தேனி: வைகை அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது - விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி..!
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை, 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழைந்து பெய்து வருவதால் அணைகளின் நீர் மட்டம் உயரத்தொடங்கியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பாயும் வைகை ஆற்றின் குறுக்கே வைகை அணை அமைந்துள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 71 கன அடி ஆகும். தற்போது அணையின் இருப்பு 53.67 கன அடியாக இருக்கிறது. இந்த சூழலில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வைகை அணைக்கு நீர்வரத்து 1,510 கன அடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது. இந்த சூழலில் வைகை அணையின் முழு கொள்ளளவான 71 அடியில் அணையில் நீர்மட்டம் தற்போது 53.35 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 1,904 கன அடியாக இருப்பதால், பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 969 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்பொழுது அணையில் நீர் இருப்பு 2,511 மில்லியன் கன அடியாக உள்ளது.
மேலும் படிக்க: விடுதி சமையலர் தேர்வு அறிவிப்பை ரத்து செய்தது செல்லாது - மதுரைக்கிளை உயர்நீதிமன்றம்
எனவே வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கியுள்ளதால் வைகை அணை பாசன விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயன்பெற்று வருகின்றனர். இந்த அணையில் இருந்து வெளியேறும் நீரைக் கொண்டு மின் உற்பத்தி திட்டம் ஒன்றும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டமானது தற்போது 127.70 அடியாக அதிகரித்துள்ளது அணைக்கு நீர்வரத்து 1904கன அடியாக இருப்பதால், பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 1655 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்பொழுது அணையில் நீர் இருப்பு 4201 மில்லியன் கன அடியாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்