50 ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோல் போடப்படும்; தேனியில் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு - வாகன ஓட்டிகள் சிரமம்
தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம் பகுதிகளில் உள்ள சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் சமீப காலமாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம் பகுதிகளில் உள்ள சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் சமீப காலமாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகளிடம், பெட்ரோல் கையிருப்பு குறைவாக இருப்பதால் ரூ.50 அல்லது ரூ.100-க்கு மட்டும் பெட்ரோல் நிரப்பிக்கொள்ளுமாறு அங்குள்ள பணியாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
எல்இடி பல்பு வாங்குவதில் ரூ.1 கோடி ஊழல்: 11 அரசு அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு
இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் குறைவான அளவில் பெட்ரோல் நிரப்பிவிட்டு, அடுத்த பெட்ரோல் விற்பனை நிலையங்களை தேடிச் செல்லும் நிலை உள்ளது. இந்தநிலையில் பெரியகுளம் பகுதியில் உள்ள சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நேற்று முன்தினம் பெட்ரோல் இருப்பு தீர்ந்து விட்டதாக கூறி வாகன ஓட்டிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். தேனி வழியாக கேரளாவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், அவசர பயணமாக வெளியூர் புறப்படும் மக்கள் உள்ளிட்டோர் தங்களின் வாகனங்களுக்கு போதிய அளவில் எரிபொருள் நிரப்ப முடியாமலும், தேவையான எரிபொருள் நிரப்ப ஒன்றுக்கும் மேற்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு செல்லும் நிலைமைக்கும் தள்ளப்பட்டனர்.
TASMAC: டாஸ்மாக்கில் காலி பாட்டில்களை கொடுத்தால் 10 ரூபாய் கிடைக்கும் - எங்கு தெரியுமா..?
தேனி : “ அதிமுகவை ஒற்றத்தலைமையாக ஏற்க வாருங்கள்" ஓபிஎஸ் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
இதுகுறித்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் கூறும்போது, ”ஒரு சில பெட்ரோல், டீசல் விற்பனை நிறுவனங்கள் தட்டுப்பாடு இன்றி விற்பனை நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கி வருகிறது. ஆனால், சில நிறுவனங்கள் கடந்த 2 வார காலமாக விநியோகம் செய்யும் அளவை குறைத்துள்ளது. அதே நேரத்தில் வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது" என்றார். எனவே தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் தட்டுப்பாடு இன்றி பெட்ரோல், டீசல் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும், தட்டுப்பாடு ஏற்படுவதற்கான உண்மையான காரணங்களை கண்டறிந்து தீர்வு காணவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்