Theni: கிறிஸ்தவர், இந்துக்கள் இணைந்து கொண்டாடும் கருப்பசாமி கோயில் திருவிழா - தேனியில் மதநல்லிணக்க கொண்டாட்டம்
200 ஆண்டுகளுக்கு மேலான பழமையான இக்கோவிலில் இந்துக்களும் ,கிறிஸ்தவர்களும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இருவரும் இணைந்து சித்திரைத் திருவிழா நடத்துவது வழக்கம்.
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது போடி. போடி சுற்றுவட்டாரத்தில் அனைத்து மதத்தினரும் வசித்து வருகினறனர். போடியில் இந்துக்களும் , கிறிஸ்தவர்கள் இணைத்து கும்பிடும் கருப்பசாமி கோவில் திருவிழா அமைதியாக நடைபெறுவது வழக்கம்.
இந்துக்களும் கிறிஸ்துவர்களும் இணைந்து கொண்டாடிய சித்திரை திருவிழா
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், 18வது பகுதியான சர்ச் தெருவில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் அதிகமாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சிஎஸ்ஐ தேவாலயமும், கருப்பசாமி கோவிலும் எதிர் எதிரே அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதியில் உள்ள கருப்பசாமி கோவிலில் சித்திரை பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். சுமார் 200 ஆண்டுகளுக்கு பழமையான இக்கோவிலில் இந்துக்களும் ,கிறிஸ்தவர்களும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இருவரும் இணைந்து சித்திரைத் திருவிழா நடத்துவது வழக்கம்.
சாட்டையடி திருவிழா
இரண்டு மதத்தவரும் இணைந்து திருவிழா நடத்தினர் . திருவிழாவின் நிகழ்ச்சியாக போடி எல்லை காளியம்மன் கோவிலில் இருந்து காவடி பால்குடம் தீச்சட்டி எடுத்துவரப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலில் செல்வது வாடிக்கையாக உள்ளது . இதனைத் தொடர்ந்து சாட்டையடி திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் நேர்த்தி கடனாக எல்லை காளியம்மன் கோவிலில் இருந்து சாட்டையால் உடலில் அடித்துக் கொண்டு தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். இரண்டு மதத்தினரும் தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
Today Movies in TV, May 12: சச்சின் முதல் கேப்டன் மில்லர் வரை.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
கருப்புசாமி வேடமணிந்து ஆடிவந்த 5 வயது சிறுவன்
இப்பகுதியில் இந்து, கிறிஸ்தவர்களை மத நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விதமாக இத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது சுமார் 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களின் உடலில் சாட்டையால் அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் கருப்பசாமிக்கு இரும்பு சங்கிலியால் கட்டி இழுத்துக் கொண்டு கோவிலுக்கு கொண்டு சென்றனர். விழாவில் சுமார் ஐந்து வயது சிறுவன் கருப்புசாமி வேடமணிந்து சிறப்பாக ஆடிவந்தனர். அனைவரும் சிறுவனை கண்டு மகிழ்ந்தனர்.