவும்.
* மின் விநியோகம் மீண்டும் தொடங்கும்போது சேதம் ஏற்படாமல் இருக்க அனைத்து மின்சாதனங்களையும் அணைத்துவிடவும்.
* மெழுகுவர்த்தி, டார்ச் அல்லது பேட்டரி விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்கவும்.
* மருத்துவ உபகரணங்கள் மற்றும் குளிர்விப்பு தேவைப்படும் மருந்துகளுக்கான மாற்று ஏற்பாடுகளை முன்னதாக செய்து கொள்ளவும்.
* மின் தடை நேரத்தில் லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
* அன்றாட வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, மின்சாரம் திரும்பும் வரை ஒத்துழைப்பு வழங்கவும்.





















