மேலும் அறிய

கனிமவள பொருட்களின் விலை ஏற்றம்; டிப்பர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

கனிமவள பொருட்களின் விலை ஏற்றத்தை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்திடவும் விலையை நிர்ணயம் செய்திடவும் வலியுறுத்தி டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் .

தேனி மாவட்டத்தில் கிரசரில் தயாரிக்கும் கனிமவள பொருள்களின் விலை ஏற்றத்தை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்திடவும் விலையை நிர்ணயம் செய்திடவும் வலியுறுத்தி டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விலை உயர்வால் கட்டுமானத்தின் மதிப்பீடு அதிகரிப்பதாகவும் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்படைவதாகவும் தெரிவித்தனர்.

கனிமவள பொருட்களின் விலை ஏற்றம்; டிப்பர் லாரி உரிமையாளர்கள்  காலவரையற்ற வேலை நிறுத்தம்

தமிழக கேரள எல்லையில் தேனி மாவட்டம் அமைந்துள்ளது. தமிழக மற்றும் கேரள பகுதிகளில் கட்டுமான பணிகளுக்கு தேவைப்படும் எம்சான்ட், பிசாண்ட் போன்ற மணலையும் உடைகற்களையும் மாவட்டத்தின் ஏராளமான பகுதிகளில் கிரசர்கள் அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். கிரசர்களில் இருந்து எடுக்கப்படும் கனிமவள பொருட்களை டிப்பர் லாரி மூலம் இரு மாநிலங்களுக்கும் கொண்டு சென்று கட்டுமான பணிகளை செய்து வருவது வழக்கம்.

TVK Vijay Manadu: விட்றா வண்டிய..! தமிழக வெற்றிக் கழக மாநாடு தேதியை அறிவித்தார் விஜய்..! எங்கு, எப்போது?
கனிமவள பொருட்களின் விலை ஏற்றம்; டிப்பர் லாரி உரிமையாளர்கள்  காலவரையற்ற வேலை நிறுத்தம்

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ஜல்லி, எம்சாண்ட் , பிசாண்ட் போன்ற கனிம வளங்களின் விலைகளை திடீரென அதிகப்படியாக உயர்த்தி உள்ளனர். இதன் காரணமாக டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பெரிய அளவில் பாதிப்படைகின்றனர். இதன் காரணமாக இன்று முதல் தேனி மாவட்டத்தில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் இயங்கி வரும் நிலையில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்து டிப்பர் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.புதிதாக அறிவித்துள்ள விலை ஏற்றத்தை  உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை வைத்து இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஈடுபட்டு வரும் நிலையில்,  

Tata Curvv Hyperion Review: டாடா கர்வ்வ் பெட்ரோல் ஹைபீரியன் 1.2 டர்போ மேனுவல் கார்..! எப்படி இருக்கு?
கனிமவள பொருட்களின் விலை ஏற்றம்; டிப்பர் லாரி உரிமையாளர்கள்  காலவரையற்ற வேலை நிறுத்தம்

தேனி மாவட்டம் கண்டமனூர் பகுதியில் உள்ள கிரஷர் ஒன்றிலிருந்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மூலம் சாலை அமைப்பதற்கு பயன்படுத்தக்கூடிய தார் கலவையை ஏற்றுக்கொண்டு கேரளா மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனை கண்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் அசோசியேசன் சார்ந்தவர்கள் இந்த வாகனங்களை உத்தமபாளையம் பகுதியில் தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து அதில் உள்ள ஆவணங்களை பரிசோதனை செய்துள்ளனர்.அந்த ஆவணங்கள் முறையாக இல்லாததால்  உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். 

Breaking News LIVE, 20 Sep : தம்மைக் கடவுள் என்று கருதிக்கொள்வர்; அவர்கள் மருத்துவர்களை அணுக வேண்டும்: வைரமுத்து

இதன் பெயரில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும்  வணிகவரி அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு இந்த வாகனங்களை ஆய்வு செய்யும்படி கூறியுள்ளார். அதன்படி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் வணிகவரி அதிகாரிகள் காவல்துறையினர் இந்த டிப்பர் லாரிகளை தற்போது உரிய ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்ததனர்.ஆவணங்கள் முறையாக இல்லாததால் அந்த டிப்பர் லாரிகளுக்கு  அபராதம் விதித்துள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் கட்டுமான பணிகள் பாதிப்படைந்து வருவது குறிப்பிடத்தக்கது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு
Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு
Lubber Panthu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
Lubber Panthu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
"திருப்பதி லட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம்” திண்டுக்கல்லில்  இருந்து பிரச்சனைக்குரிய நெய் சப்ளை..!
Exclusive:
Exclusive: "எங்கள் Raaj நெய் தரமானதுதான்” திருப்பதி லட்டு செய்ய நெய் அனுப்பிய AR Dairy நிறுவனம் விளக்கம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupati laddu | BEEF, PORK கொழுப்பு..திருப்பதி லட்டு NON-VEG!ஷாக்கில் பக்தர்கள்EPS vs SP Velumani | நான் அடிச்சா தாங்கமாட்ட.. அசராமல் அடிக்கும் எடப்பாடி! SP வேலுமணிக்கு WARNING..Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு
Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு
Lubber Panthu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
Lubber Panthu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
"திருப்பதி லட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம்” திண்டுக்கல்லில்  இருந்து பிரச்சனைக்குரிய நெய் சப்ளை..!
Exclusive:
Exclusive: "எங்கள் Raaj நெய் தரமானதுதான்” திருப்பதி லட்டு செய்ய நெய் அனுப்பிய AR Dairy நிறுவனம் விளக்கம்..!
Breaking News LIVE, 20 Sep : சென்னையில் 100° F வெயில் சுட்டெரிக்கும்!
Breaking News LIVE, 20 Sep : சென்னையில் 100° F வெயில் சுட்டெரிக்கும்!
இதனால்தான் உதயநிதியை ஆட்சியில் அமர்த்தப் பார்க்கிறார் ஸ்டாலின் - கருப்பு முருகானந்தம்
இதனால்தான் உதயநிதியை ஆட்சியில் அமர்த்தப் பார்க்கிறார் ஸ்டாலின் - கருப்பு முருகானந்தம்
BYD eMAX 7 Vs Toyota Innova Hycross: பிஒய்டி இ-மேக்ஸ் 7 Vs டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் - ஈவியா? ஹைப்ரிட் ஆ?
BYD eMAX 7 Vs Toyota Innova Hycross: பிஒய்டி இ-மேக்ஸ் 7 Vs டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் - ஈவியா? ஹைப்ரிட் ஆ?
“சகோதரர் வேலுமணி - இன்னும் 19 அமாவாசைகள்தான்” பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி..!
“சகோதரர் வேலுமணி - இன்னும் 19 அமாவாசைகள்தான்” பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி..!
Embed widget